Sunday, August 21, 2011

போட்டோஷாப் பாடம்...!


 போட்டோ எடிட்டிங் மென்பொருட்களை பயன்படுத்துவது நாம் அனைவருக்கும் இன்றியமையாததாகிவிட்டது, போட்டோஷாப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற எனது நீண்டநாள் ஆசைக்காகவே இப்பதிவு. போட்டோஷாப் / கிம்பில் செலக்டிவ் கலரிங்(எனக்கு பிடித்த எபெட்டுகளில் ஒன்று) செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.

செலக்டிவ் கலரிங் என்பது ஒரு படத்தில் குறிப்பிட்ட இடத்தை மட்டும் உண்மை நிறத்துடனும் மற்ற இடங்களை எல்லாம் கருப்பு வெள்ளையாகவும் மாற்றி அந்த படத்திற்கு மெருகூட்டுவதாகும். இதனை செய்வதற்கு இரண்டு முறைகள் இருக்கின்றன அவை லேயர் மாஸ்க் முறை மற்றும் எரேசர் பயன்படுத்தும் முறையாகும்.

1)லேயர் மாஸ்க் முறை:

படி-1:இதற்கு முதலில் போட்டோஷாப்/அல்லது கிம்பில் உங்களுக்கு தேவையான படத்தை திறந்துகொள்ளுங்கள்.


படி-2:திறந்த பிறகு CTRL+J அழுத்துவதன் மூலம்அதனை டூப்ளிகேட் செய்துகொள்ளவும்.



படி-3:டூப்ளிகேட் செய்த லேயரினை லேயர் பாலட்டில் தேர்வு செய்துகொண்டு IMAGE-->ADJUSTMENTS-->DESATURATE என்பதனை தெரிவு செய்து அந்த லேயரை மட்டும் கருப்பு வெள்ளையாக மாற்றவும்.



படி-4:பிறகு அந்த லேயரில் மேலே படத்தில் ’1’ என்று குறிப்பிட்டுள்ள இடத்தை க்ளிக் செய்து லேய்ர் மாஸ்கினை சேர்க்கவும், படத்தில் ’2’ குறிப்பிட்டுள்ள இடத்தை க்ளிக் செய்து தோன்றும் கலர் பாலட்டில் வெள்ளை நிறத்தை தெரிவு செய்து ஓகே என்பதை க்ளிக் செய்யவும்.



படி-5:இப்போது ஃபோர்கிரவுண்ட் கலரினை(FOREGROUND COLOR) கருப்பாக செலக்ட் செய்து கொண்டு நீங்கள் படத்தில் எந்த இடத்தை உண்மை நிறத்தை காட்ட வேண்டுமோ அந்த இடத்தில் ப்ரஷ்ஷின் மூலம் அந்த இடத்தினை பெயிண்ட் செய்யவும், அந்த இடம் மட்டும் படத்தில் ‘2’ என்ற இடத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பழைய நிறத்தை அடையும் மற்ற இடங்கள் கருப்பு வெள்ளையாக தோற்றமளிக்கும்.



படி-6:இவ்வாறு பெயிண்ட் செய்யும்போது தேவையில்லாத இடங்களில் உங்கள் பிரஷ் பட்டு நிறமாறுதல் படத்தில் ‘2’ என்று குறிப்பிட்டுள்ளவாறு ஏற்பட்டுவிட்டால் பார்கிரவுண்ட் கலரினை வெள்ளையாக மாற்றிக்கொண்டு அந்த இடத்தை பிரஷ் மூலம் பெயிண்ட் செய்யுங்கள் அது கருப்பு வெள்ளையாக மாறிவிடும், இப்போது செலக்டிவ் கலரிங் படம் தயார்.



2):எரேசர் மூலம் செய்யும் முறை:
இதற்கு முந்தைய முறைக்கும் சிறிய வித்தியாசம்தான், இந்த முறையில் நீங்கள் செய்வதற்கு லேயர் மாஸ்க் சேர்ப்பதற்கு முந்தைய படி-3 வரை அப்படியே செய்யவும்.



படி-2:பின்னர் எரேசர் டூலை செலக்ட் செய்துகொண்டு கலரிங் செய்யவேண்டிய இடத்தை மட்டும் அதன் மூலம் அழிக்கவும், இப்படியும் செலக்டிவ் கலரிங் செய்யலாம். ஆனால் இந்த முறையில் தவறாக கலரிங் செய்து விட்ட இடத்தை சரி செய்வது சற்று கடினம், நான் பரிந்துரைப்பது லேயர் மாஸ்க் முறையேயாகும்.

செலக்டிவ் கலரிங்கிற்கு முன்னர்:
 செலக்டிவ் கலரிங்கிற்கு பின்னர்:

இந்த ஒரு சிறிய விஷயத்தை பற்றி எழுதவே எனக்கு மிக அதிக நேரமாகிவிட்டது, எவ்வளவோ பெரிய விஷயங்களையெல்லாம் தங்களின் பொன்னான நேரத்தை செலவழித்து நமக்கு கற்றுத்தரும் போட்டோஷாப் பதிவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன், வளர்க உங்கள் சேவை.
நான் படிக்கும் போட்டோஷாப் பதிவுகள்:


பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க,நிறைகுறைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.


6 comments:

  1. எனது தளத்திற்கு Link கொடுத்ததற்கு மிக்க நன்றி நண்பரே!உங்கள் பதிவும் அருமை.

    ReplyDelete
  2. அழைத்தவுடன் வந்ததற்கு நன்றி ஸ்ரீதர்...

    ReplyDelete
  3. மிக்க நன்றி ! நண்பரே.......

    பிறருடைய கஸ்டத்தை புரிந்துகொள்வதற்காவாவது நாம் ஒரு நாள் அதுபோல் கஸ்டப்பட்டு பார்க்கவேண்டும் என்று சொல்வார்கள்.

    அதற்கு உதாரணம் உங்களின் இந்த போட்டோசாப் பாடம். போட்டோசாப் மென்பொருளை நாம் கற்றுக்கொள்வதே சிறமம். அதை மற்றவருக்கு சொல்லிக்கொடுப்பது அதை விட சிறமம் என்பதை அனுபவித்து சொல்லி இருக்கிறீர்கள்.

    நீங்கள் உருவாக்கிய இந்த பாடமும் சிறப்புடையதாகவே இருக்கிறது.

    இதுபோல் நீங்கள் மேலும் பல பாடங்களை உருவாக்க எனது வாழ்த்துக்கள்.

    நீங்கள் போட்டோசாப் பாடங்களை உருவாக்குவதில் கொஞ்சம் சிரமத்தை குறைக்க (திரையை காப்பி எடுக்க) இந்த கேப்சன் மென்பொருள் உதவும். இந்த லிங்க் மூலம் அதனை டவுண்லோடு செய்து பயன்படுத்துங்கள்.
    http://tamilcomputertips.blogspot.com/2010/04/blog-post_29.html


    - உங்களின் இந்த பதிவுக்கு எனது மனமார்ந்த நன்றி!

    - அன்புடன்: கான்
    http://tamilpctraining.blogspot.com/
    தமிழில் போட்டோசாப் பாடம்

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு கான் அவர்களே, உண்மையில் இன்று நான் தங்களின் ஒவ்வொரு படைப்பிற்கும் தாங்கள் எவ்வளவு உழைத்து இருப்பீர்கள் என்று உணர்ந்தேன்.
    நன்றி தங்களின் உழைப்புக்கும் சேவைக்கும்

    ReplyDelete
  5. பதிவர் வேலனும் எழுதினார் முன்பு!

    ReplyDelete
  6. நான் வேலன் அவர்களின் வலைப்பூ பார்த்ததில்லை இனிமேல் பார்க்கிறேன், வருகைக்கு நன்றி செங்கோவி அண்ணே...

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...