Tuesday, August 9, 2011

பதிவர்களுக்கு தேவையான முக்கிய விஷயங்கள்...!!!

      நாம் நம்முடைய பல பதிவுகளிலும் மற்றும் சைட்பாரிலும் நிறைய வெளித்தளங்களுக்கு இணைப்பு கொடுத்திருப்போம். ஒரு பயனர் வந்தவுடன் சைட்பாரில் இருக்கும் வண்ணமயமான படத்தை பார்த்து அந்த சுட்டிக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.இதனால் நமது பதிவை படிக்காமல் கூட அவர் போகலாம்,இதனை தவிர்க்க நமது தளத்தில் உள்ள சுட்டிகள் வேறு ஒரு புதிய டாப்/விண்டோவில் திறக்குமாறு வைத்துவிடலாம்.

     இதைப்பற்றி ப்ளாக்கர் நண்பன் ஏற்கனவே எழுதியுள்ளார் அவருக்கு நன்றி, ஆனால் அவர் சொன்ன முறையில் நமது தளத்தில் எந்த சுட்டியை க்ளிக் செய்தாலும் அது வேறு ஒரு டாப்/விண்டோவில் திறக்கும். இதனால் நமது தளத்திலேயே பல டாப்கள் திறப்பதால் பயனர்கள் எரிச்சலடையலாம் என்று அவரே கூறியிருந்தார் இதனை தவிர்க்க என்ன செய்யலாம் என்று கூகிளாண்டவரை அணுகிய போது சட்டென வரத்தை அருளிவிட்டார், நானும் விடுவேனா இதை வைத்தே பட்டென ஒரு பதிவை தேற்றிவிட்டேன்(எவ்வளவு மேட்சிங் பண்ண வேண்டியிருக்கு, கண்ணை கட்டுதே)....

1)முதலில் Dashboard => Design => Edit HTML பக்கத்திற்கு செல்லவும்.

2)Download Full Template என்பதில் க்ளிக்கி ஒரு காப்பி எடுத்து வைத்துக்கொள்ளவும், பிழைகள் ஏற்பட்டால் பயன்படும்.

3)   </head>  என்ற கோடினை CTRL+F அழுத்தி கண்டுபிடிக்கவும்.

4)அந்த </head> என்ற வரிக்கு கீழே பின்வரும் கோடிங்கினை பேஸ்ட் செய்யவும்.

<script type="text/javascript"
src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.4.2/jquery.min.js"></script>
 <script type="text/javascript">
$(document).ready(function () {
 // ---- External Links ----------------------------------------------------------------------------------------------------           $("a[href*='http://']:not([href*='"+location.hostname+"']),[href*='https://']:not([href*='"+location.hostname+"'])").attr("target","_blank").attr("title","Opens new window").addClass("external");
});
 </script>

இப்பொழுது மாற்றங்களை சேமிக்கவும்.இப்பொழுது உங்கள் ப்ளாக்கை பாருங்கள்.

இனி உங்கள் தளத்தில் வேறுதளத்திற்கு நீங்கள் இணைப்பு கொடுத்திருந்தால் அந்த சுட்டிகள் மட்டும் வேறு டாபில் திறக்கும், உங்கள் தள சுட்டிகள் அதே டாபில் தான் திறக்கும், அவ்வளவேதான்..

கொசுறு: நேற்று ஒருவரின் வலைப்பூவுக்கு போயிருந்தேன் அவர் ஒரு பிரபல பதிவர் அவர் வலைப்பூவுக்கு மிக அழகான ஒரு படத்தை பின்புலமாக அமைத்திருந்தார், ஆனால் அவரது வலைப்பூ திறப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது, இதற்கு காரணம் அவர் பின்புலமாக வைத்திருந்த படம் அளவில் பெரியது, எனவே தாங்கள் தலைப்பிற்கோ அல்லது மொத்த வலைப்பக்கத்திற்கோ புகைப்படங்களை பின்புலமாக பயன்படுத்தும்பொழுது போட்டோஷாப் அல்லது இன்னபிற மென்பொருட்களின் மூலம் அதன் மெமரி அளவை 150 kb க்கு மிகாமல் குறைத்த பின்பு பயன்படுத்தவும், இது உங்கள் வலைப்பூ மிக விரைவாக திறக்க உதவி புரியும்.

     சிலர் இலவசமாக கிடைக்கிறதே என்று பல மியூசிக்
ப்ளேயர்கள்,கேட்ஜெட்டுகள், விசிட்டர்ஸ் கவுண்டர்கள்,பேஜ்வியூவ் கவுண்டர்கள் மற்றும் பலவற்றை அள்ளி தெளிக்கிறார்கள் உண்மையில் இவற்றால் பயனாளிகள் எரிச்சலடைவதே உண்மை, இதெல்லாம் வைத்தால் உங்களுக்கு அதிக பயனாளிகள் வருவார்கள் என்று நினைத்தால் அது தவறு, எங்கே எளிமையும் வேகமும் இருக்கிறதே அதுவே வெற்றி பெறும், கூகுள் பெற்ற வெற்றியே இதற்கு எடுத்துக்காட்டு, எனவே என்னுடைய கொசுறை மனதில் கொண்டு பயனர்களை கவருங்கள்.இது என்னுடைய தாழ்மையான கருத்து பிழையிருந்தால் மன்னித்து அருளவும்.

MESSAGE:
Umbrella can't stop
the rain,But
it makes us to
stand in rain;
Confidence may not
bring success,But
it gives the power
to face any
challenge in life.












வருகைக்கு நன்றி,பதிவு பிடித்திருந்தால் ஓட்டுபோடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...




23 comments:

  1. பதிவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய அருமையான தகவல்

    ReplyDelete
  2. என்னுடைய தளத்தில் வேலை செய்யவில்லை!!
    "" உள்ள சுட்டிகள் வேறு ஒரு புதிய டாப்/விண்டோவில் திறக்குமாறு வைத்துவிடலாம்.""
    இவ்வாறு செய்துவிட்டுதான் இந்த மாற்றத்தை செய்ய வேண்டுமா ??

    ReplyDelete
  3. @sathis நீங்கள் ஏற்கனவே ப்ளாக்கர் நண்பன் கூறிய முறையை செயல் படுத்தியிர்ந்தால் அதனை நீக்கிவிட்டு இந்த கோடிங்கை சேர்க்கவும் சரியாக வேலை செய்யும்

    ReplyDelete
  4. @farhan வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete
  5. @kanthasamy @மதுரன் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி...

    ReplyDelete
  6. Thank u for d useful info !

    ReplyDelete
  7. உபயோகமான பதிவு, வாழ்த்துக்கள்.
    http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.ஹ்த்ம்ல்
    நம்ம கடை பக்கமும் கொஞ்சம் வந்து போகலாமே!!!!!

    ReplyDelete
  8. @anony thank you sir/madam

    ReplyDelete
  9. ! ஸ்பார்க் கார்த்தி வருகைக்கு நன்றி, உங்க கடைக்கு கெளம்பிட்டேன்

    ReplyDelete
  10. நன்றி நல்ல தகவல்கள்

    ReplyDelete
  11. பயனுள்ள தகவல் நண்பா! என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  12. நன்றி சிவா

    ReplyDelete
  13. வாங்க ப்ளாக்கர் நண்பன், வருகைக்கு நன்றி, உங்கள குறிப்பிடாம ப்ளாக் டிப்ஸ் எழுத முடியுமா?

    ReplyDelete
  14. பயனுள்ள பதிவு. நன்றி

    ReplyDelete
  15. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பொன்மலர்...

    ReplyDelete
  16. பயனுள்ள தகவல் நண்பரே..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  17. நன்றி வேலன்

    ReplyDelete
  18. இங்க நீங்க குடுத்திருக்கற கோடிங்கை copy பண்ண முடியல..

    ReplyDelete
  19. இங்க நீங்க குடுத்திருக்கற கோடிங்கை copy பண்ண முடியல.. // தடங்கலுக்கு மன்னிக்கவும் கிறிஸ்டோபர், நம்ம உழைப்பை காப்பாத்திக்க அப்படித்தான் பண்ண வேண்டியிருக்கு... உங்களுக்கு கோடிங் மின்னஞ்சலில் அனுப்பப்படும், நீங்கள் விரும்பினால் சிறப்பு பரிசாக லத்திகா பட டிவிடியும் அனுப்புகிறோம் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  20. such an wonderful site you own.. Thanks for the info bro. I have done some editings based on your suggestion please take a look and mail me (p.jayachandran22@ymail.com).sorry to say this-> the Twitter bird is so frustrating bro,

    ReplyDelete
  21. நன்றி பாஸ் நானும் பயன்படுத்திக்கிட்டன். ஆனால் ”// ---- External Links ---------------------------------------------------------------------------------------------------- ” இந்த வரியை அழிச்சபிறகுதான் வேலை செய்யுது.

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...