Tuesday, August 23, 2011

விண்டோஸ் 7 மறைந்திருந்த புதிய வசதி

விண்டோஸ் 7 இயங்கு தளம் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம் இதில் எல்லா வசதிகளும் உள்ளன, இதில் நமக்கு தெரியாத புதிய வசதி ஒன்று உள்ளது அதுதான் நாம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் ஒரு தீமை உருவாக்கி அதனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதனை எப்படி செய்வது என்று இப்பதிவில் காணலாம்.

படி-1:


முதலில் உங்கள் டெஸ்க்டாப்பில் ரைட் க்ளிக் செய்து Personalization என்பதை தேர்ந்தெடுங்கள்.

படி-2:


தோன்றும் விண்டோவில் கீழே சென்று அதில் இருக்கும் Desktop Background என்பதை தேர்வு செய்யுங்கள்.

படி-3:
அதில் இருக்கும் Browse என்பதை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்தமான படங்களினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
படி-4:

படங்களை தேர்வு செய்த பிறகு எண்டர் அழுத்துங்கள் உங்கள் தீம் இப்பொழுது உங்களுக்கு இயங்கியிருக்கும், அதே விண்டோவின் கீழ் பகுதியில் Sounds என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு விருப்பமான ஒலிகளையும் நீங்கள் அதில் சேர்த்துக்கொள்ளலாம். (நீங்கள் சேர்க்கும் ஒலி .wav என்ற பார்மட்டில் இருக்கவேண்டும்).

படி-5:

அந்த தீமின் மேல் ரைட் க்ளிக் செய்து Save Theme For Sharing என்பதனை க்ளிக் செய்யவும், தோன்றும் விண்டோவில் சேவ் செய்வதற்கான இடத்தை தெரிவு செய்யவும், அவ்வளவுதான் இனி உங்களின் தீம் கோப்பு தயார் இதை நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம், உங்கள் தளத்தில் பயனர்களுக்காக பதிவேற்றம் செய்யலாம்.


பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


 


5 comments:

 1. நண்பர் வணக்கம் நலமா

  நான் இப்பவும் விண்டோஸ் 7 பதிப்பு இன்ஸடால் செய்து விட்டேன் அதில் நான் யூசர் அக்கவுண்ட் ஆரம்பிக்க ஆசை பட்டு

  செய்தேன் அதில் பாஸ்வேர்ட் கொடுக்க முடியவில்லை


  confirm new password உள்ள கட்டத்தில்

  if your password contains capital letters they must be typed the same way every time you log on என்றும்

  அடுத்தில்

  the password hint will be visible to evcryone who use this computer என்றும் வருகிறது பாஸ்வேர் கொடுத்து கிளிக் செய்தால்


  இப்படி வருகிறது

  user account control panel
  ---------------------------------------

  the passwords you typed do not please the new password in both boxes என்று வருகிறது என்ன செய்ய

  அத்துடன் போல்டரை பாஸ்வேர் கொடுத்து லாக் செய்யமுடியுமா

  நிங்கள் பதில் தந்தால் கம்ப்யூட்டரை பற்றி அதிகம் தெரியதா எனக்கு மிகவும் உதவியாக

  இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  ReplyDelete
 2. 1)if your password contains capital letters they must be typed the same way every time you log on// இந்த எச்சரிக்கையானது நீங்கள் கேப்ஸ்லாக் ஆன் செய்து வைத்து கடவுச்சொல் கொடுப்பதால் வருகிறது, அதாவது நீங்கள் எப்போதும் கடவுச்சொல்லை கேப்ஸ்லாக் ஆன் செய்தபடியே கொடுக்க வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையே இது, இதனை தவிர்க்க கேப்ஸ் லாக் ஆஃப் செய்து விட்டு கடவுச்சொல்லை கொடுக்கவும்.

  2)the password hint will be visible to evcryone who use this computer// இது எப்போதும் காட்டப்படும் வழக்கமான எச்சரிக்கைதான் அதாவது பாஸ்வேர்ட் மறக்காமல் இருக்க தாங்கள் கொடுக்கும் குறிச்சொல்லை தங்கள் கணினியை பயன்படுத்தும் எல்லாராலும் பார்க்க இயலும் எனவே மற்றவர்கள் பாஸ்வேர்டை ஊகிக்க முடியாத அளவுக்கு உங்கள் குறிச்சொல்லை அமைத்துக்கொள்ளுங்கள்...

  3)the passwords you typed do not please the new password in both boxes// இந்த எச்சரிக்கையானது நீங்கள் பாஸ்வேர்டினை அமைக்கும்போது அங்கு இருக்கும் இரண்டு கட்டங்களிலும் ஒரே மாதிரியான பாஸ்வேர்டினை டைப் செய்யவேண்டும், தவறாகவோ மாற்றியோ எண்டர் செய்தால் இந்த எச்சரிக்கை காட்டப்படும், எனவே இரண்டு கட்டங்களிலும் ஒரே மாதிரி பிழையில்லாமல் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யவும்... வருகைக்கு நன்றி நண்பா, இந்த பின்னூட்டதின் நகல் உங்கள் இன்பாக்ஸில் காத்திருக்கும், மீண்டும் வருகை தரவும்.

  ReplyDelete
 3. உங்களுக்கு உண்மையிலே வேறு கிளைகள் இல்லையா...?

  ReplyDelete
 4. இல்லையே ரெவரி ஏன் எங்க கிளையை எங்கயாச்சும் பாத்தீங்களா?

  ReplyDelete
 5. நான் nhm மற்றும் கம்பன் தமிழ் சாப்ட்வேர்களை உபயோக படுத்தி வேல்ட் மற்றும்

  எக்ஸ்சல் இரண்டுயிலும் தமிழ்யில் டைப் செய்து நிறைய பைல் எழுதி வைத்து இருந்தேன்

  ஆனால் விண்டோஸ் xp யில் இருந்து விண்டோஸ் 7 க்கு மாறி பிறகு அதில்

  தமிழ் எழுத்துகள் வரவில்லை Ü¡ùÌ˜í£ மற்றும் Üù¢íÌó¢í£ இந்த இருவித எழுத்துகள் தான் வருகிறது
  கம்பன் சாப்ட்வேரை இன்ஸாடல் செய்தால் அவை கிட்ட தட்ட 97 சதவீதம் ஆகிறது பிறகு முழுமையாக ஆகுவது இல்லை
  தங்கள விளக்கத்திற்கு எதிர்பார்கிறேன் நன்றி வணக்கம் துரைராஜ்

  வாழ்க வளமுடன்

  ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...