Friday, September 30, 2011

விண்டோஸ் 8ன் சிறப்பம்சங்கள்...!!!

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8ன் முதல் சோதனை பதிப்பை சமீபத்தில் வெளியிட்டது நினைவிருக்கலாம். இதனை பலர் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள் நானும் இன்னும் பயன்படுத்தவில்லை, இருந்தாலும் இணையத்தில் கிடைத்த படங்கள் மற்றும் சில விஷயங்களையும் வைத்து விண்டோஸ் 8ன் சிறப்பம்சங்களை பற்றி இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

1)பயனர் இடைமுகம்(User Interface)
இந்த இயங்குதளத்தில் பிரபலமான WP7 Metro பயனர் இடைமுடம் பயன்படுத்தப்படுகிறது.


மேலும் இதில் மற்றொரு முக்கிய விஷயம் இதில் ஸ்டார்ட் மெனுவிற்கு பதிலாக ஸ்டார்ட் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரை முழுவதும் குறுக்கு விசை ஐகான்களால் நிறைந்திருக்கும், நீங்கள் அதில் உள்ள ஐகான்களை நீக்கவோ சேர்க்கவோ மேலும் அவற்றின் அளவை மாற்றவோ முடியும்.


மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பயனர் இடைமுகத்தினால் இது மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்த எளிமையாய் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் இந்த பயனர் இடைமுகம் தொடுதிரை சாதனங்களில் இயங்குவதற்கு மிகவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2)தேடல் வசதி(Search)


மேலும் இந்த இயங்குதளத்தில் கோப்புகளை தேடும் வசதி மிகவும் விரைவாக இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது, விண்டோஸின் முந்தைய பதிப்புகளை போல அல்லாமல் இந்த தேடுதல் முறையில் நீங்கள் ஒரு கோப்பின் பெயர் மட்டுமல்லாமல் அதன் உள்ளே உள்ள ஏதேனும் ஒரு விஷயத்தை கொடுத்தும் தேடலை மேற்கொள்ளலாம். அதாவது ஒரு Ms-Word கோப்பின் உள்ளே சேமிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு வார்த்தையை தேடினால் கூட இந்த கோப்பு காண்பிக்கப்படும்.

3)குறைவான துவக்க நேரம்(Less Start up time)
இதில் கூறப்பட்டுள்ள மற்றொரு வசதியானது அதன் பூட்டிங் நேரம் குறைவானது என்பதுதான், மைக்ரோசாப்ட் 5 விநாடிகளில் ஸ்டார்ட் ஆகி பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று அறிவித்திருந்தது ஆனால் அதைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது, விண்டோஸின் முந்தைய பதிப்புகளை விட இந்த துவக்க நேரம் குறைவானதுதான், மேலும் விண்டோஸ் 7ல் இயங்கிய அனைத்து மென்பொருட்களும் அதைவிட வேகமாக விண்டோஸ் 8ல் இயங்குவதாக கூறுகின்றனர்.

4)மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ப்ளோரர்(windows explorer)
இதில் உள்ள மிக மிக முக்கியமான விஷயம் இதில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007ல் பயன்படுத்தப்பட்டுள்ளதை போன்ற ரிப்பன் மெனு பட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது.


இந்த ரிப்பன் மெனுவானது நீங்கள் செலக்ட் செய்துள்ள கோப்பின் வகையை பொறுத்து தானாக மாறிக்கொள்கிறது, நீங்கள் mp3 கோப்பை செலக்ட் செய்தால் ப்ளே வித் ஆப்ஷனும் மற்ற ஆப்ஷன்களும், நீங்கள் ZIP கோப்பை செலக்ட் செய்தால் ஆப்ஷனும் தானாகவே மாறிக்கொள்கிறது.

5)இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10(IE 10)இந்த இயங்குதளத்தில் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10 பதிப்பு இணைக்கப்பட்டுள்ளது, இதில் CSS3 மற்றும் HTML5னை இயக்கும் திறன் உள்ளது, எனவே ஃப்ளாஷ் இல்லாமலேயே வீடியோக்களை பார்த்தல் மற்றும் பல வேலைகளை செய்யலாம்.

6)மார்க்கெட் ஸ்டோர்(Market)
விண்டோஸ் 8 பதிப்பின் வெளியீட்டுடன் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மென்பொருட்களுக்கு உள்ளதைப் போன்ற மார்க்கெட் ஸ்டோர் ஒன்றினை அறிமுகப்படுத்தும் திட்டமும் மைக்ரோசாப்டிடம் உள்ளதாம், இது இன்னும் முழுமையாக முடிவடையாததால் இப்போது இந்த சோதனை பதிப்பில் இணைக்கப்படவில்லை.

7)லைவ் சின்க்ரோனைஷேசன்(Live sync)
இதில் உள்ள மேலும் ஒரு முக்கிய வசதி நமது டேட்டாக்களை நேரடியாக சின்க்ரனைஸ்(Synchronise) செய்ய இயலும், உங்களின் விண்டோஸ் லைவ் ஐடியை பயன்படுத்தி நீங்கள் உள்நுழைந்தால் உங்கள் கோப்புகள், அமைவுகள் அனைத்தும் சின்க் செய்யப்பட்டு விடும்.


பின்னர் நீங்கள் எந்த கணினியிலும் உங்கள் ஐடியினை பயன்படுத்தி அந்த கோப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் மைக்ரோசாப்டானது கூகுள் க்ரோம் இயங்குதளத்தின் போட்டியை சமாளிக்க ஒரு அடி எடுத்து வைத்துவிட்டது, இந்தியர்களான நாம் இந்த சிங்க் மற்றும் கூகுள் க்ரோம் இயங்குதளத்தை பயன்படுத்தும் அளவிற்கு தேவையான இணைய வேகத்தை இன்னும் அடையவில்லை என்றே கருதுகிறேன், மற்ற நாடுகளுக்கு இந்த வசதி ஒரு அரிய வரப்பிரசாதம்..

இவ்வளவையும் படித்தபிறகு உங்களுக்கு விண்டோஸ் 8 பயன்படுத்தி பார்க்க எண்ணம் வரலாம், சோதனை பதிப்பிற்கான தரவிறக்க சுட்டி இங்கே..நன்றி: சமீபத்தில் எனது ஒரு பதிவில் இரண்டு பதிவர்கள் எதிர்மறைக் கருத்து இட்டு விவாதித்தனர் நானும் விவாதம் செய்தேன், இறுதியில் விவாதம் முடிந்துவிட்டது. ஆனால் அதில் ஒரு பதிவர் எதிர்மறைக் கருத்து அவருக்கு முதலிலேயே தோன்றியதாகவும் ஆனால் அப்போதே எதிர்மறையாக கருத்திட்டால் பதிவு பிரபலம் அடையாமல் போகலாம் என்பதால் கருத்து சொல்லாமலே இருந்ததாகவும், மற்றொரு பதிவர் கருத்து சொன்னதாலேயே அவர் கருத்துக்கு ஆதரவளித்ததாகவும், தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாமென்றும் மின்னஞ்சலில் வருத்தம் தெரிவித்திருந்தார், அவரின் பண்பினையும், மற்றவர்களை காயப்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணத்தினையும் கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன், ஏனெனில் என்னிடம் அத்தகைய பண்பு இல்லை அதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். அவர் யாரென பொதுவில் சொல்லி அவருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை ஆனால் அவரின் அந்த நல்ல குணத்துக்கு அடிபணிகிறேன். நன்றி ”நண்பா”
இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


Thursday, September 15, 2011

உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-1!!!


வணக்கம் நண்பர்களே, நான் இந்த பதிவை எழுத காரணம் இப்பொழுது பலர் தங்கள் முகநூல் கணக்கு திருடப்பட்டதாகவும், தங்கள் ப்ளாக்கர் கணக்கு திருடப்பட்டு வலைப்பூ முடக்கப்பட்டதாகவும் கூறிவருகின்றனர்.. இவையெல்லாம் யாரோ நமக்கு தெரியாதவர்கள் செய்வதில்லை,(http://vigneshms.blogspot.com) நம் கருத்துக்கு மாற்று உடையவர்கள், உங்களின் பழைய நண்பர்கள் இவர்கள்தான் செய்கிறார்கள். வலைப்பூ முடக்கப்பட காரணம் நாம் ஏதாவது ஒரு பதிவில் இட்ட எதிர்மறைக் கருத்தோ இல்லை ஏதாவது பிரச்சனைக்குரிய பதிவினை இடும்போது அதனை பிடிக்காதவர்கள் இவ்வாறுசெய்யலாம்.

நான் பிரபாகரனுக்கு ஒரு கடிதம் என்ற பதிவினை இட்டபொழுது இரண்டு நாட்கள் கழித்து எனது ஜிமெயிலுக்கு ஒரு மெயில் வந்திருந்தது, என் முகநூல் கணக்கை ஹாக் செய்யும் முயற்சியே அது ஆனால் எனது முகநூல் கணக்கு எனது யாஹூ மெயிலை கொண்டு செயல்படுத்தி இருந்தேன் அதனால் உஷாராகி அந்த மெயிலை செக் செய்தபோது faceb00k team (இரண்டு Oவுக்கு பதில் பூஜ்ஜியங்கள்) என்று இருந்தது,இதே மெயில் என் யாஹூ ஐடிக்கு வந்திருந்தால் நான் ஒருவேளை ஏமாந்திருக்கலாம். நாம் ஹாக்கர்களிடமிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் அதைப்பற்றிய அறிவை பெற்றே தீரவேண்டும். எனவே இந்த பதிவின் மூலம் எனக்கு ஹாக்கிங் பற்றி தெரிந்த (http://vigneshms.blogspot.com)அனைத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன், இதில் சில விஷயங்கள் பிழையாயிருக்கலாம் அவ்வாறு இருந்தால் தயங்காமல் கூறுங்கள்.

முதலில் ஹாக்கிங் என்பதில் உள்ள வகைகளை பற்றி பார்ப்போம்
(இதில் உள்ள ஆங்கில் சொற்களை தமிழில் மொழிபெயர்க்க என்னால் இயலவில்லை யாரேனும் மொழிபெயர்த்து பின்னூட்டத்தில் கூறுங்கள்...)

1)Website Hacking-வலைத்தளதில் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த

2)Email Hacking-மின்னஞ்சல் கணக்கினை கைப்பற்றி தவறாக பயன்படுத்த

3)Network Hacking-ஒரு பொதுவான வலையமைப்பை ஊடுருவி குழப்புதல்

4)Password Hacking-கடவுச்சொல்லால் பாதுகாக்கப்ப்ட்ட டேட்டாவினை பார்க்க

5)Online Banking Hacking-நமது பணத்தை இணையம் வழியாக திருட

6)Computer Hacking-மற்றவரின் கணினியில் உள்ள கோப்புகளை பார்க்க. 


இதில் அதிகம் செய்யப்படுவது மின்னஞ்சல் ஹாக்கிங்தான், ஏனெனில் இது எல்லாராலும் செய்யக்கூடிய அளவுக்கு சற்று எளிதானதுதான். இணையத்தில் இதை எப்படி செய்வதென ஏகப்பட்ட தளங்கள் சொல்லிக்கொடுக்கின்றன.
இப்பொழுது ஹாக்கிங் செய்ய(http://vigneshms.blogspot.com) பயன்படுத்தப்ப்டும் வழிமுறைகளை பார்ப்போம்.

1)Phishing
2) Key Loggers
3)Tab Napping
4)Social Engineering

இவையே ஹாக்கிங்கில் தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் முறைகள், நாம் இவை ஒவ்வொன்றை பற்றியும், தடுப்பு முறைகள் பற்றியும் விரிவாக இத்தொடர்பதிவில் காணப்போகிறோம்.

1)PHISHING:
     இந்த முறையானது சற்று கடினமானதுதான் ஆனால் ஸ்கிர்ப்ட் எழுத தெரிந்த வெப் டிசைனர்களுக்கு(http://vigneshms.blogspot.com) இது ஓரிரு நிமிட வேலைதான். நாம் உதாரணத்திற்கு முகநூல் கணக்கை எடுத்துக்கொள்வோம்.
நாம் ஹாக் செய்யவேண்டியவரின் மின்னஞ்சல் முகவரிக்கு முகநூலின் நுழைவுப்பக்கத்தை போன்ற ஒரு பக்கத்தை செய்து அதில் அவர் கொடுக்கும் பயனர் பெயர், கடவுச்சொல் நமது மெயிலுக்கு வந்து சேருமாறு கோடிங் எழுதவேண்டும்..

இதனை செய்ய முகநூலின் நுழைவுப்பக்கத்தின் சோர்ஸ் கோடினை பெற்று அதில் சிறு மாறுதல்களை செய்து அதனை வேறு ஏதாவது இலவச சர்வரில் பதிவேற்றம் செய்யவேண்டும், இப்பொது அந்த சுட்டியினை குறிப்பிட்ட நபரின் மெயிலுக்கு பேஸ்புக்கிலிருந்து வருவதை போன்ற ஒரு மின்னஞ்சலை உருவாக்கி அதிலிருந்து அனுப்ப(http://vigneshms.blogspot.com) வேண்டும் அவர் உள்ளிடும் கடவுச்சொல் உங்களை வந்து சேரும். இந்த முறையில் 90% வெற்றி நிச்சயம்.

பாதுகாப்பு வழிமுறைகள்:
இப்போது இந்த பிஷிங் முறையினால் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்க என்னென்ன வழிமுறைகளை கையாளலாம் என்று பார்க்கலாம்.
 • உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களின் முகவரியை நன்றாக கவனியுங்கள். சிறு எழுத்து மாற்றம்தான் இருக்கும்.
 • எப்போதும் கணக்குகளில் நுழைவதற்கு உங்கள் மெயிலுக்கு வரும் சுட்டிகளை பயன்படுத்தாமல் தனியாக சுட்டிகளை தட்டச்சு செய்து பயன்படுத்துங்கள்.
 • உங்கள் உலவிகளில் கடவுச்சொல்லை நினைவில் நிறுத்தும் வசதி இருக்கும், அதனை செயல்படுத்திக்கொள்ளுங்கள் ஒவ்வொரு முறையும் டைப் செய்யாதீர்கள்(இதில் வேறொரு ஆபத்து உள்ளது அது பற்றி பின்னால் விளக்குகிறேன்).
 • நீங்கள் மட்டுமே உங்கள் கணினியை பயன்படுத்தும் பட்சத்தில் கணக்குகளில் உள்நுழைந்தே இருங்கள்(Keep Me Logged In).
 • ஒவ்வொரு முறையும் லாகின் பக்கங்களில் உள்ள அட்ரஸ்பாரில் https:// இருக்கிறதா என கவனியுங்கள்.
 • உங்கள் முகநூல் கணக்கில்  செக்யூர்டு லாகின் எனேபில் செய்திடுங்கள்.
 • நீங்கள் லாகின் செய்யும் (http://vigneshms.blogspot.com)பக்கத்தில் உள்ள முகவரி சரியானதுதானா என்று சோதித்துக்கொள்ளுங்கள்.
 • உங்கள் மின்னஞ்சல் முகவரியை முகநூல் போன்ற கணக்குகளில் மறைத்தே வையுங்கள், எல்லோருக்கும் தெரியும்படி வைக்க வேண்டாம்.
 • அடிக்கடி கடவுச்சொல்லை மாற்றிக்கொண்டே இருங்கள்.
மேற்சொன்ன வழிமுறைகளே இந்த முறையிலிருந்து நம்மை காப்பாற்ற வழிவகை செய்யும், வேறு பாதுகாப்பு முறைகள் இருந்தால் அதையும் குறிப்பிடுங்கள், கீலாகர்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இந்த கீலாகர்ஸ் பற்றிய பதிவை படியுங்கள், மற்ற முறைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.


டிஸ்கி: நான் நெருப்பு நரி பற்றி எழுதிய இரண்டு பதிவுகளையும் யாரும் கண்டுக்கவேயில்லை,அது யாருக்கும் பயன்படும் விதத்தில் இல்லையோ என தோன்றுகிறது, நீங்கள் அந்த பதிவுகளை படித்துவிட்டு கூறப்போகும் கருத்துகளை வைத்தே நெருப்புநரி பற்றி மேலும் எழுதலாமா இல்லையா என தீர்மானிக்க போகிறேன், அந்த பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே,தயவு செய்து உங்கள் கருத்துக்களை கூறவும்.
இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...Tuesday, September 13, 2011

நெருப்புநரி ஜாலங்கள்-2!

நெருப்புநரி கொண்டுள்ள ஏராளமான வசதிகளைப் பற்றி ஆயிரம் பதிவுகள் எழுதினாலும் விவரிக்க இயலாது, அந்த வகையில் இன்று ஒரு நெருப்பு நரி உலவியின் ஒரு அமைப்பை குறித்து பார்ப்போம்..

நாம் பல நேரங்களில் பல டாப்களை திறந்து வைத்துக்கொண்டு  இணையத்தில் உலவிக்கொண்டிருப்போம், ஒரு டாபிலிருந்து மற்றொரு டாபிற்கு தாவுகையில் தவறுதலாக அந்த டாபின் க்ளோஸ் பட்டனில் க்ளிக் செய்துவிடுவோம், அந்த டாப் மூடிவிடும், அதில் திறந்திருந்த பக்கத்தை மீண்டும் மற்றொரு டாபில் திறக்கவேண்டும். இதற்கு பதிலாக அந்த டாப்களில் உள்ள க்ளோஸ் பட்டன்களை நீக்கிவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கலாம்.

க்ளோஸ் பட்டனை நீக்கிவிட்டால் டாபினை எப்படி மூடுவது என்று கேட்கிறீர்களா? எந்த டாபினை க்ளோஸ் செய்யவேண்டுமோ அந்த டாபின் மீது உங்கள் மௌசின் நடுபட்டனால் அழுத்தினால் அந்த டாப் மட்டும் மூடப்பட்டுவிடும் எனவே க்ளாஸ் பட்டன் அவசியம் இல்லை.

இப்போது க்ளோஸ் பட்டனை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.

முதலில் உங்கள் உலவியின் அட்ரஸ்பாரில் about:config என்று டைப் செய்து எண்டரை தட்டுங்கள்.

இப்பொழுது ஒரு எச்சரிக்கை செய்தி வரும் அதில் I'll be careful என்பதை க்ளிக் செய்யுங்கள்.

இப்போது உங்களின் திரையில் ஒரு விண்டோவ் தோன்றியிருக்கும், அதில் உள்ள சர்ச் பாக்ஸில் browser.tabs.closeButtons என்று டைப் செய்து எண்டர் கொடுங்கள்.


இப்போது தோன்றும் இரண்டு முடிவுகளில் முதலாவதாக உள்ள browser.tabs.closebutton என்பதை இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது integer என்ற ஒரு சிறிய பெட்டி இருக்கும், அதில் தானமைவாக 1 வைக்கப்பட்டிருக்கும், க்ளோஸ் பட்டனை உங்கள் விருப்பத்திற்கு மாற்றிவைக்க பின்வரும் எண்களை அந்த கட்டத்திற்குள் கொடுத்து எண்டரை தட்டுங்கள்.

0-ஆக்டிவ் டாபில் மட்டும் க்ளோஸ் பட்டனை தெரியவைக்க.


1-அனைத்து டாப்களிலும் க்ளோஸ் பட்டனை தெரியவைக்க


2-எந்த டாபிலும் க்ளோஸ் பட்டனே இல்லாமல் செய்ய


3-ஆக்டிவ் டாபிற்கான க்ளோஸ் பட்டனை அந்த டாப் பட்டையின் இறுதியில் தெரியவைக்க...

 அவ்வளவுதான்..


டிஸ்கி-1: எனது வலைப்பூவிற்கான பேஸ்புக் பக்கத்தை துவங்கியுள்ளேன், தயவு செய்து அதனை லைக் செய்யவும்.சைட்பாரில் இருக்கிறது லைக் பாக்ஸ் இருந்தாலும் முகவரிஇங்கே:பேஸ்புக் பக்கம்


தொடர்புடைய பதிவுகள்:

நெருப்பு நரி ஜாலங்கள-1

நெருப்பு நரியை தங்கள் இஷ்டம்போல் ஆட்டிவைக்க!!


ஜோக் மாதிரி:
Life insurance: A contract that keeps you poor all your life so that you can die rich ;-) 
Marriage:It is an agreement in which a man looses his bachelors degree and a women gains her masters.
Dictionary: A place where success comes before work
Smile: A curve dat can set a lot of thngs straight.
Doctor: A person who kills ur ills by pills, n kills U by bills. ;-Pஇணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


Sunday, September 11, 2011

உங்கள் கணினி ஆணா, பெண்ணா?

உங்கள் கணினி ஆண் கணினியா இல்லை பெண் கணினியா என்பதை கண்டறிய பின்வரும் வழிமுறையினை பின்பற்றவும்...
படி-1: முதலில் நோட்பாடினை ஓப்பன் செய்யவும்.

படி-2: அதில் CreateObject("SAPI.SpVoice").Speak"Hello" என்று டைப் செய்யவும்..

படி-3: அதனை computer_gender.vbs  என்ற பெயரில் சேமிக்கவும்.

படி-4: இப்பொழுது நோட்பேடினை க்ளோஸ் செய்துவிட்டு சேவ் செய்த பைலினை ஓப்பன் செய்யவும்..

அது ஹலோ என என்ன குரலில் சொல்கிறதோ அதுவே உங்கள் கணினியின் பாலினம்... என் கணினி ஆம்பளை... :-(


ஜோக்:
நன்றி:முகநூல்
இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


உங்கள் தளத்துக்கான சிறந்த ஹோஸ்டிங்கினை தேர்ந்தெடுப்பது எப்படி?

நாம் ஒரு இணையதளத்தை துவங்கினால் ஒரு நல்ல ஹோஸ்டிங் வழங்கியினை தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது, இவ்வாறு நல்ல ஹோஸ்டிங்கினை தேர்ந்தெடுப்பதன் மூலம் வருங்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். இப்பொழுது நிறைய நிறுவனங்கள் கட்டற்ற அலைவரிசை, மற்றும் அதிக இணைப்புக்கான இடங்களை தருவதாக வாக்குறுதி தருகின்றன, ஆனால் நீங்கள் அந்த ஹோஸ்டிங்கினை தேர்ந்தெடுத்து உங்கள் தளத்திற்கு ஓரளவிற்கு நல்ல டிராஃபிக் வர ஆரம்பித்தவுடன் அவை உங்கள் ஹோஸ்டிங் ப்ளானை மேம்படுத்த சொல்லி கேட்கும், காரணம் கேட்டால் இவ்வளவு டிராஃபிக்கினை இந்த திட்டம் சப்போர்ட் செய்யாது, SO PLEASE UPGRADE என்பார்கள்.நமக்கும் வேறு வழியில்லை நாம் மேலும் பணம் செலவு செய்து நமது ப்ளானை அப்கிரேட் செய்துதான் ஆகவேண்டும்.

வெப் ஹோஸ்டிங் வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் மூன்று வகையான ஹோஸ்டிங்கினை வழங்குகின்றன.
 • Shared Hosting
 • Dedicated Server Hosting
 • Virtual Dedicated Server or Virtual Private Server
Shared Hosting: 
இந்த முறையானது புதிதாக தொடங்கப்படும் சிறிய தளங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும், இதில் ஒரே சர்வர் பல தளங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும், கனெக்‌ஷன்களும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும். இதில் சிறந்த ஹோஸ்டிங் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

Dedicated Server Hosting:
இந்த முறையில் உங்களுக்கென்று ஒரு தனி சர்வர் செயல்படும், இந்த முறையானது ஸ்டிரீமிங் தளங்கள் மற்றும் படங்களை பகிரும் தளங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த முறையே மிகவும் சிறந்த ஹோஸ்டிங்கினை தரும்..

Virtual Dedicated Server:
இந்த முறையானது மேலே சொன்ன இரண்டு முறைகளையும் கலந்த முறையாகும், இதில் ஒரே சர்வரில் பல தளங்கள் இயங்கும் ஆனால் ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனி இணைப்புகள் மற்றும் பிரைவசி கொடுக்கப்பட்டிருக்கும்.

இதில் மேலும் இரண்டு முறைகள் உள்ளது அவையாவன,
 • Windows Hosting
 • Linux Hosting 
Windows Web Hosting:
இந்த முறையை நீங்கள் பயன்படுத்தினால் கிடைக்கும் மிகப்பெரிய பயன் என்னவென்றால் இந்த முறையில் நீங்கள் மைக்ரோசாஃப்ட் வெப் டெவலப்பிங் மென்பொருட்களையும் ஸ்கிர்ப்டுகளையும் பயன்படுத்தலாம்.
உதாரணத்திற்கு,
 1. Active Server Pages(ASP)
 2. Virtual Basic Scripts(VB Script)
 3. MS Index Server
Linux Web Hosting:
இந்த முறையானது விண்டோஸ் ஹோஸ்டிங்கினை விட மலிவானதும் சிறந்ததுமாகும், இது விண்டோஸ் ஹோஸ்டிங்கினை விட வேகமானதாகவும், கிராஷிங் இல்லாத நிலைப்புத்தன்மை அதிகம் உடையதாகவும் இருக்கும். ஆனால் இதில் நாம் மைக்ரோசாப்ட் மென்பொருட்களை பயன்படுத்தமுடியாது, கூகிள் சர்வர்களில் லினக்ஸ் வெப் ஹோஸ்டிங் முறையே பயன்படுத்தப்படுகிறது.

எனவே உங்கள் தளத்திற்கு சிறந்த ஹோஸ்டிங்கினை தேர்ந்தெடுக்க மேற்சொன்னவற்றை பரிசீலித்த பின் உங்கள் ஹோஸ்டினை தேர்ந்தெடுக்கவும்.


ஜோக்: 
மிஸ்டர்.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம்.
மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான்.

அம்மா சொன்னாள்.."கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. 

மிஸ்டர்.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்.."குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..!

திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்.."என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்..
இருவரில் யார் சொல்வது சரி..?

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் குரங்குப் பரம்பரை..!ஹாஹாஹா


இந்த தளத்திற்கு 10,000 விசிட்டர்கள் வந்துள்ளனர், அலெக்ஸா ரேங்க் 4,44,566.. இதுவரை என் பதிவுகளை படித்த நண்பர்களுக்கும் எனக்கு பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கும், இத்தளத்தை பின் தொடரும் 55 நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

 

இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


Wednesday, September 7, 2011

நெருப்பு நரி ஜாலங்கள்..!!!

நெருப்புநரி உலவியைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,அமைப்புகளை மாற்றுவதன் மூலம் நெருப்பு நரியினை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அந்த வகையில் இன்று நெருப்புநரி பயனர்களுக்கு தேவையான ஒரு விஷயத்தை பார்ப்போம்...

 உலவி மினிமைஸ் செய்யப்பட்டிருக்கும்போது ராம்(RAM) பயன்பாட்டினை குறைக்க:
என்னதான் நெருப்புநரி மிக அதிக வசதிகளை கொண்டிருந்தாலும் அது அதிக அளவில் மெமரியினை பயன்படுத்துகிறது என்பது மறுக்கமுடியாத  உண்மை, எனவே நாம் நெருப்பு நரியினை திறந்துவைத்துக்கொண்டு வேறு புரோகிராம்களை திறந்தால் அவை மிகவும் மெதுவாக இயங்கும் அல்லது கணினிஹாங் ஆகி நின்று கூட போகலாம், இதனை தவிர்க்க நெருப்பு நரி மினிமைஸ் செய்யப்படும்பொழுது ராம் பயன்பாட்டு அளவை குறைக்கலாம்... இதனை செய்ய பின்வரும் முறையை பின்பற்றவும்.

1)உங்கள் அட்ரஸ் பாரில் about:config என்று டைப் செய்து எண்டர் தட்டவும், ஒரு எச்சரிக்கை செய்தி காட்டப்படும் அதில் Yes,I'll be careful. என்பதை க்ளிக் செய்யுங்கள்.


2)இப்பொழுது தோன்றும் விண்டோவில் ஏதேனும் ஒரு வெற்று இடத்தில் ரைட் க்ளிக் செய்திடவும், அதில் New-->Boolean என்பதை செலக்ட் செய்யுங்கள்.

3)இப்பொழுது தோன்றும் விண்டோவில் config.trim_on_minimiz என்று பெயரிடவும், அதனை True என்று செட் செய்திடுங்கள்.
4)இப்பொழுது உங்கள் உலவியை மறுதுவக்கம் செய்யுங்கள்... இனி உங்கள் உலவி மினிமைஸ் செய்யப்பட்டிருந்தால் ராம் அதிகம் பயன்படுத்தாது எனவே உங்கள் கணினி வேகமாக இயங்கும்...

நறுக் ட்வீட்ஸ்: 

vinothtimes vinothkumar
சுப்ரமணிய சுவாமி இவன அவுத்தும் பாத்தாச்சி அடிச்சும் பாத்தாச்சி இன்னும் என்ன தான் பண்ணலாம்?
bharathiee பாரத்...பாரதி...
எஸ்ஜே சூர்யா ரசிகர் மன்ற தலைவர் மர்ம சாவு// #க‌டைசி 2 வார்த்தையை விட‌ முத‌ல் 4 வார்த்தை அதிக‌ வேத‌னையை த‌ருகிற‌து.

ipokkiri pokkiri
அம்மா பேசாமல் புதிய சட்டமன்ற கட்டிடத்தை 'நில அபகரிப்பு சிறப்பு சிறைச்சாலை' ஆக மாற்றலாமே..!

thoatta ஆல்தோட்டபூபதி
ஹாரன் அடித்து கொல்லவும், அடிக்காமல் வந்து கொல்லவும் தமிழர்களால் தான் முடியும்.!!!

CrazyGanesh 3 G
சரக்கை பற்றியும் பெண்களை பற்றியும் எவ்வளவு ட்வீட்டினாலும் சலிக்கவே மாட்டுது..

bharathiee பாரத்...பாரதி...
காதல்வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை. நாணக்குடை நீ விரித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை...இணையத் தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


Sunday, September 4, 2011

பேஸ்புக் ட்ரிக் உங்கள் நண்பர்களை வாய்பிளக்க வைக்க...

வணக்கம் நண்பர்களே...முகநூலில் நமது நண்பர்கள் சிலர் ப்ளாக்பெரியிலிருந்தும் ஐபோனிலிருந்தும் ஸ்டேட்ஸ் போடுவதை பார்த்திருக்கிறோம், அவ்வாறு அவர்கள் ஸ்டேட்ஸ் போடும்பொழுது கீழே ஐஃபோன் வழியாக போஸ்ட் செய்யப்பட்டது என்ற செய்தியும் காட்டப்படும், நமக்கும் அதுபோல ஸ்டேடஸ் போடவேண்டும் என்ற ஆவல் இருக்கலாம், ஆனால் ஐஃபோனோ, ப்ளாக் பெர்ரியோ என்னை போன்ற ஏழைப்பதிவர்கள் வாங்கும் விலையில் இல்லை... 

ஆனால் நாம் ஒருசில முகநூல் அப்ளிகேஷன்கள் மூலமாக இதே போன்ற ஸ்டேடஸ் மெசேஜ்களை பகிரலாம்...
உதாரணத்திற்கு கீழேவரும் படத்தை பாருங்கள், என்னிடம் ஐஃபோன் இல்லை ஆனால் ஸ்டேடஸ் ஐஃபோனிலிருந்து...
இதேபோல நீங்கள் மற்ற வித்தியாசமான டிவைஸ்களிலிருந்து உங்கள் ஸ்டேடஸ் செய்தியினை போஸ்ட் செய்ய பின் வரும் அப்ளிகேஷன் லிங்குகளை க்ளிக் செய்திடவும்...Related Posts Plugin for WordPress, Blogger...