Sunday, June 19, 2011

உஷார்!!! நூதன பெட்ரோல் திருட்டு...

நேற்று மதியம் ஒரு பெட்ரோல் பங்கில் சென்று இரண்டு லிட்டர் பெட்ரோல் போடச் சொன்னேன், அவரும் நல்லாதான் போட்டாரு, மீட்டர் ஓடிட்டே இருக்கு ஆன டேங்க்ல  பெட்ரோல் விழுற சத்தமே கேக்கல, என்னடா சத்தமே கேக்கலையேனு அந்த பையன்கிட்ட கொஞ்சம் அந்த பைப்ப மேல தூக்கி போடுங்கனு சொன்னேன், அவரு சொன்னாரு மேல தூக்குனா பெட்ரோல் ஆவியாயிடும்னு சொன்னாரு, இந்த விஷயம் எங்களுக்கும் தெரியும் தூக்குங்கனு அந்த பைப்ப மேல தூக்கி பாத்தா அந்த பைப்ல இருந்து பெட்ரோல் ஒரு துளி கூட வரல ”வெறும் காத்துதேன் வருது” ஆனால் பெட்ரோல் மீட்டர் ஓடிட்டே இருக்கு, வந்திச்சு பாருங்க வெறி அவன் சட்டைய பிடிச்சுகிட்டு நான் போட்ட சத்தத்துல அங்க ஒரு பெரிய கூட்டமே கூடிடுச்சு, எனக்கு முன்னாடி பெட்ரோல் போட்ட ஒரு 5,6 பேரு அவங்களும் டேங்க் தொறந்து பாத்தா அவங்களுக்கும் இதேதான் பண்ணிருக்கான், அப்புறம் என்ன அங்க உள்ள கேஷியருக்கு தர்ம அடி கெடச்சது,அங்க இருந்த ஒருத்தர் போலீஸ்கிட்ட போவோம்னு சொல்லிட்டுருந்தாரு ஆனால் எனக்கு அவசர வேலை இருந்ததால நான் அந்த இடத்துல இருந்து கெளம்பிட்டேன், அத பார்த்ததுல இருந்து மனசுக்குள்ள வடிவேல் டயலாக் கேட்டுகிட்டே இருக்கு,”எப்புடியெல்லாம் டெவலப் ஆயி போயிகிட்டு இருக்கானுங்க பாருய்ய இவனுங்க.”

நீங்க இனிமேல் அந்த பைப்ப மேல தூக்கி பிடிச்சு பெட்ரோல் போட சொல்லுங்க, 100 மிலி ஆவியாகுதுனு நாம பாத்தா அவனுங்க பெட்ரோலே போடாம காசு புடுங்குறானுங்க, உங்களுக்கு தெரிஞ்ச வேற பெட்ரோல் திருட்டு வழிமுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க, எல்லாருக்கும் தெரியட்டும்.


Wednesday, June 15, 2011

விண்டோஸ் 7ல் மறைந்துள்ள தீம்களை அன்லாக் செய்ய!!!

விண்டோஸ் 7 மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டுள்ள ஒரு சிறந்த இயங்குதளமாகும்(லினக்ஸ் பயனாளிகள் சண்டைக்கு வந்துடாதீங்க!!!), விண்டோஸ் 7 ல் தீம்கள் மிக அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளன, விண்டோஸ் 7ன் தோற்றமும் அதன் சிறப்புக்கு ஒரு காரணம்.

நாம் இந்த இயங்குதளத்தை நிறுவுகையில் நமது வட்டாரம் மற்றும் மொழியை தேர்வு செய்திருப்போம், நாம் தேர்வு செய்யப்பட்ட வட்டாரம்(நாடு) மற்றும் மொழிக்கேற்ப நமக்கான தீம்கள் காட்டப்படும், உதாரணத்திற்கு நீங்கள் ஆங்கிலத்தை மொழியாக தேர்வு செய்தால் உங்களுக்கு அமெரிக்கா தீம் காட்டப்பட்டு மற்ற ஆங்கில நாடுகளின் தீம்கள் மறைக்கப்படும்,(ஆஸ்திரேலியா,etc).

ஆனால் நாம் இதைப்போன்ற மறைக்கப்பட்ட தீம்களை பயன்படுத்தலாம் அதற்கான வழிமுறைகளை காண்போம்

படி-1: உங்கள் கணினியில் Control Panel-->Appearance and Personalization-->Folder Options என்ற இடத்திற்கு செல்லுங்கள்.

படி-2: அதில் View என்ற Tabன் கீழ் உள்ள Hide Protected Operating System Files(Recommended) என்பதை Unselect செய்திடுங்கள், இப்பொழுது தோன்றும் விண்டோவில் Yes  என்பதை கிளிக் செய்திடுங்கள்.

படி-3: இப்பொழுது My Computer-->Local Disk(C:)-->Windows-->Globalization-->MCT என்ற போல்டருக்குள் செல்லுங்கள், அதில் ஐந்து போல்டர்கள் இருக்கும், அந்த ஐந்து போல்டருக்குள்ளும் மூன்று சப்-போல்டர்கள் இருக்கும்.


படி-4:அதில் Theme என்ற போல்டருக்குள் ஒவ்வொரு தீம் பைல் இருக்கும் அதனை அப்ளை செய்தால் உங்களுக்கு புதிடாக ஐந்து தீம்கள் அன்லாக் ஆகியிருக்கும். அவ்வளவேதான்.

படி-5:இப்பொழுது Peronalization ஐ திறந்து பார்த்தால் புதிய தீம் அன்லாக் ஆகியிருப்பதைக் காணலாம், இதே போல் ஐந்து தீம்களையும் அப்ளை செய்யவும்.


Sunday, June 12, 2011

இந்திய ரூபாய் குறியீட்டை டைப் செய்வது எப்படி?

நமது இந்திய அரசாங்கம் சமீபத்தில் இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டை
’`’ அறிமுகப்படுத்தியது, ஆனால் அதனை நாம் கணினிகளில் உபயோகிப்பதற்கான வழிமுறைகள் மிகவும் குறைவு, இப்பொழுது நாம் அதனை எவ்வாறு கோப்புகளிலும் வலைத்தளங்களிலும் டைப் செய்வது என்று காண்போம்.

இதனை செய்வதற்கு உங்கள் கோப்புகளில் ஒரு முறையையும் வலைத்தளங்களில் வேறு வழியையும் பின்பற்ற வேண்டும்.

வழி-1: ஃபொராடியன் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஒரு புது எழுத்துருவினைக் கொண்டு நாம் நமது டாக்குமெண்டுகளில் இந்த குறியீட்டினை உபயோகிக்கலாம், இந்த எழுத்திருவினை தரவிறக்க இங்கே செல்லவும் Download Rupee Foradian.

இதனை தரவிறக்கி நிறுவிய பிறகு(Installation) உங்கள் word processing apllication(note pad, ms word etc.)ஐ திறந்துகொண்டு அதில் Rupee foradian எழுத்துருவை செலக்ட் செய்து கொள்ளவும்.

பின் உங்கள் விசைப்பலகையில் இந்த பட்டனைத் தட்டவும் ’ ~ ’.இப்பொழுது உங்கள் கோப்பில் ரூபாய்க்கான குறியீடு வந்திருக்கும்.
(NOTE:நீங்கள் ஷிப்ட் ஆல்ட் விசைகள் எதையும் அழுத்த தேவையில்லை)

நீங்கள் இதையே காப்பி செய்து வலைத்தளங்களிலும் பயன்படுத்தலாம். இந்த குறியீட்டிற்கான ஜாவாஸ்கிரிப்ட் இருந்தாலும் அதனை இன்னும் சோதித்துப் பார்க்காததால் அதனை இன்னொரு பதிவில் எழுதுகிறேன். 

பிடித்திருந்தால் தமிழ்மணம் ஓட்டுப் போடுங்க, மற்ற திரட்டிகளோட ஓட்டுப்பட்டைய இணைக்கிறதுல சிறிய தொழில்நுட்ப கோளாறு இருக்கு,Our Engineers are sincerly working on it. 
எனக்கு ஒரு சந்தேகம் நம்ம அரசாங்கம் அறிமுகப்படுத்துன இந்த குறியீடு உங்களுக்கு கையில எழுதுறதுக்கு இல்ல கணினில எழுதுறதுக்கு இலகுவா இருக்கா?


Thursday, June 9, 2011

ஹாக்கிங் மற்றும் கீலாகர்ஸ் வழிமுறைகள்!!!


கீ லாகர்ஸ் என்பவை நாம் தட்டும் விசைகளை ஒரு டெக்ஸ்ட்(.txt) பைலாக சேமித்து இணையத்தின் மூலமாக அதை நிறுவிய நபருக்கு அனுப்பவோ அல்லது அதை அவர் திறந்து பார்க்கும்வரை சேமித்து வைக்கவோ பயன்படுகிறது, ஹாக்கிங்கில் இவையே இரண்டாவது இடத்தில் உப்யோகிக்கபடுகிறது. இந்த கீ லாகரிலிருந்து நம் தகவல்களை பாதுகாத்துக் கொள்வொதற்கான சில வழிமுறைகளை இங்கு காண்போம்.

 
 1. உங்கள் firewall ஐ எனேபில் செய்திடுங்கள்:
  Firewall மூலம் கீ லாகர்ஸை தடுக்க முடியாது ஆனால் கீ லாகர்ஸ் உங்களுக்கு தெரியாமல் உங்கள் இணையத்தின் மூலம் தகவல்களை அனுப்புவதை தடுக்க முடியும்.


   
 2. நல்ல வைரஸ் எதிர்ப்பான்(ANTI VIRUS) மென்பொருளை பயன்படுத்துங்கள்:
  நல்ல வைரஸ் எதிர்ப்பானை மட்டுமே பயன்படுத்துங்கள், CRACK செய்யப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்துவதை தவிருங்கள். முடிந்தவரை டோரண்டிலிருந்து மென்பொருள் தரவிறக்கி பயன்படுத்துவதை தவிர்க்கவும், ஏனென்றால் TORRENT தான் ஹாக்கர்களின் சொர்க்கபுரியாக திகழ்கிறது.


   
 3. முடிந்தால் ஒரு ANTI SPYWARE மென்பொருளையும் பயன்படுத்தலாம். இவை கீ லாகர்ஸ் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் இவை எச்சரிக்கை செய்யும்.


  உங்கள் கணினியில் KEYLOGGER நிறுவப்பட்டிருக்குமா என நீங்கள் சந்தேகித்தால் உங்கள் தகவலை பாதுகாக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.


   
 4. வீட்டிலும் பொது இடங்களிலும் உங்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களை டைப் செய்ய உங்கள் கணினியின் கீ போர்டை பயன்படுத்தாமல் ஆன் ஸ்கிரீன் கீ போர்டை(on screen keyboard) பயன்படுத்தவும், விண்டோசில் அதனை ஒப்பன் செய்ய osr என run கம்மாண்டில் டைப் செய்யவும்.

   
 5. எல்லா கணினிகளிலும் உங்கள் கடவுச்சொல்லை டைப் செய்யுமுன் தேவையற்ற 2-4 எழுத்துக்களை டைப் செய்து பின்னர் அதனை மௌசால் செலக்ட் செய்து கொண்டு பின்னர் உங்கள் கடவுச்சொல்லை டைப் செய்யவும், இதனால் உங்கள் கீலாகரில் தவறான கடவுச்சொல்லே சேமிக்கப்படும்.

   
 6. கீ லாகர்ஸ் எப்போதும் பின்புலத்தில் உங்களுக்கு தெரியாமல் இயங்கிக்கொண்டிருக்கும், எனவே டாஸ்க் மேனஜரை(TASK MANAGER) செக் செய்து சந்தேகப்படும்படியான ப்ராசஸ்களை(process) எண்ட் செய்துவிடவும்.


  மேலே குறிப்பிட்ட அனைத்தும் உங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் உபயோகமான குறிப்புகளாக இருக்குமென நம்புகிறேன், மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,நன்றி...


Wednesday, June 8, 2011

நெருப்பு நரி உலவியை தங்கள் இஷ்டம்போல் ஆட்டிவைக்க!!!

இன்றைய நிலைமையில் நெருப்பு நரி உலவி மிக அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு உலவியாகும், இங்கே உங்களுக்காக சில் நுணுக்கங்கள், இவற்றை செயல்படுத்துவதால் உங்கள் உலவி எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று உறுதியளிக்கிறேன்.

இந்த ட்ரிக்குகளை செய்ய கீழே உள்ள நிரல்களை உங்கள் உலவியின் அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்து எண்டர் பட்டனைத் தட்டவும்.

1)உங்கள் உலவியை pop up window போல திரையில் ஏதேனும் ஒரு இடத்தில் வரவைக்க:

chrome://global/content/alerts/alert.xul

2) நெருப்பு நரியின் ஒருTABக்குள் இன்னொரு உலவியை திறக்க,அதாவது நெருப்பு நரிக்குள் இன்னொரு நெருப்பு நரி திறக்கப்பட:

chrome://browser/content/browser.xul

3)உங்கள் உலவியின் செட்டிங்ஸ்(Options) விண்டோவை ஒரு TABல் திறக்க:

chrome://browser/content/preferences/preferences.xul

4)புக்மார்க் மேனேஜரை ஒரு TABல் திறக்க:

chrome://browser/content/bookmarks/bookmarksPanel.xul

5)ஹிஸ்டரி விண்டோவை ஒரு TABல் திறக்க:

chrome://browser/content/history/history-panel.xul

6)Cookies windowஐ ஒரு TABல் திறக்க:

chrome://browser/content/preferences/cookies.xul

7)About Firefox விண்டோவை ஒரு புது TABல் திறக்க:

chrome://browser/content/aboutDialog.xul

பிறகென்ன எப்பவும் போல கலக்கல் தான்! கலக்குங்க...
Tuesday, June 7, 2011

மற்றவர்கள் முன் கூகுளில் கலக்க!!!

இன்று தேடியெந்திரங்களில் முதலிடத்தில் இருப்பது கூகிள் மட்டுமே, தினம் ஒரு தேடியெந்திரம் வந்தாலும் அவை கூகுளுக்கு முன்னர் தாக்குபிடிக்க முடியவில்லை, ஆனால் நாம் பல சமயங்களில் தேடலில் ஈடுபடும்போது தேவையற்ற பல முடிவுகளை தந்து நமக்கு எரிச்சலை ஏற்படுத்துவதும் உண்டு.இதனை தவிர்க்க நாம் தேடலின் அடிப்படையையும் சில எளிய வழிமுறைகளையும் பார்ப்போம்,

1)கூகுள் வழக்கமாக நிறுத்தற்குறிகளையும் (,.) குறியீடுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை, நீங்கள் குறியீடுகளை இட்டுத் தேடினாலும் அதனைத் தவிர்த்தே தேடி முடிவுகளை காண்பிக்கும்.(இதில் சில விதிவிலக்குகள் உண்டு, அதாவது நீங்கள் $ குறியை உபயோகப்படுத்தினால் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், அதாவது nikhon 400 மற்றும் nikhon $400 ஆகிய இரண்டுக்கும் தேடல் முடிவுகள் வேறுபடும், அதே போல் c++, c# ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.)

2)நீங்கள் enge sellum intha paathai என டைப் செய்து தேடினால் அது paathai engae sellum இதற்கான முடிவுகளையும் சேர்த்தே காட்டும்,இதைத் தவிர்க்க நமது வார்த்தையை ஒரு (” ”) quote போட்டுத் தேடிப்பாருங்கள் அதே வரிசையில் உள்ள முடிவுகளை மட்டுமே காட்டும். எ.கா: “engeyum kaathal".

3) நீங்கள் ஒரு குறிப்பிட்ட தளத்தில் உள்ள முடிவுகளை மட்டுமே பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் site:www.abcd.com/keyword இவ்வாறு டைப் செய்து தேடினால் அந்த தளத்திலிருந்து மட்டுமே முடிவுகள் காட்டப்படும், எ.கா:site:www.brothersoft.com/screen saver, இது அத்தளத்திலுள்ள ஸ்கிரீன்சேவருக்கான முடிவுகளைக் காட்டும்.

4)ஒரு வார்த்தைக்கு முன்னால் ஒரு மைனஸ் குறியிட்டு நடுவில் ஒரு இடைவெளி விட்டால் அது அந்த வார்த்தையை தவிர்த்துவிட்டு மற்ற முடிவுகளைத் தரும், எ.கா: anti-virus என டைப் செய்தால் அது சரியான முடிவுகளைக் காட்டும், ஆனால் anti- virus என டைப் செய்தால் அது மைனஸ் குறிக்கு பிறகு உள்ள வார்த்தையை தவிர்த்துவிட்டு antiக்கான முடிவுகளை மட்டுமே காட்டும்.

5) நீங்கள் இரு குறிப்பிட்ட சொற்றொடரை(sentence) பற்றித் தேடும்போது நடுவில் உள்ள வார்த்தையை மறந்துவிட்டால், அந்த வார்த்தைக்கு பதிலாக ’*’ குறியினை இட்டுத் தேடவும் முடிவுகள் மிக நெருக்கமாக அமையும்,
எ.கா: statue * of cocaine என்பது statue progress of cocaine என்பதற்கான முடிவுகளைத் தரலாம்.

6)ஒரு வார்த்தைக்கான தேடலை நீங்கள் செய்யும்போது கூகுள் அந்த வார்த்தையின் பொருளையும் அறிந்து அதற்கான தேடல் முடிவுகளையும் சேர்த்தே காண்பிக்கும், இதனை தவிர்க்க அந்த வார்த்தைக்கு முன்னர் ’+’
குறியினை சேர்க்கவும். நீங்கள் childcare என்று தேடினால் அது child care என்ற முடிவுகளையே காண்பிக்கும், இதைத் தவிர்க்க  +child care என்று டைப் செய்து தேடவும்.

இவற்றை பயன்படுத்தினாலே உங்களுக்கான முடிவுகள் முதல் பக்கத்திலேயே கிடைத்துவிடும், கலக்குங்க!!!

நன்றி:google


Sunday, June 5, 2011

மனம் சுருங்கிய மனிதர்கள்!!!
இது என்னுடைய அனுபவத்தில் உண்ர்ந்ததை எழுதும் ஒரு பதிவு, அதாவது நேற்று பேருந்தில் படியில் பயணம் செய்துகொண்டிருந்தேன் ஒரு நிறுத்தத்தில் ஒரு காலை இழந்த ஒரு ஆண் ஏறினார், அவருக்கு யாராவது இடம் கொடுப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்தாரோ இல்லையோ நான் எதிர்பார்த்தேன், ஆனால் அவர் ஏறி இரண்டு நிறுத்த்ங்களைக் கடந்தும் யாரும் எழுந்து தனது இருக்கையை தர முன்வரவில்லை, இப்பொழுது பேருந்தில் மேலும் பலர் ஏறிக்கொள்ள கூட்ட நெரிசலில் அவரால் நிற்கவே முடியவில்லை, என்னால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை எனது நண்பனை எழுந்துகொள்ள சொல்லிவிட்டு அந்த இடத்தை அவருக்கு கொடுக்க சொல்லலாம் என எண்ணி அவனை எழுந்துகொள்ள சொன்னேன். அவன் எழுந்து அந்த இருக்கை காலியானதும் அவர் அங்கு வருவதற்குள் இரண்டு பொதுஜனங்கள் முட்டிமோதிக் கொண்டு அந்த இருக்கையில் ஒரு பொதுஜனம் அமர்ந்துவிட்டது, அந்த பொதுஜனத்திடம் போய் அந்த இருக்கையை அவருக்கு கொடுஙகள் என்றால் அவர் சண்டைக்கு வந்துவிட்டார், இதைப்பார்த்த அந்த ஊனமுற்ற நண்பர் மனம் நொந்து தனக்கு இருக்கையே வேண்டாம் என்று கூறிவிட்டார். பிறகு இதைப்பற்றி நடத்துனரிடம் கூறி ஊனமுற்றோர் இருக்கையை அவருக்காக காலி செய்து தந்தோம் நானும் என் நண்பனும்…


 


 

இதை வீட்டிற்கு வந்து நினைத்துப் பார்க்கையில் என் மனம் மிகவும் வருந்தியது, முன்பெல்லாம் பெருநகரங்களில் மட்டுமே நான் கேள்விப்பட்ட இந்த குறுகிய மனப்பான்மை மற்றும் சுயநலம் ஆகிய இரு குணங்களை நான் வசிக்கும் கிராமத்தில் கண்டதை கிரகித்துக்கொள்ள என்னால் இயலவில்லை..


 

இதைப் படிப்பவர்களில் பலர் நினைக்கலாம் இவன் மட்டும் ஒழுங்கா என்று, நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள், நான் எப்படி என்று எனக்கு தெரியும், இதைப் படிக்கும் பத்துபேர்களில் ஒருவர் இதன்பிறகு ஒரு ஊனமுற்ற நண்பருக்கு தன் இருக்கையை தந்தால் அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சி, முடிந்தால் இதை உங்கள் வலையிலும் மறுபதிவு செய்யுங்கள் இன்னொருவரும் மனம் மாறினால் நலம்…


 

நண்பர்களே குறுகிய மனப்பான்மையை அனைவரும் கைவிடவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம், யாரையும் குறிப்பிட்டோ காயப்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல

.

(பின்குறிப்பு:இது Microsoft office OneNote மூலம் எழுதப்பட்டு நேரடியாக அதிலிருந்தே பதிவிடப்பட்டது, நீங்களும் Onenote உபயோகித்து பாருங்கள்… யாருக்காவது தேவை என்றால் அதில் எப்படி பதிவிடுவது என்பதை விளக்குகிறேன், பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.)


Related Posts Plugin for WordPress, Blogger...