Sunday, August 7, 2011

கூகிள்+ குறுக்கு விசைகள்- பகுதி 2

கூகிளால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் கூகிள்+ இதில் உபயோகிக்க கூடிய குறுக்கு விசைகள் பற்றி நாம் முன்னரே ஒரு பதிவில் பார்த்தோம், அதில் விடுபட்ட புதிய குறுக்கு விசைகளை பற்றி இப்பதிவில் காண்போம்.


  • இரண்டு * குறிகளுக்கு நடுவில் ஒரு வார்த்தையை டைப் செய்தால் அது போல்ட் ஆக காட்சியளிக்கும்.
  • இரண்டு _ குறிகளுக்கு நடுவில் ஒரு வார்த்தையை டைப் செய்தால் அது அடிக்கோடிட்டு காட்டப்படும்.
  • இரண்டு - குறிகளுக்கு நடுவில் ஒரு வார்த்தையை டைப் செய்தால் அது அடித்தாற்போல காட்டப்படும்.
  • நீங்கள் சுட்டிகள்,படங்கள்,வீடியோக்கள் போன்றவற்றை நேரடியாக உங்கள் ஸ்டேடஸ் அப்டேட் கட்டத்திற்குள் ட்ராக் அண்ட் ட்ராப் செய்யலாம் ஏனென்றால் இது html 5 உபயோகிக்கிறது.
  • உங்கள் கம்மெண்டுகளில் யாரையாவது குறிப்பிட விரும்பினால் அவர் பெயருக்கு முன்னால் @ அல்லது + குறியை சேர்க்கவும்.
  • நீங்கள் ஒரு இடுகையை குறிப்பிட்ட நபருக்கு மட்டும் காட்ட விரும்பினால் அவர்களின் வட்டத்தில் காட்டலாம், ஆனால் மறுபதிப்பு செய்வதை தடுத்து விட வேண்டும்.
  • பச்சை நிறக்குறியை கொண்டவை பொது பதிவுகள், நீல நிறக்குறியை கொண்டவை தனிப்பதிவுகள்.
  • நீங்கள் கூகிள்+க்கு உள்ளே உங்கள் +1 பட்டனை பயன்படுத்தினால் அந்த இடுகைகள் உங்கள் +1 பக்கத்தில் காட்டப்படாது, நீங்கள் மற்ற தளங்களில் +1 பட்டனை பயன்படுத்திய இடுகைகள் மட்டுமே அப்பக்கத்தில் இருக்கும்.

டிஸ்கி: தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் நடத்தப்படும் இத்தளத்திற்கு தங்களால் இயன்ற ஆதரவை தாருங்கள், இதனை ஒரு தமிழ் கலைகளஞ்சியமாக மாற்ற வேண்டும், இங்கே


ஒருவன் தன் 
காலை 
நனைக்காமல் 
பெருங்கடலையே 
கூட கடக்கலாம்
ஆனால் தன்
கண்ணை 
நனைக்காமல்
வாழ்க்கையை 
கடக்க முடியாது.



பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...1


4 comments:

  1. ////////
    தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் நடத்தப்படும் இத்தளத்திற்கு தங்களால் இயன்ற ஆதரவை தாருங்கள், இதனை ஒரு தமிழ் கலைகளஞ்சியமாக மாற்ற வேண்டும், இங்கே
    //////

    என்னுடைய தளத்தில் இதன் இணைப்பை கொடுத்துள்ளேன்..

    ReplyDelete
  2. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி சௌந்தர், தங்கள் தளத்தில் இணைத்துள்ளதை பார்த்தேன், உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...