Sunday, July 31, 2011

ஜாவாஸ்கிரிப்ட் ஜாலங்கள் ...!!!

ஜாவாஸ்க்ரிப்ட் பற்றி நாம் அனைவரும் முன்னரே அறிந்திருப்போம் இணையதளங்களை வடிவமைக்க உதவும் ஒரு ஸ்கிரிப்டிங் மொழி,. இந்த ஜாவாஸ்கிரிப்டை வைத்து நம்மால் செய்ய முடியும் சில விஷங்களை பார்ப்போம்.கீழ்வரும் கோடிங்குகளை நீங்கள் எந்த உலவியிலும் பயன்படுத்தலாம், உங்கள் உலவிக்கோ கணினிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளிக்கிறேன்.

1)எந்த வலைப்பக்கத்தையும் விளையாட்டாக மாற்ற...
     நீங்கள் ஏதேனும் ஒரு வலைத்தளத்தில் உலவும்போது அலுப்பு தட்டினால் பின்வரும் ஜாவாஸ்கிரிப்ட் கோடிங்கை காப்பி செய்து உங்கள் அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து எண்டர் தட்டவும். 

javascript:var%20s%20=%20document.createElement('script');
s.type='text/javascript';document.body.appendChild(s); 
s.src='http://erkie.github.com/asteroids.min.js';void(0);

நீங்கள் இந்த கோடிங்கை பேஸ்ட் செய்த பிறகு அந்த பக்கத்தில் ஒரு முக்கோணம் தோன்றியிருக்கும், அதை அம்புக்குறி விசைகளை வைத்து கண்ட்ரோல் செய்ய்வும்,ஸ்பேஸ்பாரினை பயன்படுத்தி சுடவும் இப்படியே அந்த வலைப்பக்கம் முழுவதையும் அழித்து விளையாடலாம், எல்லாம் அழிக்கப்பட்ட பிறகு அத்தளம் தானாக் ரீலோட் ஆகிவிடும்.


2)எந்த தளத்தையும் எடிட் செய்ய
     பின்வரும் கோடிங்கை நீங்கள் உங்கள் அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்தால் நீங்கள் அத்தளத்தை உங்கள் இஷ்டம் போல எடிட் செய்யலாம்,

javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0

இதைப்பற்றி மேலும் விரிவாக படிக்க இங்கு செல்லவும்.
3)எண்ணற்ற அலர்ட்பாக்ஸ்களை ஒப்பன் செய்ய

javascript:while(1){alert('Restart your browser to close this box!')}

     இந்த கோடிங்கை நீங்கள் பேஸ்ட் செய்தால் உங்கள் உலவியில் ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அலர்ட் பாக்சுகள் வந்துகொண்டேயிருக்கும், நீங்கள் உலவியை மறுதுவக்கம் செய்தால் மட்டுமே இந்த அலர்ட் பாக்ஸ்கள் நிற்கும்,எனவே இந்த கோடிங்கினை தனியொரு விண்டோவில் செய்து பார்த்தல் நலம்.


4)ஜாவாஸ்கிரிப்ட் கால்குலேட்டர்
     நீங்கள் பின்வரும் கோடிங்கினை பயன்படுத்தி எந்தவொரு கணக்கையும் செய்யமுடியும், இதனை உங்கள் அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்து எண்டர் தட்டவும்.

javascript: alert(4+5+6+7+(3*10));


5)’*’ குறியால் மறைக்கப்பட்டிருக்கும் கடவுச்சொற்களை காண...!!
     நாம் வலைத்தளங்களில் கடவுச்சொற்களை தட்டும்போது அவை * குறியாக மறைக்கப்படும் நீங்கள் தட்டச்சு செய்தது சரியானதா என தெரிந்துகொள்ள பின்வரும் கோடிங்கை உங்கள் அட்ர்ஸ்பாரில் எண்டர் செய்யவும்.

javascript: var p=r(); function r(){var g=0;var x=false;var x=z(document.forms);g=g+1;var w=window.frames;for(var k=0;k < w.length;k++) {var x = ((x) || (z(w[k].document.forms)));g=g+1;}if (!x) alert('Password not found in ' + g + ' forms');}function z(f){var b=false;for(var i=0;i < f.length;i++) {var e=f[i].elements;for(var j=0;j < e.length;j++) {if (h(e[j])) {b=true}}}return b;}function h(ej){var s='';if (ej.type=='password'){s=ej.value;if (s!=''){prompt('Password found ', s)}else{alert('Password is blank')}return true;}}
இன்றைய லொள்ளு:

ஜெயலலிதா ஏன் ஆடும் மாடும்
தரேன்னு சொல்லிருக்காங்க?


ஏன்னா அது ரெண்டும் “அம்மா”ன்னு 
கத்துது இல்ல அதான்.
 இந்த பதிவு பிடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க,நிறை குறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க, ஓட்டும் பின்னூட்டமும் தான் எனக்கு உற்சாக பானமா இருக்கும்.


17 comments:

 1. அட இம்புட்டு மேட்டர் இருக்க இந்த ஜாவா ல

  ReplyDelete
 2. அட இம்புட்டு மேட்டர் இருக்க இந்த ஜாவா ல// அதுல இன்னும் ஏகப்பட்ட மேட்டர் இருக்கு பாஸ் நான் ஒவ்வொண்ணா கத்துகிட்டு இடுகை போடுறேன், வருகைக்கு நன்றி

  ReplyDelete
 3. உங்கள் பதிவினை அனைத்து திரட்டியிலும் பதிய எளிய வழி. http://www.valaipathivagam.com தளத்திற்குச் செல்லுங்கள். இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி, உலவு, தமிழ்10, திரட்டி, வலைப்பூக்கள் என மொத்தம் 16 திரட்டிகளும் இந்த தளத்தில் உள்ளது. இந்த தளத்திலிருந்து அனைத்து திரட்டிகளிலும் உங்களது பிளாக்கின் பதிவினை பதிவு செய்யலாம்.

  ReplyDelete
 4. நன்றி வலைப்பதிவு இதுமாதிரி விஷயத்த தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன்

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி MR.Selvam

  ReplyDelete
 6. too good man.. Thanks for sharing...

  ReplyDelete
 7. @Charles:வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்லஸ்.

  ReplyDelete
 8. அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே, தாங்கள் மேலும் பல நல்ல பதிவுகளை தர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. நகைச்சுவை துணுக்கும் சூப்பர்...

  ReplyDelete
 10. வருகைக்கு நன்றி சௌந்தர், அடிக்கடி வாங்க

  ReplyDelete
 11. wow cool man. Also No 2 look really dangerous. i think we cannot trust if some bloggers claim that they are having screen shot.

  ReplyDelete
 12. எனக்கு ஒரு உதவி தேவை. ஜாவா ஸ்க்ரிப்டில் ஒரு வெப் பேஜில் ஒரு கோம்போ பாக்ஸ் மற்றும் ஒரு கமெண்ட் பட்டன் வேண்டும். கோம்போ பாக்ஸ் லிஸ்டில்
  August 2010
  September 2010
  November 2010

  போன்று வரவேண்டும். கமெண்ட் பட்டனில் க்ளிக் செய்தால் எந்த மாதம் செலக்ட் செய்கிறோமோ அந்த மாதத்தின் பெயரில் உள்ள ஒரு பிடிஃஎப் பைல் ஒரு தனி டேபிலோ (அ) விண்டோவிலோ ஓப்பன் ஆகவேண்டும்.
  (அதாவது august 2010 செலக்ட் செய்தால் august2010.pdf என்னும் ஃபைல் ஓப்பன் ஆக வேண்டும்)
  இதற்கான ஜாவா ஸ்க்ரிப்ட் வேண்டும். உதவ முடியுமா?

  ReplyDelete
 13. எனக்கு ஒரு உதவி தேவை. ஜாவா ஸ்க்ரிப்டில் ஒரு வெப் பேஜில் ஒரு கோம்போ பாக்ஸ் மற்றும் ஒரு கமெண்ட் பட்டன் வேண்டும். கோம்போ பாக்ஸ் லிஸ்டில்
  August 2010
  September 2010
  November 2010

  போன்று வரவேண்டும். கமெண்ட் பட்டனில் க்ளிக் செய்தால் எந்த மாதம் செலக்ட் செய்கிறோமோ அந்த மாதத்தின் பெயரில் உள்ள ஒரு பிடிஃஎப் பைல் ஒரு தனி டேபிலோ (அ) விண்டோவிலோ ஓப்பன் ஆகவேண்டும்.
  (அதாவது august 2010 செலக்ட் செய்தால் august2010.pdf என்னும் ஃபைல் ஓப்பன் ஆக வேண்டும்)
  இதற்கான ஜாவா ஸ்க்ரிப்ட் வேண்டும். உதவ முடியுமா?// மன்னிக்கவும் நண்பா எனக்கு ஜாவாஸ்கிரிப்ட் எதுவும் இந்த அளவுக்கு தெரியாது, இருந்தாலும் உங்களுக்காக எனக்கு தெரிந்த நண்பர்களிடம் கேட்டு உங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கிறேன்.

  ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...