Saturday, October 29, 2011

உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-4!

ணக்கம் நண்பர்களே.. நாம் இதுவரை இந்த தொடர்பதிவில் பல்வேறு ஹாக்கிங் முறைகளை பற்றியும் அதன் தற்காப்பு முறைகளை பற்றியும் பார்த்தோம். இப்போது Tab Napping என்ற அதிநவீன ஹாக்கிங் முறையையும் அதிலிருந்து நமது தகவல்களை காப்பாற்றிக்கொள்வதும் எப்படி என்று பார்ப்போம்.

நெருப்பு நரி உலவியின் நிறுவனமான மொஸில்லா தான் முதல் முதலில் இந்த டாப் நாப்பிங் என்ற ஹாக்கிங் முறையை பற்றிய எச்சரிக்கையை வெளியிட்டது. அதாவது நாம் பல டாப்களை திறந்து வைத்துக்கொண்டு இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும் போது அதில் உள்ள ஏதேனும் ஒரு 5 முதல் 10 நிமிடங்களுக்கு திறந்து வேலை செய்யாத In-active டாப் வேறொரு போலி வலைப்பதிவுக்கு ரீ-டைரக்ட் செய்யப்பட்டு உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் திருடப்படுகிறது.
அதாவது நீங்கள் உங்கள் ஆன்லைன் பேங்க் கணக்கின் வலைத்தளத்தை ஒரு டாபிலும் முகநூலை மற்றொரு டாபிலும் திறக்கிறீர்கள். முகநூல் திறந்து அதில் நாம் மூழ்கிவிடுவதால் நமது வங்கி கணக்கு லாகின் செய்யும் பக்கம் திறந்து இன் ஆக்டிவ்வாக இருக்கும். இதனை கண்டுபிடிக்கும் ஹாக்கர்கள் உங்களின் இன் ஆக்டிவ் டாபை போலி லாகின் பக்கத்திற்கு ரீ டைரக்ட் செய்கிறார்கள்,நாம் அந்த போலி பக்கத்தில் நமது விவரங்களை கொடுத்து லாகின் செய்தால் நமது தகவல்கள் அனைத்தும் ஹாக்கர்களின் கையில் அவர்கள் நம் பணம் முழுவதையும் திருட வாய்ப்புள்ளது.
இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது அதாவது அவர்கள் முதலில் உங்கள் உலவியின் வரலாற்றை படித்து நீங்கள் அடிக்கடி செல்லும் தளங்களை குறித்த விவரங்களை பெறுகிறார்கள்.அதன் பின்னர் அவர்கள் உங்கள் உலவியின் நடவடிக்கைகளை கண்காணித்து இன் ஆக்டிவ் டாபினை ஏதேனும் ஒரு போலி பக்கத்திற்கு ரீடைரக்ட் செய்து உங்கள் தகவல்களை திருடுகிறார்கள்.
இது வெப் டிசைனிங் தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் சற்று கடினமான முறையாக தோன்றலாம் ஆனால் வெப் டிசைனர்களுக்கு மிகவும் எளிதான வேலைதான்.இதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வதற்கான வழிகளை இப்போது பார்ப்போம்.


 • முக்கியமான தளங்களுக்கு செல்கையில் உங்கள் அட்ரஸ்பாரில் உள்ள முகவரியை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

 • ஆன்லைன் வங்கி கணக்குகளை பராமரிக்கும்போது தனி விண்டோவில் திறந்து பயன்படுத்துங்கள்.

 • பல டேப்களை திறந்து பயன்படுத்தும் பழக்கத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.


இவைதான் இந்த ஹாக்கிங் முறையிலிருந்து நம்மை காத்துக்கொள்ளும் வழியாகும்.

குறிப்பு: இந்த tab napping  என்ற முறையை பற்றி இணையத்தில் சொற்ப தகவல்களே கிடைத்தது நான் எனக்கு தெரிந்தவற்றை பதிவிட்டுள்ளேன், நண்பர்கள் எவருக்கேனும் கூடுதல் தகவல்கள் தெரிந்தாலோ அல்லது நான் கூறியவற்றில் ஏதேனும் திருத்தம் இருந்தாலோ தயவுசெய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
இத்துடன் தனிநபர்களின் கணக்குகளை ஹாக் செய்வதும் அதன் பாதுகாப்பும் குறித்த தொடர் முடிவடைகிறது, மற்ற வகை ஹாக்கிங் பற்றி எழுதவா வேண்டாமா என்பதை நீங்களே கூறவேண்டும்.

தொடரின் முந்தைய பாகங்கள்: பகுதி-1,   பகுதி-2,   பகுதி-3


நன்றி:
இது என்னுடைய ஐம்பதாவது பதிவு, அலெக்ஸா ரேங்கில் இந்த வலைப்பூ 314,920வது இடத்திலும் 20,000 பேஜ்வீயூவ்களையும் பெற்றுள்ளது. இதுவரை தொடர்ந்து ஆதரவளித்துவரும் நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கும், இத்தளத்தினை பின் தொடரும் 85 நண்பர்களுக்கும், மின்னஞ்சல் மூலமாக தொடரும் 32 நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு தங்கள் ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


Wednesday, October 19, 2011

எந்த மென்பொருள்/வெப்சைட் இல்லாமல் ஸ்டிரீமிங் வீடியோக்களை எளிதாக தரவிறக்க

ணக்கம் நண்பர்களே.. நாம் அனைவரும் யூடியூப் மற்றும் மற்ற பல தளங்களில் வீடியோக்களை பார்ப்போம் அவற்றை தரவிறக்க நினைக்கும்போது ஏதேனும் ஒரு மென்பொருளை நாடுவோம் அல்லது ஏதேனும் ஒரு வலைத்தளத்தை நாடுவோம்.

இந்த மென்பொருட்கள் சரியாக தரவிறக்கம் செய்வதில்லை பாதியில் தரவிறக்கம் நின்றுவிடும் அல்லது மென்பொருள் ஹாங் ஆகிவிடும், சரி இந்த வலைத்தளங்களை உபயோகிக்கலாம் என்றால் அதில் பல தளங்கள் தரவிறக்க சுட்டியே கிடைக்காது சில மட்டுமே சரியாக வேலை செய்யும்.. அதிலும் நீங்கள் அந்த வீடியோ முழுவதையும் பார்த்துவிட்டு அதன்பிறகு தரவிறக்கினால் அந்த வீடியோ உங்களால் இரண்டு முறை தரவிறக்கப்படுகிறது இதனால் தேவையற்ற இழப்பு ஏற்படுகிறது..

இதனை தவிர்க்க நீங்கள் வீடியோ முழுவதும் பார்த்தவுடனே எந்த தரவிறக்கமும் செய்யாமல் அதனை ஒரு கோப்பாக உங்கள் கணினியில் சேமித்தால் எப்படி இருக்கும்? அதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.(கொஞ்சம் நீளமான பதிவு.)

1)முதலில் நீங்கள் எப்போதும் போல வீடியோவை பாருங்கள், முழுதும் பார்த்து முடிந்தவுடனோ அல்லது முழுதும் ஸ்டிரீமிங் முடிந்தவுடனோ உங்கள் உலவியை மூடிவிடாமல் மினிமைஸ் செய்துவிட்டு அடுத்த வரியில் குறிப்பிடப்பட்டுள்ள ஃபோல்டருக்கு செல்லுங்கள்.


2)இந்த போல்டரானது நீங்கள் பயன்படுத்தும் இயங்குதளம் மற்றும் உலவி இவற்றை பொறுத்து மாறுபடும் உங்களின் உலவி மற்றும் இயங்குதளத்திற்கு நேரே உள்ள ஃபோல்டரை தேர்ந்தெடுக்கவும்.

இயங்குதளம்உலவி ஃபோல்டர்
விண்டோஸ் 7
நெருப்புநரிC:\Users\[USERNAME*]\AppData\Local\Mozilla
\Firefox\Profiles\zdo1e2i8.default\Cache
" குரோம் C:\Users\[USERNAME*]\AppData\Local\
Google\Chrome\User Data\Default\Cache


விண்டோஸ் xp
நெருப்புநரி C:\Documents and Settings\[USERNAME*]\Application Data\Mozilla\Firefox\Profiles\Default\Cache
" குரோம் C:\Documents and Settings\[USERNAME*]\Local Settings\Application Data\Google\Chrome\

*இதில் சிவப்பு நிறத்தில் உள்ள USERNAME என்பதற்கு பதிலாக உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும் பயனர் பெயரை கொடுக்க வேண்டும்.இதில் போல்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் உள்ள போல்டர்களை நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்க வேண்டும்.

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயனர்கள் உங்கள் Cache ஃபோல்டருக்கு செல்ல பின்வருமாறு செய்யவும், உங்கள் உலவியில் Tools-->Internet Options என்பதை தேர்ந்தெடுக்கவும்..
அதில் General என்ற டாபிற்கு கீழே உள்ள Settings என்பதை க்ளிக் செய்யவும்.


இப்பொழுது தோன்றும் புதிய விண்டோவில் View Files என்பதை க்ளிக் செய்தால் உங்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் Cache ஃபோல்டர் திறந்திருக்கும். அதில் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.3)இப்பொழுது நீங்கள் உங்கள் கணினியின் Cache ஃபோல்டருக்குள் இருப்பீர்கள் அதில் நாம் தற்பொழுது ப்ளே செய்த வீடியோ தற்காலிக Cache ஆக சேமிக்கப்பட்டிருக்கும், நாம் செய்ய வேண்டியது அதனை கண்டுபிடித்து நிரந்தரமாக சேமித்து கொள்ள வேண்டியதுதான்.


4)அந்த ஃபோல்டருக்குள் ரைட் க்ளிக் செய்து Sort-->By Size என்பதை தேர்ந்தெடுங்கள்.


5)அதில் மெமரியில் பெரிய அளவில் உள்ள கோப்புக்களை VLC Media Player கொண்டு ப்ளே செய்து பாருங்கள்..(வீடியோக்கள் அதிக மெமரி அளவைத்தான் கொண்டிருக்கும்.) இதனை நீங்கள் உங்கள் வீடியோவினை கண்டுபிடிக்கும் வரையில் ஒவ்வொரு கோப்பையும் ப்ளே செய்து பார்க்கவேண்டும்.

அங்கே data_1,data_2,.... போன்ற வரிசை எண்ணில் கோப்புகள் இருக்கும் இந்த data_X வரிசை கோப்பை ப்ளே செய்ய தேவையில்லை இவையல்லாத மற்ற கோப்புகளை ப்ளே செய்யுங்கள்.6) VLC Media Playerல் ப்ளே செய்து உங்களுக்கு வேண்டிய வீடியோவினை கண்டுபிடித்த பிறகு அதனை ரைட் க்ளிக் செய்து காப்பி செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

7)ஒட்டிய பிறகு அதில் ரைட் க்ளிக் செய்து Rename என்பதை செலக்ட் செய்து பெயரை மாற்றும் போது அதன் இறுதியில் .mp4 or .flv கோப்பாக சேமிக்கவும்.
இப்பொழுது உங்கள் வீடியோ தரவிறக்கப்பட்டுவிட்டது..

டிஸ்கி 1: பதிவின் நடுவில் இந்த டேபிளை கொண்டு வருவதற்கு திணறிய போது சரியான நேரத்தில் கை கொடுத்தது நண்பர் பலே பிரபு அவர்களின் பதிவு அவருக்கு நன்றி.


டிஸ்கி 2: இனிமேல் பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்க என்று பதிவின் கீழ் கேட்கப்போவதில்லை, நீங்களே பாத்து எதாச்சும் செஞ்சு விடுங்க.. :).. 
எனக்கு இன்றுதான் ஃபேஸ்புக்கின் வீடியோ சாட் வசதி ஆக்டிவேட் ஆயிருக்கு சிலருக்கு இன்னும் ஆகல சிலர் முன்னடியே வந்துடுச்சுன்னு சொல்றாங்க? நீங்களும் உங்களுக்கு வந்திச்சா இல்லையான்னு சொல்லுங்க. நன்றி.


Sunday, October 16, 2011

யூடியூப் ஜாலங்கள்...பாம்பு விளையாட்டு

ணக்கம் நண்பர்களே..நாம் அனைவரும் யூடியூபில் வீடியோக்களை பார்ப்போம், அதிவேக இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் வேகம் குறைவான இணைய இணைப்பு கொண்டவர்களுக்கு? வீடியோ ஸ்ட்ரீமிங் முடியும்வரை காத்திருக்க வேண்டும் இவ்வாறு காத்திருக்கும் நேரத்தில் நீங்கள் யூடியுபிலேயே விளையாடவும் அந்த விளையாட்டு தங்கள் வீடியோ ஸ்டிரீமிங்கை எவ்வித்தத்திலும் பாதிக்காமல் இருந்தால் எப்படி இருக்கும்? அதைப்பற்றித்தான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.

உங்கள் அனைவருக்கும் பாம்பு விளையாட்டினை பற்றி தெரிந்திருக்கும் நீங்கள் யூடியூபில் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போது ஸ்டிரீமிங் ஆகும் நேரத்தில் பாம்பு விளையாட்டை ஆட பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்..

1)முதலில் யூடியுபினை திறந்து ஏதேனும் ஒரு வீடியோவினை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

2)அந்த வீடியோ ஸ்டிரீமிங் ஆகிக்கொண்டிருக்கும்போது உங்கள் மவுஸின் இடது க்ளிக்கை அழுத்தி பிடித்தபடி முதலில் இடது அம்புக்குறியையும் பின்னர் மேல் அம்புக்குறியையும் ஒரு சேர அழுத்துங்கள்.

(Press and hold the left mouse button and left arrow button and then top arrow button respectively.)

3)இப்போது ஸ்கிரீனில் இருந்த ஸ்டிரீமிங் வட்டம் பாம்பினைப் போலவும் அருகே இரை ஒன்றும் இருப்பதை காணலாம்..4)வேகமாக் செயல்படுங்கள் இல்லையென்றால் பாம்பு சுவற்றில் மோதிவிடும்.. அவ்வளவுதான்.. நல்லாயிருக்குல்ல???

டிஸ்கி: விரைவில் ஒரு ஆங்கில வலைப்பூவை தொடங்கும் எண்ணம் உள்ளது. எனவே தாங்கள் அதற்கும் வருகை தந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..


இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


Friday, October 14, 2011

உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-3!

ணக்கம் நண்பர்களே நாம் ஏற்கனவே ஹாக்கிங்கில் பிஷிங் மற்றும் கீலாகர்ஸ் என்ற வழிமுறைகளையும் அதிலிருந்த் நம்மை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது சோஷியல் இஞ்சினியரிங்(Social Engineering) என்ற முறையைத்தான்..

இந்த முறையைப் பற்றி எளிதாக விளக்க நாம் கந்தசாமி திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் ஷ்ரேயாவின் வங்கிக்கணக்கினை ஹாக் செய்வதற்காக முதலில் விக்ரம் கீ லாகர் மென்பொருளை பயன்படுத்தி அவரின் கடவுச்சொல்லை எடுத்துவிடுவார், பின் அந்த கணக்கில் மூன்று கேள்விகள் கேட்டு 60 விநாடிகள் நேரம் கொடுக்கும் அப்பொழுது அந்த கேள்விகளுக்கான விடையை ஷ்ரேயாவிடம் பேசியே கறப்பார் அதுதான் சோஷியல் இஞ்சினியரிங், சுருக்கமாக சொல்ல்ப்போனால் ”போட்டு வாங்குறது”..

இந்த முறையினை பயன்படுத்துவதற்கு தொழில்நுட்ப அறிவு ஒரு துளிகூட தேவையில்லை, சாதுர்யமாக பேசும் திறன் இருந்தாலே போதுமானது.. இந்த முறையை பயன்படுத்தி நமது மின்னஞ்சல் கணக்கினை திருடலாம், அது திருடப்பட்டாலே நமது மற்ற அனைத்து கணக்குகளையும் எளிதில் திருடிவிடலாம் என்பதை தாங்களே அறிவீர்கள்..


இதை செய்வதற்கு முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கு துவங்கும்போது கடவுச்சொல்லை மீட்பதற்காக இரண்டு கேள்விகளும் அவற்றுக்கான விடையும் அளித்திருப்போம், நம் கணக்கை திருட முயற்சிப்பவர் அந்த கேள்விகளை எடுத்துக்கொண்டு அதற்கான பதிலை நம்மிடமே சாதுர்யமான முறையில் தெரிந்துகொண்டு நமது கடவுச்சொல்லை மாற்று உள்ளே நுழைந்துவிடலாம்.

அவர்கள் இதனை அறிய கேள்விகளை எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம்.. உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் கேள்வியில் உங்களின் முதல் தொலைபேசி எண் என்ன என்பதையும் அதன் பதிலையும் அளித்திருக்கிறீர்கள் என்றால், அந்த நபர் உங்களிடம் “மாப்ள ஃபர்ஸ்ட் ஒரு நம்பர் வச்சிருந்த இல்ல? அது என்ன கம்பெனி அந்த நம்பர சொல்லேன்” என்று கேட்டாலும் நீங்கள் கண்டிப்பாக கொடுப்பீர்கள் ஆனால் அவர் உங்கள் கணக்கில் நுழைய முயற்சிக்கிறார் என்று தெரியாது.இது மிகவும் எளிய முறையாக இருந்தாலும் இதை எல்லாரும் பயன்படுத்தும் வகையில் இருப்பதால் ஆபத்தும் அதிகம்..இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்..

1)செக்யூரிட்டி கேள்விகளில் உங்களை பற்றிய விவரங்களை அளிக்கவேண்டாம், உங்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்களை இதில் பயன்படுத்துங்கள்.


2)What is your sister name?,what is your father name? இதுபோன்ற சிறுபிள்ளைத் தனமான வினாக்களை வைப்பதை தவிர்க்கவும் ஏனெனில் இவை உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் தெரியக்கூடிய விஷயங்கள்.


3)மின்னஞ்சல் கணக்கு உருவாக்கத்தின்போது கேட்கப்படும் மாற்று மின்னஞ்சலில் உங்களின் மற்ற முகவரியை கொடுத்து வைத்தால் கடவுச்சொல் திருடப்பட்டாலும் மீட்க உதவும்..


4)உங்களின் நெருங்கிய நண்பராக இருந்தாலும் உங்களின் செக்யூரிட்டி வினாக்கள் சம்பந்தமான கேள்விகளை கேட்டால் அதற்கு பதிலளிக்காதிர்கள்..


இவையே இந்த முறையிலிருந்து நம்மை பாதுகாக்க வழிமுறைகள், அடுத்த பதிவில் இன்னொரு வளர்ந்து வரும் ஹாக்கிங் முறையை பற்றி பார்ப்போம்..

இந்த தொடரின் முந்தைய பாகங்கள்..

உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள -2 !!!
உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-1!!!
இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


Thursday, October 6, 2011

பேஸ்புக்கின் புதிய பாதுகாப்பு வசதி...!!!

ணக்கம் நண்பர்களே... கூகிள்+ன் அறிமுகத்தையும் அசுர வளர்ச்சியையும் கண்டு பேஸ்புக் இப்போது அதிரடி மாற்றங்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்ததே.. இதில் இப்போது நம் கணக்கின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து புதிய வசதிகள் சிலவற்றை சேர்த்துள்ளார்கள். அதில் ஒன்றுதான் Trusted Friends என்ற வசதி. இந்த வசதியானது உங்கள் கணக்கு செயலிழந்தாலோ அல்லது முடக்கப்பட்டாலோ எளிதில் இந்த கணக்கை மீட்க உதவுகிறது.இதை எப்படி செயல்படுத்துவது என்று பார்ப்போம்.

1)முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் லாகின் செய்து கொண்டு அதில் Account Settings என்பதை தேர்ந்தெடுங்கள்.2)அதில் இடதுபுறத்தில் உள்ள Security என்பதை தேர்ந்தெடுங்கள்.


3)இப்போது தோன்றும் ஆப்ஷன்களில் Trusted Friends என்பதற்கு நேராக உள்ள Edit என்பதை க்ளிக் செய்யவும்.


4)இப்போது திரையில் ஒரு செய்தி தோன்றும் அதில் உள்ள Choose Trusted Friends என்பதை தேர்வு செய்யவும்.


5)இப்பொழுது திரையில் தோண்றும் சிறிய விண்டோவில் உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை அளிக்கவும்.


6)இப்பொழுது தோன்றும் திரையில் உங்கள் நண்பர்கள் பட்டியல் தோன்றும் அதில் உங்களுக்கு நம்பகமான மற்றும் முகநூல் இல்லாத நேரத்திலும் உங்களால் அணுகமுடிந்த நபர்களில் ஐந்து பேரை தேர்வு செய்துவிட்டு Continue என்பதை க்ளிக் செய்யவும்.


7)இப்போது தோன்றும் விண்டோவில் Confirm Friends என்பதை சொடுக்கவும், உங்களின் (Trusted Friends)பட்டியல் தயார்..உங்கள் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் நீங்கள் அதனை இந்த பட்டியல் மூலம் சரிசெய்து கொள்ளலாம்.


அதாவது உங்கள் கணக்கு செயலிழந்த நிலையில் நீங்கள் இந்த வசதி மூலம் அதனை மீட்டெடுக்க விரும்பினால், உங்கள் நண்பர்களுக்கு ஒரு இரகசிய எண் அனுப்பப்படும் அந்த எண்ணை கொண்டு மீண்டும் உங்கள் கணக்கை செயல்படுத்தலாம்.

நம் வீடுகளில் உபயோகிப்பதற்காக கணினியை மாற்றியமைத்தவர், எலக்ட்ரானிக் துறையை முற்றிலும் புரட்டிப் போட்டவர்...
எட்டாக் கனியாக இருந்த கணினியை சாமானியர்களுக்கும் எட்டச் செய்தவர்.. இன்னும் என்னென்னவோ சொல்லலாம் அவரைப் பற்றி.. 

ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற ஒரு  சகாப்தம் நிறைவடைந்தது... அவரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் வேண்டிக்கொள்வோம்...
இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


உங்களின் அனைத்து கூகுள் கணக்குகளின் தகவல்கள் ஒரே இடத்தில்

நாம் அனைவரும் இன்று பயன்படுத்துவதில் பெரும்பாலான சேவைகள் ஏன் கிட்டத்தட்ட அனைத்து சேவைகளுமே கூகிள் நிறுவனத்தினால் அளிக்கப்படுபவைதான், நாம் பயன்படுத்தும் அல்லது சேமிக்கும் அனைத்து தகவல்களும் நாம் கணக்கு திருடப்பட்டால் கோவிந்தாதான். அதனை தவிர்க்க நீங்கள் கூகுள் சேவைகளில் பயன்படுத்தும் அனைத்து தகவல்களையு ஒரே இடத்தில் பேக்-அப் எடுப்பது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்..இதனை செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

1)முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழையுங்கள்.

2)அதில் உங்கள் ப்ரொஃபைல் அடையாள படம் மேலே உள்ள பட்டையில் இருக்கும் அதன் மீது க்ளிக் செய்து Account Settings என்பதை செலக்ட் செய்யவும்.

3)இப்போது தோன்றும் புதிய விண்டோவில் இடதுபுற பேனில் இருக்கும் Data Liberation என்பதை செலக்ட் செய்யவும்.

4)இப்போது Download Your Data என்ற பட்டனை உங்களின் தகவல்களை ஒரு கோப்பாக தரவிறக்கி கொள்ளலாம்.
5) ஒரு குறிப்பிட்ட சேவையின் தகவலை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்பினால் அந்த சேவையினை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


Wednesday, October 5, 2011

விண்டோஸில் லாகின் ஸ்கிரீன் பேக்ரவுண்டை மாற்ற.!!

விண்டோஸ் பயன்படுத்தும் அனைவரும் பார்த்திருப்போம் அதில் லாகான் செய்யும்போது தோன்றும் நீல நிற புகைப்படத்தை மாற்ற முடியாது. எப்பொழுதும் ஒரே மாதிரி படம் இருப்பதால் அலுப்பு தட்டுகிறது இல்லையா? எனவே இன்று விண்டோஸ் லாகான் ஸ்கிரீன் பின்புலத்தில் உள்ள புகைப்படத்தை நம் இஷ்டத்திற்கு மாற்றி அமைப்பதை பற்றி பார்க்கப்போகிறோம்,இதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன.

1)Logon Studio
     இந்த மென்பொருளானது இலவச மென்பொருள்தான் இதில் முதலிலேயே நிறைய பேக்ரவுண்டு படங்களுடனே வருகிறது, நாம் நமக்கு பிடித்த படங்களையும் இதில் இணைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின்னர் இதனை திறந்து உங்களுக்கு தேவையான படத்தை தேர்ந்தெடுத்து அப்ளை என்பதை க்ளிக் செய்யவும்.உங்களின் லாகான் ஸ்கிரீன் மாறிவிடும்.


2)Windows 7 Logon Screen Rotator
இந்த மென்பொருளில் நீங்கள் ஒவ்வொரு முறை லாகின் செய்யும்போதும் தானாகவே படங்கள் மாறும்படி செய்யலாம்.இதனை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவத் தேவையில்லை... இந்த மென்பொருளை தரவிறக்கி அந்த பேக்கேஜை Unzip செய்து அதில் உள்ள .exe கோப்பின் மீது க்ளிக் செய்யுங்கள்.
தோன்றும் விண்டோவில் உங்களுக்கு பிடித்த படங்களை தேர்வு செய்த பிறகு
Enable And Exit என்பதை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் அடுத்தமுறை லாகின் செய்யும்போது உங்களுக்கு வேறு பேக்ரவுண்டுகள் கிடைக்கும்.

3) Windows 7 Logon Screen Change
இதுவும் மேலே உள்ளதை போன்ற லாகின் ஸ்கிரீன் மாற்றும் மற்றொரு மென்பொருள், இதனை தரவிறக்கி உங்களுக்கு தேவையான படத்தை செலக்ட் செய்து லாகான் ஸ்கிரீனாக பயன்படுத்துங்கள்...அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


Tuesday, October 4, 2011

விண்டோஸ் 7 இரகசியங்கள்...!!!

ணக்கம் நண்பர்களே, அநேகமாக அனைவரும் விண்டோஸ் 7க்கு மாறியிருப்பீர்கள் என்றே கருதுகிறேன். இதுவரை வெளிவந்துள்ள மைக்ரோசாப்டின் தயாரிப்புகளிலேயே மிகவும் தரமானது விண்டோஸ் 7 தான் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இருக்க முடியாது. விண்டோஸ் 7 ல் இல்லாத வசதிகளே இல்லை எனலாம். விண்டோஸ் 7ன் கீபோர்டு இயங்கமைவானது உங்களால் மவுஸ் இல்லாமலே அனைத்து பணிகளையும் செய்திடும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் சில குறுக்குவிசை(shortcut keys) இந்த பதிவில் பார்ப்போம். இதில் பல குறுக்கு விசைகளை அனைவரும் அறிந்திருந்தாலும் சில மிகவும் புதியனவாக இருக்கும்..

1)Ctrl + Shift + Click- ஏதேனும் ஒரு புரோகிராமை அட்மினிஸ்ட்ரேட்டராக ஓப்பன் செய்ய:


நாம் பலநேரங்களில் சில புரோகிராம்களை அட்மினிஸ்ட்ரேட்டராக திறக்க வேண்டியிருக்கும் அதற்கு அந்த புரோகிராமின் மீது ரைட் க்ளிக் செய்து தேர்வு செய்வதற்கு Ctrl + Shift அழுத்திக்கொண்டு அந்த புரோகிராமின் மீது க்ளிக் செய்தால் அது தானாக அட்மினிஸ்ட்ரேட்டர் அதிகாரத்துடன் திறக்கும்.


2)Shift + Right-Click-ரைட் க்ளிக்கில் வரும் ஆப்ஷன்களை அதிகரிக்க செய்ய:
நீங்கள் ஷிப்ட் பட்டனை அழுத்திக்கொண்டு ஏதேனும் ஒரு கோப்பின் மீது ரைட் க்ளிக் செய்தால் தோன்றும் மெனுவானது சாதாரண மெனுவில் உள்ளதை விட சில அதிக ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.


இதில் சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளவை புதிதாக வந்த ஆப்ஷன்கள்.


3)Windows-button + Number-டாஸ்க்பாரில் உள்ள புரோகிராம்களை திறக்க:
நாம் டாஸ்க்பாரில் உள்ள புரோகிராம்களை திறக்க அவற்றின் மீது க்ளிக் செய்வதை விட நமது விண்டோவ் கீயை அழுத்திக்கொண்டு அந்த புரோகிராம் டாஸ்க்பாரில் உள்ள வரிசை எண்ணை அழுத்தினால் அது தானாக திறந்து கொள்ளும். 1ல் ஆரம்பித்து 0 இறுதியாக வரும்.4. Ctrl + Shift + N-ஆக்டிவ் விண்டோவில் புதிதாக ஒரு ஃபோல்டரை உருவாக்க:


நாம் ஒரு புதிய ஃபோல்டரை ஏதேனும் ஒரு இடத்தில் உருவாக்குவதற்கு மவுசை ரைட் க்ளிக் செய்து புதிய ஃபோல்டரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள விசைகளை அழுத்தினால் ஒரு புதிய ஃபோல்டர் திறக்கப்படும்.

5. Shift + Right-Click-ரைட் க்ளிக்கில் வரும் SEND TO மெனுவில் வரும் ஆப்ஷன்களை அதிகரிக்க:நாம் ஏதேனும் ஒரு கோப்பின் மீது ரைட் க்ளிக் செய்யும்போது அதில் சென்ட் டூ என்ற ஒரு வசதி இருக்கும் அதில் குறிப்பிட்ட சில ஃபோல்டர்கள் மட்டுமே காட்டப்படும் மற்ற இடங்களுக்கு நகர்த்த நாம் கட் அல்லது காப்பி ஆப்ஷனை உபயோகிக்க வேண்டும்.. ஆனால் ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு அந்த ஆப்ஷனின் மீது ரைட் க்ளிக் செய்வதன் மூலம் சென்ட் டூ ஆப்ஷனில் வரும் இடங்கள் அதிகரிக்கும், இதனால் அந்த கோப்பினை வேறு இடத்திற்கு மாற்றுவது எளிதாக இருக்கும்.


6. Ctrl + Shift + Escape-விண்டோஸ் டாஸ்க் மேனேஜரை திறக்க:
வழக்கமாக நாம் டாஸ்க் மேனேஜரை திறக்க CTRL+ALT+DELETE விசைகளை உபயோகிப்போம், அதற்கு பதிலாக மேலே உள்ள விசைகளையும் உபயோகிக்கலாம்.

7. Windows-botton + Pause-உங்கள் கணினியின் System Properties விண்டோவை திறக்க:நாம் பல நேரங்களில் சிஸ்டம் புராபர்டீஸ் விண்டோவை திறக்க வேண்டியிருக்கும், ஏனெனில் இங்குதான் நமது கணினியின் பல்வேறு அளவீடுகள் இருக்கும் மற்றும் டிவைஸ் மேனேஜருக்கும் இங்கிருந்துதான் செல்வோம். இதனை திறக்க My Computer ஐகான் மீது ரைட் க்ளிக் செய்வதற்கு பதிலாக மேலே உள்ள விசைகளை அழுத்தினால் போதுமானது, இந்த Pause பட்டனானது பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் வரிசையில், ஸ்க்ரோல் லாக்  பட்டனுக்கு பக்கத்தில் இருக்கும்.

8. Windows-button+B- வேறு இடங்களில் இருந்து சிஸ்டம் ட்ரேவிற்கு வருவதற்கு:நாம் பல நேரங்களில் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது சிஸ்டம் ட்ரேவில் உள்ள ஐகான்களில் ஏதேனும் ஒன்றினை பயன்படுத்த வேண்டியிருக்கும், இதற்கு மவுசினை பயன்படுத்துவதை விட மேலே குறிப்பிட்டுள்ள விசைகளை அழுத்தினால் சிஸ்டம் ட்ரே ஆக்டிவ்வாக இருக்கும் இப்போது அம்புக்குறி விசைகளின் மூலம் உங்களுக்கு தேவையான ஐகானை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

9. Shift+Click on Taskbar Item-இரண்டாவது முறை அதே புரோகிராமினை திறக்க:
நாம் ஏதேனும் ஒரு புரோகிராம் உதாரணத்திற்கு கூகுள் க்ரோமில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அதில் இன்னொரு விண்டோவை திறக்க விரும்பினால் மவுசில் ரைட் க்ளிக் செய்து புது விண்டோவை திறப்பதற்கு பதிலாக ஷிப்ட் கீயினை அழுத்திக்கொண்டு அந்த புரோகிராமின் மீது க்ளிக் செய்தால் இன்னொரு விண்டோவ் ஓப்பன் ஆகிவிடும்.

10. Windows-button+D-எல்லா விண்டோக்களையும் மினிமைஸ் செய்து டெஸ்க்டாப்பினை காட்ட:
நாம் டெஸ்க்டாப்பிற்கு செல்வதற்கு எல்லா புரோகிராம்களையும் மினிமைஸ் செய்வதோ அல்லது அதற்கு பதில் டாஸ்க்பாரின் இறுதியில் உள்ள டெஸ்க்டாப் பட்டனை அழுத்துவோம். அதற்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள பட்டன்களை அழுத்தினால் டெஸ்க்டாப் காட்டப்படும்.

உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-2!!! படித்துவிட்டு கருத்துக்களை கூறுங்கள்.


இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...Sunday, October 2, 2011

ஏர்டெல்லின் கொள்ளை

ரு காலத்தில் ஏர்டெல்தான் இந்தியாவின் பிரபல மொபைல் சேவை நிறுவனம், ஏர்டெல்லின் சிறப்பே அதன் தரமும், அதன் வாடிக்கையாளர் சேவையும்தான், இதெல்லாம் இந்தியாவிலேயே அதிக பயனர்களை கொண்ட நிறுவனம் என்ற பெயரை பெறும் வரைதான், என்று அந்த பெயரை பெற்றதோ அன்றிலிருந்து நிலைமை தலைகீழ்..

ஏர்டெல் கொள்ளையடிப்பது ஒன்றும் புதிதல்ல அதற்கு தற்போது மேலும் ஒரு புது டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது முன்பெல்லாம் 26 ரூபாய்க்கு குறுந்தகவல் பூஸ்டர் போட்டால், ஒரு மாத வேலிடிட்டியுடன் 6000 குறுந்தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் இப்போது டிராயின் புது விதிமுறையின்படி ஒரு நாளைக்கு 100 குறுந்தகவல்கள் மட்டுமே அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது..

இதுவரை 26 ரூபாய்க்கு ஒரு நாளைக்கு 200 குறுந்தகவல்களை தந்துகொண்டிருந்த ஏர்டெல் நிறுவனம், இப்போது அதே 26 ரூபாய்க்கு ஒருநாளைக்கு தருவது வெறும் 75 குறுந்தகவல்கள் மட்டுமே..நான் வாடிக்கையாளர் அதிகாரிக்கு தொடர்பு பேசினேன் அவரிடம் நீங்கள் முன்பு கொடுத்த அதே பணத்திற்கு இப்போது 100 குறுந்தகவல்களைத் தரலாமே என்று கேட்டதற்கு அது டிராயின் விதிமுறை என்றார்.

நீங்கள் கட்டணத்தை உயர்த்தியதற்கும் டிராய்க்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்டேன், அவர்கள் தான் குறுந்தகவல் பூஸ்டர்களின் கட்டணங்களை உயர்த்துமாறு விதிமுறையில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார். நான் அப்படி ஒன்றும் குறிப்பிட்டதாக தெரியவில்லையே என்றேன், இல்லை உங்களுக்கு தெரியாது இது நிறுவனங்களுக்கான தனி அறிவுறுத்தல் என்கிறார்..

எனக்கு கோபம் வந்துவிட்டது, எனக்கு உங்கள் பதில் திருப்தியளிக்கவில்லை, உங்கள் மேலதிகாரியிடம் பேசவேண்டும் இணைப்புக்கொடுங்கள் என்றேன், அவர் இணைப்பு கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு 10 நிமிடங்கள் வரை காத்திருந்தேன் அதற்கு கட்டணம் 3 நிமிடத்திற்கு 50 பைசா. பத்து நிமிடத்திற்கு பிறகு இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டது. நான் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தால் காத்திருக்க சொல்லிவிட்டு ஏர்டெல் டோன் ஓடுகிறதே தவிர எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் அதிகாரிக்கு இணைப்பு கொடுப்பதில்லை.
நான் வேறு நிறுவனத்திற்கு மாற முடிவு செய்துவிட்டேன்.
அவர்கள் இவ்வாறு கொள்ளையடிப்பது பெரிய விஷயமில்லை நம்மிடம் அதற்கான விளக்கத்தை கூறுவதற்கு கூட அவர்கள் தயாராக இல்லை.

எனக்கு வேறு ஒரு சந்தேகம் இருக்கிறது.. நம் பணத்தை செலவு செய்து நாம் பூஸ்டர் போட்டோ போடாமலோ ஒருநாளைக்கு எத்தனை குறுந்தகவல் அனுப்பினால் இந்த டிராய்க்கு என்ன? நாம் 100 குறுந்தகவலுக்கு மேல் அனுப்பக்கூடாது என்று இவர்கள் ஏன் சொல்கிறார்கள்? இது எப்படி இருக்கிறது தெரியுமா? நம் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் அல்லது நமக்கு ஒரு ஹோட்டலில் கணக்கு இருந்தாலும், நாம் ஒரு நாளைக்கு 3 இட்லிதான் சாப்பிட வேண்டும் என்று சட்டம் போட்டதை போல உள்ளது.. இந்த விதிமுறைக்கான அடிப்படை காரணம் தெரிந்தால் யாராவது கூறுங்கள்...


இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள -2 !!!

நாம் முந்தைய பதிவில் ஹாக்கிங்கின் வகைகளைப் பற்றியும் அதில் பிஷிங் என்ற முறையைப் பற்றியும் விரிவாக பார்த்தோம். இந்த பகுதியில் நாம் பார்க்க இருப்பது கீலாகர்ஸ் பற்றி.

கீலாகர்ஸ் என்பவை உங்கள் கணினியில் நிறுவப்பட்டு நீங்கள் தட்டச்சு செய்யும் விசைகளை ஒரு பைலாக சேமித்து அதை மற்றொரு நபருக்கு அனுப்புவதாகும்.கீலாகரில் இரண்டு வகைகள் உள்ளன, அவை

 • Hardware Keyloggers
 • Software Keyloggers 

1)Hardware Keyloggers:
வன்பொருள்(ஹார்ட்வேர்) கீலாகர்ஸ் என்பவை உங்க்ள் கணியின் கீபோர்டின் கனெக்க்டரில் அதே போன்ற வேறொன்றை இணைத்துவிடுவதுதான். இந்த இணைக்கப்பட்ட கீலாகரானது தானாகவே தகவல்களை இணையம் வழியாக அதனை இணைத்தவருக்கு அனுப்பிக்கொண்டிருக்கும்..

ஹார்ட்வேர் கீலாகர்ஸ் உங்கள் கணினியில் இணைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம், இது வன்பொருளாக இருப்பதால் எந்த ஆன்டி-வைரஸ், ஸ்பைவேர் மென்பொருட்களாலும் கண்டுபிடிக்க முடியாது.

வன்பொருள் கீலாகர் (படம்:கூகுள்)


இது கிட்டத்தட்ட கீபோர்டினை கனெக்ட் செய்யும் பின்னை போன்றே இருப்பதால் நீங்கள் பார்த்தாலும் தெரியாது. எனவே இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்கள் கணியினை மற்றவரிடம் விட்டுவிட்டு நீங்கள் 2 நிமிடம் வெளியில் சென்றாலே அவர்கள் இந்த கீலாகரை இணைத்து விடலாம்.

2)Software Keyloggers
சாப்ட்வேர்(மென்பொருள்) கீலாகர்ஸ் என்பவை மென்பொருள்களின் மூலம் உங்கள் கீபோர்டில் தட்டப்பட்ட விசைகளை ஒரு கோப்பாக சேமித்து அதில் முன்னரே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடும்.

எல்லா கீலாகர்களுமே பின்புலத்தில் இயங்குவதால் இவை டாஸ்க்பார் மற்றும் கண்ட்ரோல் பேனலில் தெரியாது. ஆனால் மென்பொருள் கீலாகர்ஸ் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் உங்கள் கணினி சற்று வேகம் குறைவாக இருக்கலாம், அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உங்கள் டாஸ்க் மேனேஜரில் பார்த்து சந்தேகப்படும்படியான ப்ராசஸ்களை எண்ட் செய்துவிடவும்.

இதில் இரண்டு வகை உள்ளது:

 • Physical Keyloggers
 • Remote keyloggers

முதல் வகையானது யாராவது ஒருவர் நேரடியாக உங்கள் கணினியில் நிறுவுவது, அதாவது உங்கள் கணினியை பயன்படுத்தும்பொழுது உங்களுக்கே தெரியாமல் நிறுவி விட்டால் அதன்பின் நீங்கள் தட்டும் ஒவ்வொரு எழுத்தும் அவர் மின்னஞ்சலுக்கு செல்லும்.

இரண்டாவது வகை கீலாகர்ஸ் இணையத்திலிருந்து நீங்கள் ஏதேனும் தரவிறக்கம் செய்யும்போது அதனுடன் சேர்ந்து உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும், இவை அதிகமாக குறிப்பிட்ட நபரை குறிவைத்து நடப்பதில்லை, பலரின் தகவல்களை திருட வேண்டும் என்ற நோக்கில் விரிக்கப்படும் வலை.

பாதுகாப்பு வழிமுறைகள்:

 • கீலாகர்ஸிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொளவது சற்று கடினம். கீலாக்ர்ஸிடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தலாம்.

 • பெரும்பாலான கீலாகர்கள் ஒரு குறிப்பிட்ட விசைகளைத்தான் அவற்றை திறப்பதற்கு பயன்படுத்துகின்றன, ctrl + alt + shift + k என்ற விசைகளை அழுத்தி பாருங்கள், உங்கள் கணினியில் கீலாகர் நிறுவப்பட்டிருந்தால் ஒரு விண்டோவ் தோண்றி கடவுச்சொல் கேட்கும், இதிலிருந்து கீலாகர் நிறுவப்பட்டுள்ளதை அறியலாம்.


 • நிறுவப்பட்டுள்ள கீலாகரை அந்த கடவுச்சொல் இல்லாமல் நீங்கள் எந்த வகையிலும் அழிக்கவோ நீக்கவோ முடியாது, உங்கள் ஹார்டு டிஸ்கினை ஃபார்மட் செய்வதே ஒரே வழி.


 • சில கீலாகர்கள் மேலே குறிப்பிட்ட விசைக்கு பதிலாக வேறு விசைகளை பயன்படுத்தவில்லை என்றால் நம்மால் அதனை கண்டுபிடிக்க முடியாது.


 • உங்கள் ஃபயர்வால் எனேபிள் செய்யப்பட்டிருப்பதன் மூலம் கீலாகர்ஸ் இணையத்தின் வழியே தகவல் அடுப்பதை ஓரளவு தடுக்கலாம், ஆனால் இதுவும் ஒரு முழுமையான பாதுகாப்பினை தராது.


 • சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருளானது கீலாகர்ஸ் பின்புறத்தில் வேலை செய்துகொண்டிருப்பதை கண்டுபிடிக்கும் ஆற்றலை கொண்டிருக்கும், நான் AVG, AVIRA மற்றும் AVAST ஆன்டி-வைரஸ்களில் சில கீலாகர்ஸை நிறுவி சோதித்தபோது AVG கீலாகர்ஸ் இருப்பதாக எச்சரிக்கை செய்தது, அவாஸ்ட் ஒரு மென்பொருளுக்கு மட்டுமே எச்சரிக்கை தந்தது மற்றவற்றிற்கு தரவில்லை, அவிரா எதற்குமே எச்சரிக்கை தரவில்லை.

 • க்ராக் செய்யப்படும் மென்பொருட்கள், முக்கியமாக டோரண்டிலிருந்து தரவிறக்கப்படும் மென்பொருட்களில் கீலாகர்ஸ் மறைந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது, எனவே அதனை தவிர்க்கவும்.

 • நெட்வொர்க் மானிட்டரிங் மென்பொருட்களை நிறுவி கண்கானிப்பதன் மூலம் கீலாகர்ஸ் இணையத்தில் தொடர்பு கொள்வதை கண்டுபிடிக்கலாம்.

 • பொது இடங்களிலும் வீட்டிலும் கடவுச்சொல்லை தட்டச்சு செய்ய ஆன்-ஸ்கிரீன் கீபோர்டினை பயன்படுத்துங்கள், விண்டோஸில் இதனைப்பெற OSK என்று ரன் கம்மாண்டில் டைப் செய்யவும்.
 • சில மென்பொருள் கீலாகர்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் கீலாகர்கள் ஆன்-ஸ்கீரின் கீபோர்டுகளில் டைப் செய்யப்படுவற்றையும் கண்டுபிடித்து விடும்.

 • பொது இடங்களில் அல்லது மற்றவரது கணினிகளை பயன்படுத்தும்போது ஒன்-டைம் பாஸ்வேர்ட் எனப்படும் வசதியினை பயன்படுத்தவும்.

 • கடவுச்சொல்லை தட்டச்சு செய்யுமுன் தேவையற்ற சில எழுத்துக்களை தட்டச்சு செய்து கொண்டு, அதனை மவுசால் செலக்ட் செய்துகொண்டு பின்னர் உங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யவும்.இவையே கீலாகர்ஸிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள்.


நான் எனக்கு தெரிந்தவரை கீலாகர்ஸ் பற்றி எழுதியிருக்கிறேன், இதில் தவறுகளும் இருக்கலாம் இல்லை ஏதேனும் விட்டுப்போயிருக்கலாம், தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள். அடுத்த பகுதியில் இப்போது புதிதாக பிரபலமடைந்து வரும் ஆபத்தான ஹாக்கிங் வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.


இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...Saturday, October 1, 2011

ஐசிசி யின் புதிய விதிமுறைகள்...!!!


இன்று முதல் ஐசிசி ஒருநாள் போட்டிகளில் சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.. அவை பின்வருமாறு,

 • பேட்ஸ்மேன் காயமடைந்தால் ரன்னர் வைக்கும் அனுமதி கிடையாது...

 • காயமடைந்து ரிடையர்டுஹர்ட் எனும் முறையில் மைதானத்திலிருந்து வெளியேறிய ஆட்டக்காரர் மீண்டும் களமிறங்க விரும்பினால், அவர் களத்திலிருந்த நேரம், காயம் ஏற்பட்ட சூழல் ஆகியவற்றை கொண்டு அவர் மீண்டும் களமிறங்க அனுமதி அளிக்கப்படும்.

 • ரன்-அவுட்டில் சந்தேகம் இருந்தால் மூன்றாவது அம்பையரிடம் முறையிடு செய்யலாம்.

 • பந்து வீச்சாளர் பந்து வீசும்போது ரன்னர் கிரீசுக்கு வெளியே இருந்தால் ரன்-அவுட் செய்யலாம்..

 • முதல் பத்து ஓவர்கள் முடியும் முன் பவுலிங் பவர்ப்ளேயினை எடுக்கக்கூடாது.

 • 40 ஓவர்கள் முடிந்த பிறகு பேட்டிங் பவர்ப்ளே எடுக்கக்கூடாது.

 • உணவு இடைவேளை 20 நிமிடத்திலிருந்து 30 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது..


இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


Related Posts Plugin for WordPress, Blogger...