Saturday, August 13, 2011

செலவில்லாமல் குடிநீரை சுத்திகரிக்க


குடிநீரை சுத்தப்படுத்த இனி பியூரிபையர் தேவையில்லை.
 வாழைப்பழ தோல் போதும். ஆம், குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்:

இன்று குடிநீராக பயன்படும் தண்ணீர், காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் ரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு ரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன் நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன.

இந்நிலையில், தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவது, தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும், அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக் கொள்ளும். எவ்வித ரசாயனப் பொருளையும் சேர்க்கத் தேவையில்லை. தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளைவிட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொசுறு:
 
* 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வகை விலங்குகள் உள்ளன.

* ஆயிரம் வகை ஊர்வன உள்ளன.

* 73 ஆயிரம் வகை சிலந்திகள் உள்ளன.

* 3 ஆயிரம் வகை பேன்கள் உள்ளன.

* 20 கோடி சிறுபூச்சிகள், கிருமிகள் உள்ளன.

* குட்டிபோட்டுப் பாலூட்டும் மம்மல் 4600 வகை உள்ளன.

* 9 ஆயிரம் வகைப் பறவைகள் உள்ளன.

* சிவப்பு மூக்கு கொண்ட குலியா எனும் பறவை தென்ஆஃப்பிரிகாவில் உள்ளது. இவை 100 கோடிகளுக்கு மேல் உள்ளனவாம்.

* இந்து மதத்தில் , எறும்பு முதல் யானை ஈறாக 84 லட்சம் ஜீவராசிகள் என்கிறது கருட புராணம். கடலுக்குள் மட்டுமே 1 கோடி உயிர்கள் உள்ளனவாம்.

* ஈக்களின் ஆயுள் 14 நாள்கள் மட்டுமே.

* நத்தைகளின் முன்பகுதியில் ஆன்டெனாபோல நான்கு நீட்டிக்கொண்டிருக்கும். அந்த உணர்வுறுப்புகளில் நீளமாக இருப்பவை நத்தையின் கண்கள். குட்டையாக இருப்பவை, அதன் இரையை முகர்ந்து அறிந்துகொள்ள உதவும் மூக்கு.

* சுறா மீன்களைஎவ்வித நோயும் தாக்காத வகையில் அதற்கு நோய்த் தடுப்புச் சக்தி உண்டு.

* மீன்களுக்கும், பூச்சிகளுக்கும் கண் இமை கிடையாது; வலிமையான கண் லென்சுகளே, அவற்றின் கண்களைக் காப்பாற்றுகின்றன.

* கோடிக்கணக்கான மரங்கள் உலகம் முழுவதும் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை நட்டது யார் தெரியுமா? அணில்கள்.
* பழத்தைத் தின்றுவிட்டுக் கொட்டைகளை வருங்கால உணவுக்காகப் புதைத்துவைத்து விட்டு - மறந்துவிட்டன. புதைக்கப்பட்டவை முளைத்துவிட்டன.


குறுந்தகவல் குறும்பு:
நபர்-1:என்ன மச்சான் ரொம்ப நாளா 
மெசேஜே காணும்?
நபர்-2:மாப்ள சத்தியமா 
நான் எடுக்கலடா, 
நல்லா தேடி பாருடா இருக்கும்.
நபர்-1:?!?!?!??!!?

பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


7 comments:

  1. அப்படியா அச்சரியமான தகவல்...

    ReplyDelete
  2. கொசுறு செய்திகளும் திகைக்க வைக்கிறது...


    நகைச்சுவை குரும்பும் அழகு....
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நன்றி கவிதை வீதி சௌந்தர் அவர்களே...!!!

    ReplyDelete
  4. வாழைபழ காமடி போய், வாழைதொல் மருத்துவம் வந்துருச்சு, பலே,,

    இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
    http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

    ReplyDelete
  5. பயனுள்ள தகவலைத் தந்ததமைக்கு நன்றி
    கொசுறுத் தகவலும் அருமை
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி ரமணி

    ReplyDelete
  7. Appa kadaiku poi ini thol mattum vaanguna pothumae nanba.....[வாழையடி வாழையாக என்று சும்மாவா சொன்னங்க
    ]

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...