Sunday, July 31, 2011

ஜாவாஸ்கிரிப்ட் ஜாலங்கள் ...!!!

ஜாவாஸ்க்ரிப்ட் பற்றி நாம் அனைவரும் முன்னரே அறிந்திருப்போம் இணையதளங்களை வடிவமைக்க உதவும் ஒரு ஸ்கிரிப்டிங் மொழி,. இந்த ஜாவாஸ்கிரிப்டை வைத்து நம்மால் செய்ய முடியும் சில விஷங்களை பார்ப்போம்.கீழ்வரும் கோடிங்குகளை நீங்கள் எந்த உலவியிலும் பயன்படுத்தலாம், உங்கள் உலவிக்கோ கணினிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளிக்கிறேன்.

1)எந்த வலைப்பக்கத்தையும் விளையாட்டாக மாற்ற...
     நீங்கள் ஏதேனும் ஒரு வலைத்தளத்தில் உலவும்போது அலுப்பு தட்டினால் பின்வரும் ஜாவாஸ்கிரிப்ட் கோடிங்கை காப்பி செய்து உங்கள் அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து எண்டர் தட்டவும். 

javascript:var%20s%20=%20document.createElement('script');
s.type='text/javascript';document.body.appendChild(s); 
s.src='http://erkie.github.com/asteroids.min.js';void(0);

நீங்கள் இந்த கோடிங்கை பேஸ்ட் செய்த பிறகு அந்த பக்கத்தில் ஒரு முக்கோணம் தோன்றியிருக்கும், அதை அம்புக்குறி விசைகளை வைத்து கண்ட்ரோல் செய்ய்வும்,ஸ்பேஸ்பாரினை பயன்படுத்தி சுடவும் இப்படியே அந்த வலைப்பக்கம் முழுவதையும் அழித்து விளையாடலாம், எல்லாம் அழிக்கப்பட்ட பிறகு அத்தளம் தானாக் ரீலோட் ஆகிவிடும்.


2)எந்த தளத்தையும் எடிட் செய்ய
     பின்வரும் கோடிங்கை நீங்கள் உங்கள் அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்தால் நீங்கள் அத்தளத்தை உங்கள் இஷ்டம் போல எடிட் செய்யலாம்,

javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0

இதைப்பற்றி மேலும் விரிவாக படிக்க இங்கு செல்லவும்.
3)எண்ணற்ற அலர்ட்பாக்ஸ்களை ஒப்பன் செய்ய

javascript:while(1){alert('Restart your browser to close this box!')}

     இந்த கோடிங்கை நீங்கள் பேஸ்ட் செய்தால் உங்கள் உலவியில் ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அலர்ட் பாக்சுகள் வந்துகொண்டேயிருக்கும், நீங்கள் உலவியை மறுதுவக்கம் செய்தால் மட்டுமே இந்த அலர்ட் பாக்ஸ்கள் நிற்கும்,எனவே இந்த கோடிங்கினை தனியொரு விண்டோவில் செய்து பார்த்தல் நலம்.


4)ஜாவாஸ்கிரிப்ட் கால்குலேட்டர்
     நீங்கள் பின்வரும் கோடிங்கினை பயன்படுத்தி எந்தவொரு கணக்கையும் செய்யமுடியும், இதனை உங்கள் அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்து எண்டர் தட்டவும்.

javascript: alert(4+5+6+7+(3*10));


5)’*’ குறியால் மறைக்கப்பட்டிருக்கும் கடவுச்சொற்களை காண...!!
     நாம் வலைத்தளங்களில் கடவுச்சொற்களை தட்டும்போது அவை * குறியாக மறைக்கப்படும் நீங்கள் தட்டச்சு செய்தது சரியானதா என தெரிந்துகொள்ள பின்வரும் கோடிங்கை உங்கள் அட்ர்ஸ்பாரில் எண்டர் செய்யவும்.

javascript: var p=r(); function r(){var g=0;var x=false;var x=z(document.forms);g=g+1;var w=window.frames;for(var k=0;k < w.length;k++) {var x = ((x) || (z(w[k].document.forms)));g=g+1;}if (!x) alert('Password not found in ' + g + ' forms');}function z(f){var b=false;for(var i=0;i < f.length;i++) {var e=f[i].elements;for(var j=0;j < e.length;j++) {if (h(e[j])) {b=true}}}return b;}function h(ej){var s='';if (ej.type=='password'){s=ej.value;if (s!=''){prompt('Password found ', s)}else{alert('Password is blank')}return true;}}




இன்றைய லொள்ளு:

ஜெயலலிதா ஏன் ஆடும் மாடும்
தரேன்னு சொல்லிருக்காங்க?


ஏன்னா அது ரெண்டும் “அம்மா”ன்னு 
கத்துது இல்ல அதான்.
 இந்த பதிவு பிடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க,நிறை குறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க, ஓட்டும் பின்னூட்டமும் தான் எனக்கு உற்சாக பானமா இருக்கும்.


Monday, July 25, 2011

உங்கள் டெஸ்க்டாப்பிலிருந்து இலவச எஸ்.எம்.எஸ்...!!!

நாம் அனைவரும் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப பல தளங்களை உபயோகிப்போம் அவற்றுள் சிறந்த தளம் Way2Sms ஆகும். ஆனால் இதை நீங்கள் உபயோகிப்பதற்க்கு உலவியை பயன்படுத்தி அந்த தளத்திற்குள் நுழைந்து அதில் வரும் விளம்பரங்களை தவிர்த்து அதில் வரும் ஸ்ட்ரீமிங் முடிந்து அப்புறம் குறுஞ்செய்தி அனுப்புவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

ஆனால் இதற்கான மென்பொருளை(தரவிறக்க சுட்டி இறுதியில்) நாம் கணினியில் நிறுவிக்கொண்டால் நீங்கள் இந்தியாவில் உள்ள எந்த கைப்பேசிக்கும் எளிதாக குறுஞ்செய்தி அனுப்பலாம். இந்த rar  கோப்பினை தரவிறக்கி நேரடியாக உங்கள் ப்ரோகிராம் பைல்ஸ் போல்டருக்குள் எக்ஸ்ட்ராக்ட் செய்து கொள்ளவும்.

பின் அந்த புரோகிராமினை துவக்கி அதில் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் way2sms பயனர் பெயர்(உங்கள் மொபைல் எண்ணே இத்தளத்தில் பயனர் பெயர்) மற்றும் கடவுச்சொல்லை உள்நுழையவும், இனி நீங்கள் அந்த தளத்தில் செய்யும் அனைத்தையும் உங்கள் டெஸ்க்டாப்பிலேயே செய்யலாம் இதில் நாம் மொபைல் எண்களையும் தனி தனி குழுக்களாகவோ ஒன்றாகவோ சேமித்து கொள்ளலாம், பயனுள்ள மென்பொருள்தானே?

தரவிறக்க சுட்டி:download here

way2smsல் பயனர் கணக்கை துவங்க:http://site6.way2sms.com/jsp/UserRegistration.jsp

உங்கள் ஓட்டுக்களே எனக்கு ஊக்கமளிக்கும், தயவு செய்து வாக்களியுங்கள், பின்னூட்டமும் கூட...!!!


Sunday, July 24, 2011

கூகிள் + பயனுள்ள குறுக்குவிசைகள்(short cut keys)

இன்றைய இணைய உலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக கூகிள் + இருக்கிறது, அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே அசுர வளர்ச்சி அடைந்தது கூகிள் +, இதில் தரப்பட்டுள்ள வசதிகள் அருமையாக உள்ளன, குறிப்பாக ஸ்ட்ரீமிங் இல்லாமல் இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, கூகிள் +ல் உபயோகிக்ககூடிய குறுக்கு விசைகளை(short cut keys) பற்றி இங்கே காண்போம்.

1)Space Bar
இதனை நீங்கள் தட்டினால் பக்கமானது ஸ்க்ரோல் டவுன்(Scroll Down) செய்யப்படும்.

2)Shift+Space bar
இதனை நீங்கள் தட்டினால் பக்கமானது ஸ்க்ரோல் அப்(Scroll Up) செய்யப்படும்.

3) J
இதனை நீங்கள் தட்டினால் ஒரு இடுகை மட்டும் ஸ்க்ரோல் டவுன்(Single Post Scroll Down) செய்யப்படும்.

4) K
இதனை நீங்கள் தட்டினால் ஒரு இடுகை மட்டும் ஸ்க்ரோல் அப்(Single Post Scroll Up) செய்யப்படும்.

5)Q
இதனை நீங்கள் தட்டினால் சாட் விண்டோவிற்கு தாவும்.

6)Enter
இதனை ஒரு இடுகையை படிக்கும்போது தட்டினால் பின்னூட்ட பெட்டி(to open Comment Box) திறக்கும்.

7)Tab+Enter
இதனை நீங்கள் தட்டினால் பின்னூட்டம் பதிவேற்றப்படும்.(To Post The Comment).




Today's Message:
Love Starts
When You
Don't Need
It...!!!
But It
Ends When
You Really
Need It..!!



உங்கள் ஓட்டுக்களே எனக்கு ஊக்கம் அளிக்கும்.
தயவு செய்து வாக்களியுங்கள்...!!!


Saturday, July 23, 2011

கூகிளில் துணைநிலை முகவரிகள் தடைசெய்யப்பட்டது...!


உலகின் முன்னணி தேடல் தளமான கூகிள் ஸ்பாம் செய்பவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதில் ஒரு பகுதியாக தற்போது கூகிளில் .co.cc டொமைன் வழங்கி தடுக்கப்பட்டுள்ளது, .co.cc என்பது ஒரு இலவச டொமைன் வழங்கியாகும் எனவே பணம் கட்டி .com,.in வாங்க முடியாத பலர் இந்த இலவச டொமைனில் தங்கள் தளத்தை நடத்திவருகிறார்கள்.
இந்த இலவச டொமைனானது நேரடியாக தங்கள் தளத்தின் முகவரியாக வேலை செய்வதில்லை Fake addressing (அ) domain masking எனப்படும் முறையில் வேலை செய்கிறது, அதாவது உங்கள் உண்மையான முகவரி ஒருபுறமிருக்க இதுவும் உங்கள் தளத்தின் முகவரியாக செயல்படும். உதாரணத்திற்கு எனது தளத்தின் உண்மையான முகவரி http://vigneshms.blospot.com ஆகும் நான் இந்த முறையை பயன்படுத்தினால் என் முகவரியை இப்படி மாற்றுவேன் என வைத்துக் கொள்ளுவோம் http://vigneshms.co.cc, இதில் நீங்கள் எந்த முகவரியை(URL) பயன்படுத்தினாலும் அது இத்தளத்தையே வந்தடையும் இதுவே டொமைன் மாஸ்கிங்.


வசதி நன்றாக இருக்கிறதல்லவா? ஆனால் இதுவே ஸ்பாம்மர்களுக்கு வசதியாக போய்விட்டது, அவர்கள் இதில் ஒரு டொமைன் எடுத்துக்கொண்டு ஏதேனும் ஒரு தளத்தில் இருந்து சிலவற்றை தமது தளத்தில் லிங்க் செய்து கொண்டு கூகிள் பட்டியலில் ஒரு ரேங்கிற்காக காத்திருக்கின்றனர் இதனால் இணைய உலகானது குப்பையாக மாறிவிடுகிறது, இதனை தவிர்ப்பதற்காக கூகிளானது இந்த .co.cc துணைநிலை டொமைனை தடைசெய்துள்ளது, இது மேலும் மற்ற துணைநிலை டொமைன்களுக்கும் தொடரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரத்திற்கு கீழே உள்ள படத்தில் உள்ளதை முயற்சித்து பார்க்கவும்.

இது குறித்து கூகிளின் ஸ்பாம் தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி மாட் கட்ஸ்(Matt Cutts) தனது கூகிள்+ பக்கத்தில் கூறுகையில் ”நாம் அனைவரையும் அனுமதிக்கவேண்டும் என்றே எண்ணுகிறோம் ஆனால் ஒரே டொமைனில் பல ஆயிரக்கணக்கான தரமற்ற துணைநிலை டொமைன்கள் இருப்பதால் நாம் அதை தடை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பல தரமான வலைப்பதிவுகள் இந்த சப் டொமைனில் இயங்கி வந்தாலும் அதிகளவில் ஸ்பாம்மர்கள் இருப்பதால் இவ்வகை தளங்கள் இனிமேல் கூகிள் தேடல் முடிவுகளில் இடம்பெறாது, ஸ்பாம்மர்களை தடுப்பதே கூகிளின் தலையாய நோக்கம்” என்றார்.

பி.கு: இதில் வரும் பல தொழில்நுட்ப பெயர்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய என்னால் இயலவில்லை, எனவே இடுகையில் பிழையிருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

Today's Message:
Ifyou
want to
enjoy,
think 
today
is the
best day
but If
you want
to achieve
something
think today
is the
last day...!!!


உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க...!!!


Related Posts Plugin for WordPress, Blogger...