Wednesday, August 31, 2011

பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க கடிதம்...!!!

 
ங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர் ஒரு அரசியல்
தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு
அரசியல் தலைவரின்
விதவை இருக்கவேண்டும், குறைந்தபட்சம் இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு,
உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான
உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும்..

இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக
நடித்திருக்க வேண்டும்; மேலே
சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர்
சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ “தமிழீழம்” வென்றெடுப்பது
ஒன்றுதான் தீர்வு என்பதை இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, அந்த
இலட்சியத்தித்தை எந்தவொரு சூழ்நிலையிலும், எதற்காகவும் விட்டுக்
கொடுக்காதவன் நீ.

இவ்வாறு ஏற்றுக் கொண்ட
இலட்சியத்தில்
இன்றுவரை உறுதியாக, நேர்மையாக இருக்கின்ற காரணத்தினால் உன்னை உலகம்
முழுவதும் உள்ள தமிழர்கள் “தமிழீழத் தேசியத் தலைவர்” என்று அன்போடு
அழைக்கிறார்கள்.

இப்படி உலகத் தமிழர்களே ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தமிழ்நாட்டுத்
தலைவர்களுக்கு உரிய எந்தவொரு தகுதியும்
இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? பொதுவாக எங்கள் நாட்டில் நேர்மை,
ஒழுக்கம் என்பதெல்லாம் தொண்டர்களுக்கும், பொது
மக்களுக்கும்தான்.

அரசியலுக்கு வரும்போது அன்றாட உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் அல்லல்
பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள் என்றாலும், இன்றைக்கு அவர்கள்
பல்லாயிரம்
கோடிகளுக்கு
அதிபதிகள். ஆனால் நீயோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின்
தலைவனாக இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் உனக்குச் சொத்துக்கள் இல்லை.
ஆடம்பர
மாளிகைகள் இல்லை. அட சுவீஸ் வங்கியில்கூட உனக்கு ஒரு கணக்கு இல்லையே.
அதுதான் போகட்டும்! மது, புகை என்று உனக்கு ஒரு பழக்கமும் இல்லையாமே.

அதுமட்டுமல்ல! உன் இயக்கத்தில்
இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கங்கள் கூடாதென்று கட்டுப்பாடாமே!
இதுவெல்லாம் பரவாயில்லை. உனக்கு ஒரேயொரு மனைவிதான் என்று உறுதியாகச்
சொல்லுகிறார்களே! எங்களைப் பொறுத்தவரை தலைவன் என்றால், குறைந்தது இரண்டு
மனைவிகள்
; அங்கங்கே பல தொடர்புகள் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? எங்கள் வாழும் வள்ளுவரின்
மகளுக்கும், மகன்வழிப் பேரனுக்கும் ஒரே வயதுதான். எங்களுக்கு அதில்
எவ்வளவு பெருமிதம் தெரியுமா? ஆனால் உனது மூத்த மகனுக்கும் அடுத்த
மகனுக்கும் உள்ள இடைவெளி பத்து வருடங்கள் என்கிறார்கள்.

இந்த பத்து வருடங்களும், ஈழ விடுதலைப் போராட்டம் மிகவும் நெருக்கடியில்
இருந்த காலகட்டம் என்றும், உனது பிள்ளைகளுக்கிடையே உள்ள இந்த வயது
வேறுபாடு, அந்தக் காலகட்டத்தில், நீயும், உன் மனைவியும், சாதாரண கணவன்,
மனைவி என்ற உறவையும் கடந்து, போராளிகளோடு, போராளிகளாய் போர்க்களத்தில்
நின்றதை உணர்த்துகிறது.

இப்படி தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சொந்த
சுகதுக்கங்களை மறந்து, போராட்டத்தில் ஈடுபடுபவன் ஒரு தலைவனா?
நீ எப்படி தலைவன் ஆனாய்?

சிங்கமே வா! புலியாய் புறப்படு! இருப்பது ஓர் உயிர்! அது தமிழுக்காக
போகட்டும்! தமிழனுக்காக போகட்டும்! இப்படியெல்லாம் மேடையில் பேசுவதோடு
நின்றுவிட
வேண்டும். அதுதான் தலைவனுக்கு அழகு!

அதிகம் போனால், காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே
உண்ணாவிரதம் இருக்கலாம்!
ஏன் ஆயுதப் போராட்டத்திற்கும் கூட ஒருவன் தலைமை ஏற்கலாம். ஆனால், போர்
நடக்கின்ற இடத்தில் கூட அல்ல, நாட்டிலேயே இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு
வெளிநாட்டில் சுகமாக மனைவி, பிள்ளைகளோடு இருந்து கொண்டு, போராட்டத்தை வழி
நடத்த வேண்டும்.

அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு! ஆனால் பாவி நீ செய்தது என்ன?
தாய்த்தமிழகத்தில்
தங்கியிருப்பதுக்கூட, மற்றவர்கள் உனது விடுதலை இயக்கத்திற்கு
கட்டுப்பாடுகள் விதிக்க காரணமாகவிடும் என்று, களத்திற்கு
சென்றுவிட்டாய். சென்றது சென்றாய்! தனியே செல்லக்கூடாதா? உன்
மனைவியையும், பிள்ளைகளையும் கூட விட்டுசெல்லவில்லையே!

எங்கள் தலைவர்களை பார்! வாரிசுகள் என்று வந்துவிட்டால், சின்னவீடு,
பெரியவீடு என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரு பதவி!
அனைவருக்கும் ஒரு அடைமொழி!
இதையெல்லாம் கற்றுக்கொள்ளாத நீ எப்படித் தலைவன் ஆனாய்! தற்கொலைப்
படையில் முதல் பெயர் உன் பெயர்! கழுத்தில் கட்டப்படும் நச்சுக்
குப்பிக்கும் நீ விதிவிலக்கல்ல! காடுதான் உறைவிடம் என்று ஆன
பிறகு, உணவிலும் கூட உனக்கும், இதர போராளிகளுக்கும் இடையே பாகுபாடு இல்லை.

இவையெல்லாம் போகட்டும்! வீட்டுக்கொருவரை இயக்கத்திற்கு தாருங்கள்
என்றாய். தந்தார்கள் ஆயிரக்கணக்கில். தங்கள் பிள்ளைகளைத் தந்தவர்கள்
எல்லாம் தாங்கள் போரில் ஈடுப்பட இயலவில்லையே என்ற ஆதங்கத்தில்
தந்தார்கள். தமிழீழ விடுதலைக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட உன்னிடம்
யார் கேட்டார்கள்?
பாவி! உன் மூத்தப்பிள்ளையை, இனித் திரும்பமாட்டான் என்று
தெரிந்தும் களத்திற்கு அனுப்பினாயே! எப்படித் துணிந்தாய்? மொத்த ஈழத்
தமிழினமும் இன்று முள்வேளிக்குள் அகதிகளாய் அடைப்பட்டு
இருக்கிறது.

போகட்டும்! அதன் தலையெழுத்து அப்படி! ஆனால் உன் வயதான தந்தையையும்,
தாயையும் மற்ற அகதிகளோடு, அகதிகளாய் விட்டு வைத்திருக்கிறாயே? ஏனய்யா
இப்படி! உன்னைப் போன்ற உறுதியும், வீரமும் மிக்க தியாக உள்ளம் படைத்த
ஒருவன் பிறப்பதற்கு யோக்கியதை உடைய இனம் இந்தத் தமிழினம் அல்லவே!

எங்களுக்கு திரைப்படங்களே வாழ்க்கையாகிப் போயின! தேர்தல்களோ
திருவிழாக்கள் ஆகிவிட்டன! உனது அருமை நமது மக்களுக்கு இன்றைக்கு
முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ஆனால் உன்னைப் பற்றிய சரியான
மதீப்பீட்டை வரலாறு சரியாகவேச் செய்யும். இன்றைக்கு உன்னையும் உனது
இயக்கத்தையும் ஒழித்துக்கட்டி விட்டதாக இறுமாந்து நிற்கும் இனவெறி
நாய்களும், அவர்களுக்கு உதவி செய்த
குள்ளநரிக்கூட்டமும் இன்றைக்கு வேண்டுமானால், மனம் மகிழ்ந்து, தங்களைத்
தாங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளாலாம்.

ஆனால் எதிர்கால சரித்திரமோ, இந்த இனவெறியர்களையும், இணைந்து நின்ற
குள்ளநரிகளையும், நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள் சொந்த இனத்தையே
காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது, தன் இன
விடுதலைக்காய், தன்
இனத்தின் சுதந்திரமான, சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய் போராடிய உன்னை
“மாமனிதன்” என்று என்றென்றும் பாராட்டும்.

ஏனென்றால் மரணம் என்பது தன் பெண்டு. தன் பிள்ளை, தன் குடும்பம் என்று
வாழும் தற்குறிகளுக்குத்தான். உன்னைப்போன்ற மாமனிதர்களுக்கு மரணம் என்பது
இல்லை. நீ இருந்தாலும், இல்லையென்றாலும், இனி, தன் இன விடுதலைக்காக
உலகில் எந்த இனம், எங்கு போராடினாலும், அந்தப்
போராட்டத்திற்கு அடையாளமாக இருக்கபோவது உன் முகம்தான்!

வாழ்க நீ எம்மான்!

“தாய்த் தமிழ்நாடு"

நண்பர் ஒருவருக்கு வந்திருந்த மின்னஞ்சலில் இருந்து எடுக்கப்பட்டது...


அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்...

டிஸ்கி:எனக்கு பல்கழைக்கலக பொதுத்தேர்வுகள் நெருங்கிவிட்டதால் நேரம் கிடைப்பதில்லை, எல்லோருடைய பதிவையும் படிக்கிறேன் ஆனால் யாருக்கும் பின்னூட்டமிட நேரமில்லை, எனவே தவறாக நினைக்க வேண்டாம்.


பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறை குறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...!!!
Friday, August 26, 2011

உங்கள் நெருப்புநரியின் வேகத்தை அதிகப்படுத்த...!!!

ன்று அதிகமானோர் பயன்படுத்தும் உலவி நெருப்புநரி, இது பிரபலம் அடைய காரணம் இதன் வளைந்துகொடுக்கும் தன்மை மற்றும் நீட்சிகளாகும். இதில் சில அமைப்புகளை மாற்றுவதன் மூலம் நமது இணைய வேகத்தை அதிகப்படுத்தலாம், அது எவ்வாறு செய்வது என்று இப்போது பார்ப்போம்.


படி-1: உங்கள் உலவியின் அட்ரஸ் பாரில் about:config என்று டைப் செய்து எண்டர் கொடுங்கள்..


படி-2: கீழே உள்ளது போல ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றும் அதில் I'll be careful என்பதனை க்ளிக் செய்திடுங்கள்.

  
படி-3: இப்போது தோன்றும் விண்டோவில் Filter  என்ற இடத்தில் network.http என்று டைப் செய்யவும்.


படி-4: இப்போது தெரியும் செட்டிங்குகளில் பின்வருவனவற்றை அதில் உள்ளவாறு மாற்றியமைக்கவும்.
  •  “network.http.pipelining” என்பதை “true” என்று செட் செய்யவும்.
  •  “network.http.proxy.pipelining” என்பதை “true” என்று செட் செய்யவும்.
  • network.http.pipelining.maxrequests” என்பதை 30 என்று செட் செய்யவும்.
இதனை செய்வதற்கு நீங்கள் அந்த செட்டிங்குகளீன் மீது டபுள் க்ளிக் செய்தால் போதும்.

படி-5: அதே விண்டோவில் ஏதேனும் ஒரு இடத்தில் ரைட் க்ளிக் செய்து அதில் New-->Integer என்பதை தேர்வு செய்து தோன்றும் ஒரு விண்டோவில் பின்வருமாறு டைப் செய்யவும் nglayout.initialpaint.delay. பின் அதன் மதிப்பை 0 என்று கொடுக்கவும்.


அவ்வளவுதான் உங்கள் உலவியை மறுதுவக்கம் செய்து பாருங்கள் உங்களுக்கே மாற்றம் தெரியும்.

டிஸ்கி-1: இந்த முறையானது நீங்கள் ப்ராட்பேண்ட் இணைப்பு வைத்திருந்தால் மட்டுமே பயன்படும், டையல் அப் இணைப்பு வைத்திருப்போருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் எனவே இதனை ப்ராட்பேண்ட் பயனர்கள் மட்டும் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்...

பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறை குறைகளை தயங்காமல் பின்னூட்டத்தில் சொல்லுங்க...!
Tuesday, August 23, 2011

விண்டோஸ் 7 மறைந்திருந்த புதிய வசதி

விண்டோஸ் 7 இயங்கு தளம் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம் இதில் எல்லா வசதிகளும் உள்ளன, இதில் நமக்கு தெரியாத புதிய வசதி ஒன்று உள்ளது அதுதான் நாம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் ஒரு தீமை உருவாக்கி அதனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதனை எப்படி செய்வது என்று இப்பதிவில் காணலாம்.

படி-1:


முதலில் உங்கள் டெஸ்க்டாப்பில் ரைட் க்ளிக் செய்து Personalization என்பதை தேர்ந்தெடுங்கள்.

படி-2:


தோன்றும் விண்டோவில் கீழே சென்று அதில் இருக்கும் Desktop Background என்பதை தேர்வு செய்யுங்கள்.

படி-3:
அதில் இருக்கும் Browse என்பதை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்தமான படங்களினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
படி-4:

படங்களை தேர்வு செய்த பிறகு எண்டர் அழுத்துங்கள் உங்கள் தீம் இப்பொழுது உங்களுக்கு இயங்கியிருக்கும், அதே விண்டோவின் கீழ் பகுதியில் Sounds என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு விருப்பமான ஒலிகளையும் நீங்கள் அதில் சேர்த்துக்கொள்ளலாம். (நீங்கள் சேர்க்கும் ஒலி .wav என்ற பார்மட்டில் இருக்கவேண்டும்).

படி-5:

அந்த தீமின் மேல் ரைட் க்ளிக் செய்து Save Theme For Sharing என்பதனை க்ளிக் செய்யவும், தோன்றும் விண்டோவில் சேவ் செய்வதற்கான இடத்தை தெரிவு செய்யவும், அவ்வளவுதான் இனி உங்களின் தீம் கோப்பு தயார் இதை நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம், உங்கள் தளத்தில் பயனர்களுக்காக பதிவேற்றம் செய்யலாம்.


பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


 


Sunday, August 21, 2011

போட்டோஷாப் பாடம்...!


 போட்டோ எடிட்டிங் மென்பொருட்களை பயன்படுத்துவது நாம் அனைவருக்கும் இன்றியமையாததாகிவிட்டது, போட்டோஷாப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற எனது நீண்டநாள் ஆசைக்காகவே இப்பதிவு. போட்டோஷாப் / கிம்பில் செலக்டிவ் கலரிங்(எனக்கு பிடித்த எபெட்டுகளில் ஒன்று) செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.

செலக்டிவ் கலரிங் என்பது ஒரு படத்தில் குறிப்பிட்ட இடத்தை மட்டும் உண்மை நிறத்துடனும் மற்ற இடங்களை எல்லாம் கருப்பு வெள்ளையாகவும் மாற்றி அந்த படத்திற்கு மெருகூட்டுவதாகும். இதனை செய்வதற்கு இரண்டு முறைகள் இருக்கின்றன அவை லேயர் மாஸ்க் முறை மற்றும் எரேசர் பயன்படுத்தும் முறையாகும்.

1)லேயர் மாஸ்க் முறை:

படி-1:இதற்கு முதலில் போட்டோஷாப்/அல்லது கிம்பில் உங்களுக்கு தேவையான படத்தை திறந்துகொள்ளுங்கள்.


படி-2:திறந்த பிறகு CTRL+J அழுத்துவதன் மூலம்அதனை டூப்ளிகேட் செய்துகொள்ளவும்.படி-3:டூப்ளிகேட் செய்த லேயரினை லேயர் பாலட்டில் தேர்வு செய்துகொண்டு IMAGE-->ADJUSTMENTS-->DESATURATE என்பதனை தெரிவு செய்து அந்த லேயரை மட்டும் கருப்பு வெள்ளையாக மாற்றவும்.படி-4:பிறகு அந்த லேயரில் மேலே படத்தில் ’1’ என்று குறிப்பிட்டுள்ள இடத்தை க்ளிக் செய்து லேய்ர் மாஸ்கினை சேர்க்கவும், படத்தில் ’2’ குறிப்பிட்டுள்ள இடத்தை க்ளிக் செய்து தோன்றும் கலர் பாலட்டில் வெள்ளை நிறத்தை தெரிவு செய்து ஓகே என்பதை க்ளிக் செய்யவும்.படி-5:இப்போது ஃபோர்கிரவுண்ட் கலரினை(FOREGROUND COLOR) கருப்பாக செலக்ட் செய்து கொண்டு நீங்கள் படத்தில் எந்த இடத்தை உண்மை நிறத்தை காட்ட வேண்டுமோ அந்த இடத்தில் ப்ரஷ்ஷின் மூலம் அந்த இடத்தினை பெயிண்ட் செய்யவும், அந்த இடம் மட்டும் படத்தில் ‘2’ என்ற இடத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பழைய நிறத்தை அடையும் மற்ற இடங்கள் கருப்பு வெள்ளையாக தோற்றமளிக்கும்.படி-6:இவ்வாறு பெயிண்ட் செய்யும்போது தேவையில்லாத இடங்களில் உங்கள் பிரஷ் பட்டு நிறமாறுதல் படத்தில் ‘2’ என்று குறிப்பிட்டுள்ளவாறு ஏற்பட்டுவிட்டால் பார்கிரவுண்ட் கலரினை வெள்ளையாக மாற்றிக்கொண்டு அந்த இடத்தை பிரஷ் மூலம் பெயிண்ட் செய்யுங்கள் அது கருப்பு வெள்ளையாக மாறிவிடும், இப்போது செலக்டிவ் கலரிங் படம் தயார்.2):எரேசர் மூலம் செய்யும் முறை:
இதற்கு முந்தைய முறைக்கும் சிறிய வித்தியாசம்தான், இந்த முறையில் நீங்கள் செய்வதற்கு லேயர் மாஸ்க் சேர்ப்பதற்கு முந்தைய படி-3 வரை அப்படியே செய்யவும்.படி-2:பின்னர் எரேசர் டூலை செலக்ட் செய்துகொண்டு கலரிங் செய்யவேண்டிய இடத்தை மட்டும் அதன் மூலம் அழிக்கவும், இப்படியும் செலக்டிவ் கலரிங் செய்யலாம். ஆனால் இந்த முறையில் தவறாக கலரிங் செய்து விட்ட இடத்தை சரி செய்வது சற்று கடினம், நான் பரிந்துரைப்பது லேயர் மாஸ்க் முறையேயாகும்.

செலக்டிவ் கலரிங்கிற்கு முன்னர்:
 செலக்டிவ் கலரிங்கிற்கு பின்னர்:

இந்த ஒரு சிறிய விஷயத்தை பற்றி எழுதவே எனக்கு மிக அதிக நேரமாகிவிட்டது, எவ்வளவோ பெரிய விஷயங்களையெல்லாம் தங்களின் பொன்னான நேரத்தை செலவழித்து நமக்கு கற்றுத்தரும் போட்டோஷாப் பதிவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன், வளர்க உங்கள் சேவை.
நான் படிக்கும் போட்டோஷாப் பதிவுகள்:


பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க,நிறைகுறைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.


Saturday, August 20, 2011

உங்கள் உலவிக்கான சூழலை நீங்களே உருவாக்க...

நாம் அனைவரும் பல உலவிகளை பயன்படுத்தி வருகிறோம் அவற்றுக்கான சூழல்களை பல இடங்களிலிருந்து தரவிறக்கி பயன்படுத்தி வருகிறோம், அதைவிட நமது உலவிக்கான சூழலை நாமே நம் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைத்தால் எப்படி இருக்கும், அதற்கு உதவி செய்வதே இந்த தளமாகும்.

இதற்கு பெரிய அளவிலான புரோகிராமிங் திறமை எதுவும் தேவையில்லை, படங்களை தரவேற்றம் செய்து தேவையான நிறங்களை தேர்வு செய்தால் போதும் இதில் உங்கள் வலைப்பூவின் லோகோவினை இணைத்து அதில் உங்கள் தளத்திற்கு லிங்க் கொடுக்கலாம், இதனால் இந்த சூழலை உபயோகிப்பவர் உங்கள் தளத்திற்கு வர அதிக வாய்ப்பு உண்டு,

சூழல் உருவாக்கும் தளத்தின் முகவரி: https://bt-engage.com

     1)இங்கு சென்று உங்களுக்கான ஒரு பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள் இரண்டு நிமிடத்தில் முடித்துவிடலாம்.

   
2)பின்னர் Create a new theme என்பதை க்ளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளதை போன்ற திரை வரும் அதில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்யவும்.
     3)இப்போது finish என்பதை க்ளிக் செய்தால் உங்களின் சூழல் தயாராகிவிடும் அடுத்து அதை மற்றவருடன் பகிரும் பக்கத்திற்கு செல்லும், இந்த முகவரியை எடுத்து உங்களுக்கு வேண்டிய இடத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான் செய்த ஒரு முன்னோட்ட சூழல் உங்களுக்காக:இங்கே...!


தமிழ் இணைய உலகை வளர்க்க தேடுபொறிகளில் தமிழ் மொழியில் தேடுங்கள்...!


 

 ஜோக்: தண்ணி அடித்துவிட்டு பசங்க உளறும்  வார்த்தைகள்:


 மாப்ள நான் ஃபுல் ஸ்டெடிடா.

நான் வண்டி ஓட்டுறேண்டா.

எனக்கு எவ்வளவு அடிச்சாலும் ஏறாதுடா.

நான் போதையில் உளர்றேன்னு மட்டும் நினைக்காதடா

இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்டா

நான் உனக்காக உயிரையும் கொடுப்பேண்டா

உச்சகட்ட டையலாக்ஸ்:

நாளைல இருந்து குடிக்கவே மாட்டேண்டா

இந்த பொண்ணுங்கள நம்பவே கூடாது மச்சி...பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப் போடுங்க, நிறை குறைகளை கண்டிப்பாக பின்னூட்டத்தில் சொல்லுங்க...!Friday, August 19, 2011

மொபைலுக்கான பேஸ்புக் அப்ளிகேஷன்...

நாம் இத்தனை நாளாய் பேஸ்புக்கினை கைப்பேசியில் பயன்படுத்துவதற்கு மூன்றாம் தரப்பு மென்பொருட்களையே பயன்படுத்தி வந்தோம் இந்நிலையில் பேஸ்புக் நிறுவனமானது ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் (IOS) இயங்கு தளத்திற்கான பேஸ்புக் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.இதனை நாம் Android Market அல்லது App Storeலிருந்து தறவிரக்கம் செய்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் பல வசதிகளை கொண்டுள்ளது.

  • இதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் உரையாடலாம்

  • இதன்மூலம் நீங்கள் உங்கள் செய்திகளை பார்க்கலாம்

  • இதில் நீங்கள் உங்கள் நோட்டிஃபிகேஷன்களை பார்க்கலாம்

  •  மேலும் இதில் குழு அரட்டை, இடப்பகிர்தல் மற்றும் படங்களை இணைக்கும் வசதியும் உள்ளது.

  • இதில் உள்ள மிக முக்கியமான வசதி நீங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் பேஸ்புக்கில் இல்லாத உங்கள் நண்பருக்கு குறுந்தகவல் அனுப்பலாம், எனவே நீங்கள் இதனை இலவச குறுந்தகவல் அனுப்பும் அப்ளிகேஷனாகவும் பயன்படுத்தலாம்.

இந்த அப்ளிகேஷனை உங்கள் கைப்பேசிக்கு தரவிறக்கம் செய்ய:


மேஜிக் மேஜிக்: 

66996666666999999666999999666996666996666999966666996666996
66996666669999999969999999966996666996669966996666996666996

66996666666999999999999999666996666996699666699666996666996
66996666666669999999999996666669999666699666699666996666996
66996666666666699999999666666666996666699666699666996666996
66996666666666666999966666666666996666669966996666996666996
66996666666666666699666666666666996666666999966666699999966

மேலே உள்ளவற்றை செலக்ட் செய்யவும்

Ctrl+F அழுத்தி அதில் Highlight All என்பதை தேர்வு செய்து கொள்ளவும்

இப்போது அந்த சர்ச் பாக்ஸில் ’9’ அல்லது ’6’ அழுத்தி தேடவும்.

பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் தயங்காமல் சொல்லுங்கள்...
ஃப்ட்ச்ட்ஃப்ச்ஃப்ச்ஃப்ச்ட்ஃப்


Saturday, August 13, 2011

ஜாவாஸ்கிரிப்ட் ஜாலங்கள்- 2

ணையத்தில் நாம் ஜாவாஸ்கிரிப்ட் வைத்து செய்யமுடியாத காரியங்களே இல்லை எனலாம், அதில் சில ஜாவாஸ்கிரிப்ட் தந்திரங்களை இங்கே காணலாம், ஜாவாஸ்கிரிப்ட் ஜாலங்களின் முந்தைய பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஜாவாஸ்கிரிப்ட் கோடிங்குகள் அனைத்தும் பல படங்களை கொண்டுள்ள தளங்களில் மிக அருமையாக காட்சியளிக்கும், எனவே கூகிள் இமேஜஸ் திறந்து கொண்டு எதாவது ஒரு படத்தின் தேடல் பக்கங்களில் இந்த நிரல்களை சோதித்து பார்க்கவும்.

1)படங்களை வட்டமாக சுற்றவைக்க..
     ஏதேனும் ஒரு வலைப்பக்கத்தில் இந்த நிரலை அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து எண்டர் கொடுத்து பாருங்கள்.

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24;
x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img");
DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style;
DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+"px";
DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',5);
void(0);

 

2)படங்களை காற்றில் பறப்பது போல ஆடவைக்க...
     பின்வரும் நிரல்வரிகளை அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து எண்டர் தட்டவும்

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24;
x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img");
DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style;
DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+ "px";
DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+" px"}R++}setInterval( 'A()',5);
void(0);


 

3)வட்டமாகவும் காற்றில் ஆடுவது போல படங்கள் தெரிய
     இந்த நிரலை அட்ரஸ் பாரில் எண்டர் செய்யவும்..javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24;
x4=300; y4=200; x5=300; y5=200; var DI= document.images; DIL=DI.length;
function A(){for(i=0; i < DIL; i++){DIS=DI[ i ].style;
DIS.position='absolute'; DIS.left=Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5+"px";
DIS.top=Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5+"px"}R++}tag=setInterval('A()',5
);document.onmousedown=function(){clearInterval(tag);for(i=0; i <
DIL; i++){DI.style.position="static";}}; void(0)

4)படங்கள் உங்கள் மவுஸ் பாயிண்ட்ருடன் சேர்ந்து பறக்க...
     பின்வரும் கோடினை அட்ரஸ் பாரில் சேர்த்து எண்டர் செய்யவும்...

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=100; y4=100; var DI= document.images; DIL=DI.length; function A(_X,_Y){for(i=0; i < DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=Math.sin(R*x1+i*x2+x3)*x4+_X+"px"; DIS.top=Math.cos(R*y1+i*y2+y3)*y4+_Y+"px"}R++}document.onmousemove=function(event){_X = event.clientX; _Y = event.clientY; A(_X,_Y);};document.onmousedown=function(){for(i=0; i < DIL; i++){DI.style.position="static";}};void(0)


டிஸ்கி:இது எனது 25 ஆவது பதிவு, இதுவரை எனக்கு ஆதரவு அளித்த வாசகர்களுக்கும் பின் தொடரும் 39 நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி


பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்


செலவில்லாமல் குடிநீரை சுத்திகரிக்க


குடிநீரை சுத்தப்படுத்த இனி பியூரிபையர் தேவையில்லை.
 வாழைப்பழ தோல் போதும். ஆம், குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்:

இன்று குடிநீராக பயன்படும் தண்ணீர், காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் ரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு ரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன் நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன.

இந்நிலையில், தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவது, தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும், அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக் கொள்ளும். எவ்வித ரசாயனப் பொருளையும் சேர்க்கத் தேவையில்லை. தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளைவிட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொசுறு:
 
* 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வகை விலங்குகள் உள்ளன.

* ஆயிரம் வகை ஊர்வன உள்ளன.

* 73 ஆயிரம் வகை சிலந்திகள் உள்ளன.

* 3 ஆயிரம் வகை பேன்கள் உள்ளன.

* 20 கோடி சிறுபூச்சிகள், கிருமிகள் உள்ளன.

* குட்டிபோட்டுப் பாலூட்டும் மம்மல் 4600 வகை உள்ளன.

* 9 ஆயிரம் வகைப் பறவைகள் உள்ளன.

* சிவப்பு மூக்கு கொண்ட குலியா எனும் பறவை தென்ஆஃப்பிரிகாவில் உள்ளது. இவை 100 கோடிகளுக்கு மேல் உள்ளனவாம்.

* இந்து மதத்தில் , எறும்பு முதல் யானை ஈறாக 84 லட்சம் ஜீவராசிகள் என்கிறது கருட புராணம். கடலுக்குள் மட்டுமே 1 கோடி உயிர்கள் உள்ளனவாம்.

* ஈக்களின் ஆயுள் 14 நாள்கள் மட்டுமே.

* நத்தைகளின் முன்பகுதியில் ஆன்டெனாபோல நான்கு நீட்டிக்கொண்டிருக்கும். அந்த உணர்வுறுப்புகளில் நீளமாக இருப்பவை நத்தையின் கண்கள். குட்டையாக இருப்பவை, அதன் இரையை முகர்ந்து அறிந்துகொள்ள உதவும் மூக்கு.

* சுறா மீன்களைஎவ்வித நோயும் தாக்காத வகையில் அதற்கு நோய்த் தடுப்புச் சக்தி உண்டு.

* மீன்களுக்கும், பூச்சிகளுக்கும் கண் இமை கிடையாது; வலிமையான கண் லென்சுகளே, அவற்றின் கண்களைக் காப்பாற்றுகின்றன.

* கோடிக்கணக்கான மரங்கள் உலகம் முழுவதும் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை நட்டது யார் தெரியுமா? அணில்கள்.
* பழத்தைத் தின்றுவிட்டுக் கொட்டைகளை வருங்கால உணவுக்காகப் புதைத்துவைத்து விட்டு - மறந்துவிட்டன. புதைக்கப்பட்டவை முளைத்துவிட்டன.Thursday, August 11, 2011

உஷார்-இது வாழ்க்கை பிரச்சனை


      து ஒரு விழிப்புணர்வு பதிவு.. எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் இருக்கிறது கொஞ்சம் வசதி குறைவான குடும்பமாக இருந்தாலும் மிக நல்ல குடும்பம் அவர்களுக்கு இரண்டு பெண் ஒரு பையன், முதல் பெண்ணிற்கு சுமாரான வசதி படைத்த ஒரு நல்ல இடத்தில் மணம் முடித்தனர், இந்த இரண்டாவது பெண் +2 படித்தவர் பார்ப்பதற்கு நல்ல அழகாக இருப்பார், மிக பணிவானவரும் கூட. அவருக்கு வரன் தேடிக்கொண்டிருந்தனர். அப்போது முன்பின் தெரியாத மிகவும் வசதியான குடும்பம் ஒன்று தரகர் மூலம் இவர்களை நெருங்கியது, இவர்களும் வசதி இருக்கிறதே என்று அக்கம் பக்கம் விசாரிக்காமல் வரனை முடித்துவிட்டனர்.

     திருமணமும் முடிந்து விட்டது, மாப்பிள்ளை மணமேடைக்கு வந்தபோதே காலை தாங்கி தாங்கி நடந்து வந்தார், எப்பொழுதும் ஷூ அணிந்தே இருந்தார்.பெண் வீட்டார் என்ன என்று கேட்டதற்கு காலில் சிறு விபத்தில் காயம் என்று மழுப்பி விட்டார்கள் மாப்பிள்ளை வீட்டார். திருமணம் முடிந்து ஒரு 3 நாட்களுக்கு பிறகுதான் மாப்பிள்ளைக்கு சர்க்கரை நோய் இருப்பதும் அவர் காலில் ஏற்பட்ட புண் சர்க்கரை நோயினால் புரையோடிப்போய் அவரால் சரிவர நடக்க இயலாமல் போனதும் தெரிய வந்துள்ளது.இதை அவர் திருமணத்திற்கு முன்பே பெண்வீட்டாரிடம் கூறிவிடலாம் என கூறிய போது அவர் தாய் வேண்டாமென தடுத்துவிட்டாராம், இந்த விஷயம் கேட்ட அந்த பெண் மிகவும் மனமுடைந்து போய்விட்டார். பின் அவர் சொந்தங்கள் எல்லாம் ஆறுதல்(?)அறிவுரை கூறி தேற்றியதால் தனக்கு கிடைத்தது இதுதான் என புது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்திருக்கிறார்.ஆனால் அந்த மகிழ்ச்சி வெகுநாட்கள் நீடிக்கவில்லை.

     இப்பெண்ணின் கணவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் அவர் இப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவுகள் தர ஆரம்பித்து இருக்கிறார், கணவனிடம் கூறினால் தன்னை தவறாக நினைத்து விடுவாறோ என பயந்து தனக்குள்ளேயே புழுங்கியிருக்கிறார், ஒரு கட்டத்தில் அவர் எல்லை மீறவே தன் பெற்றோரிடம் கூறிவிட்டு அங்கு தங்க மாட்டேன் என அழுதுள்ளார் அவர்கள் நாசூக்காக தங்கள் மருமகனிடம் எடுத்து கூறி பிரச்சனையை சரி செய்துள்ளனர், இது முடிந்த ஓரிரு மாதங்களிலேயே அந்த அண்ணன் புற்றுநோயால் இறந்துவிட்டார்.

     இதற்கு பிறகுதான் உச்சகட்ட கொடுமை அரங்கேறியுள்ளது. திருமணமாகி 5 மாதங்களாகியும் இந்த பெண் கருவுறாததால் அவரை ஒரு மாந்திரிகனிடம் அழைத்து சென்று பரிகாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் அவரின் மாமியார். சாமியார் தனது சித்து வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார், அடுத்த வாரம் நிர்வாண பூஜை செய்ய வேண்டுமென மாமியாரிடம் கூறியிருக்கிறார் அந்த மாந்திரிகன்.மாமியாரும் அடுத்த வாரத்தில் தன் மகனிடம் சாதாரண பூஜை என்று கூறிவிட்டு இப்பெண்ணை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்றிருக்கிறார், இவர் நடுவழியில் அந்த மாமியாரை ஏமாற்றிவிட்டு திக்கு திசையில்லாமல் அழுதுகொண்டே பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறார். பின் இரு கல்லூரி மாணவிகளின் உதவியோடு வீடு வந்து சேர்ந்துவிட்டார்.  

     ஆனால் தவறான ஒரு இடத்தில் மாட்டிக்கொண்ட அவரின வாழ்க்கை கேள்விக்குறியாகவே உள்ளது, இவரின் கணவர் இவரோடு வருவதற்கு தயாரக இருந்தாலும் அவரின் தாயாருக்கு அஞ்சி இவரை பிரிந்து இருக்கிறார்.தங்களின் பெண் வாழ்க்கையை வசதிக்காக வீணடித்துவிட்டோமே என்று நொந்து போய் உள்ளனர் அப்பெண்ணின் பெற்றோர்.

     எனவே முன்பின் தெரியாதவர்களிடம் திருமணம் முடிவு செய்யும்பொழுது அவர்களை பற்றி அக்கம் பக்கம் நன்கு விசாரிக்கவும், அதை விடுத்து கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்த பலனும் இல்லை..

பதிவு பலரை சென்றடைய ஓட்டுக்களை தயங்காமல் அளியுங்கள்...


Wednesday, August 10, 2011

உங்கள் வலைப்பூவில் மவுஸ் கர்ஸரை மாற்ற...!!!

வணக்கம், எப்போதும் ஒரே மாதிரியான விஷயங்களை பார்த்து கொண்டிருந்தால் சற்று அலுப்பு தட்டுவது வழக்கம், அதேபோல எப்போதும் ஒரே மவுஸ் கர்ஸரை வைத்துக்கொண்டிருப்பவர் உங்கள் தளத்தில் மட்டும் வேறு கர்ஸரை பார்த்தால் சற்று உற்சாகமாக படிக்க வாய்ப்பு உண்டு, எனவே நமது வலைப்பூவின் மவுஸ் பாயிண்டரை மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்,


1)முதலில் Dashboard => Design => Edit HTML க்கு செல்லவும்.

2)அதில் Expand Widget Templates என்பதை தேர்ந்தெடுக்கவும்.

3)Ctrl+F  அழுத்துவதன் மூலம் </body> என்ற கோடினை தேடவும்...

4)பின் </body> கோடிங்கிற்கு மேலே பின்வரும் கோடிங்குகளில் ஏதேனும் ஒன்றை பேஸ்ட் செய்யவும்.


Style 1

<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://cur.cursors-4u.net/user/use-1/use32.cur), progress;}</style>

 Style 2

<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://cur.cursors-4u.net/people/peo-7/peo845.cur), progress;}</style>

  
Style 3 
<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://royal-tutor.110mb.com/FRUITY_LIME_HEART-royaltutor.net.cur), progress;}</style>

Style 4

<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://royal-tutor.110mb.com/FRUITY_LEMON_HEART-royaltutor.net.cur), progress;}</style>

Style 5 

<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://royal-tutor.110mb.com/TRANSPARENT_HALO_POINTER-royaltutor.net.cur), progress;}</style>


5)இப்பொழுது உங்கள் டெம்ப்ளேட்டை சேமிக்கவும், இப்பொழுது உங்கள் வலைக்கு சென்று பார்க்கவும்.

இதைப்போன்ற மேலும் பல கர்ஸர்களை பார்த்து தேர்வு செய்ய http://www.cursors-4u.com
என்ற தளத்திற்கு செல்லவும், அங்கு உங்களுக்கு பிடித்த கர்ஸரின் கோடினை காப்பி செய்து மேலே உள்ள கோடில் நீல நிறத்தில் உள்ளதை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக கொடுக்கவும். அவ்வளவுதான் கலக்குங்க...


டிஸ்கி:தமிழர்கள் வலைத்தளம் முதல்முறையா அலெக்ஸா ரேங்கில் 10,00,000 ரேங்கிற்குள் வந்துள்ளது, இன்று மாலை 9,75,008 இடத்தில் உள்ளது.தமிழ்மணத்தில் 1043 வது இடத்தில் உள்ளது. இத்தனை நாளாய் ஆதரவு அளித்த நண்பர்களுக்கும்,சக பதிவர்களுக்கும்,திரட்டிகளுக்கும் நன்றி...  பதிவு பிடிச்சிருந்தா ஓட்டுபோடுங்க,நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


Related Posts Plugin for WordPress, Blogger...