Thursday, August 11, 2011

உஷார்-இது வாழ்க்கை பிரச்சனை


      து ஒரு விழிப்புணர்வு பதிவு.. எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் இருக்கிறது கொஞ்சம் வசதி குறைவான குடும்பமாக இருந்தாலும் மிக நல்ல குடும்பம் அவர்களுக்கு இரண்டு பெண் ஒரு பையன், முதல் பெண்ணிற்கு சுமாரான வசதி படைத்த ஒரு நல்ல இடத்தில் மணம் முடித்தனர், இந்த இரண்டாவது பெண் +2 படித்தவர் பார்ப்பதற்கு நல்ல அழகாக இருப்பார், மிக பணிவானவரும் கூட. அவருக்கு வரன் தேடிக்கொண்டிருந்தனர். அப்போது முன்பின் தெரியாத மிகவும் வசதியான குடும்பம் ஒன்று தரகர் மூலம் இவர்களை நெருங்கியது, இவர்களும் வசதி இருக்கிறதே என்று அக்கம் பக்கம் விசாரிக்காமல் வரனை முடித்துவிட்டனர்.

     திருமணமும் முடிந்து விட்டது, மாப்பிள்ளை மணமேடைக்கு வந்தபோதே காலை தாங்கி தாங்கி நடந்து வந்தார், எப்பொழுதும் ஷூ அணிந்தே இருந்தார்.பெண் வீட்டார் என்ன என்று கேட்டதற்கு காலில் சிறு விபத்தில் காயம் என்று மழுப்பி விட்டார்கள் மாப்பிள்ளை வீட்டார். திருமணம் முடிந்து ஒரு 3 நாட்களுக்கு பிறகுதான் மாப்பிள்ளைக்கு சர்க்கரை நோய் இருப்பதும் அவர் காலில் ஏற்பட்ட புண் சர்க்கரை நோயினால் புரையோடிப்போய் அவரால் சரிவர நடக்க இயலாமல் போனதும் தெரிய வந்துள்ளது.இதை அவர் திருமணத்திற்கு முன்பே பெண்வீட்டாரிடம் கூறிவிடலாம் என கூறிய போது அவர் தாய் வேண்டாமென தடுத்துவிட்டாராம், இந்த விஷயம் கேட்ட அந்த பெண் மிகவும் மனமுடைந்து போய்விட்டார். பின் அவர் சொந்தங்கள் எல்லாம் ஆறுதல்(?)அறிவுரை கூறி தேற்றியதால் தனக்கு கிடைத்தது இதுதான் என புது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்திருக்கிறார்.ஆனால் அந்த மகிழ்ச்சி வெகுநாட்கள் நீடிக்கவில்லை.

     இப்பெண்ணின் கணவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் அவர் இப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவுகள் தர ஆரம்பித்து இருக்கிறார், கணவனிடம் கூறினால் தன்னை தவறாக நினைத்து விடுவாறோ என பயந்து தனக்குள்ளேயே புழுங்கியிருக்கிறார், ஒரு கட்டத்தில் அவர் எல்லை மீறவே தன் பெற்றோரிடம் கூறிவிட்டு அங்கு தங்க மாட்டேன் என அழுதுள்ளார் அவர்கள் நாசூக்காக தங்கள் மருமகனிடம் எடுத்து கூறி பிரச்சனையை சரி செய்துள்ளனர், இது முடிந்த ஓரிரு மாதங்களிலேயே அந்த அண்ணன் புற்றுநோயால் இறந்துவிட்டார்.

     இதற்கு பிறகுதான் உச்சகட்ட கொடுமை அரங்கேறியுள்ளது. திருமணமாகி 5 மாதங்களாகியும் இந்த பெண் கருவுறாததால் அவரை ஒரு மாந்திரிகனிடம் அழைத்து சென்று பரிகாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் அவரின் மாமியார். சாமியார் தனது சித்து வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார், அடுத்த வாரம் நிர்வாண பூஜை செய்ய வேண்டுமென மாமியாரிடம் கூறியிருக்கிறார் அந்த மாந்திரிகன்.மாமியாரும் அடுத்த வாரத்தில் தன் மகனிடம் சாதாரண பூஜை என்று கூறிவிட்டு இப்பெண்ணை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்றிருக்கிறார், இவர் நடுவழியில் அந்த மாமியாரை ஏமாற்றிவிட்டு திக்கு திசையில்லாமல் அழுதுகொண்டே பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறார். பின் இரு கல்லூரி மாணவிகளின் உதவியோடு வீடு வந்து சேர்ந்துவிட்டார்.  

     ஆனால் தவறான ஒரு இடத்தில் மாட்டிக்கொண்ட அவரின வாழ்க்கை கேள்விக்குறியாகவே உள்ளது, இவரின் கணவர் இவரோடு வருவதற்கு தயாரக இருந்தாலும் அவரின் தாயாருக்கு அஞ்சி இவரை பிரிந்து இருக்கிறார்.தங்களின் பெண் வாழ்க்கையை வசதிக்காக வீணடித்துவிட்டோமே என்று நொந்து போய் உள்ளனர் அப்பெண்ணின் பெற்றோர்.

     எனவே முன்பின் தெரியாதவர்களிடம் திருமணம் முடிவு செய்யும்பொழுது அவர்களை பற்றி அக்கம் பக்கம் நன்கு விசாரிக்கவும், அதை விடுத்து கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்த பலனும் இல்லை..

பதிவு பலரை சென்றடைய ஓட்டுக்களை தயங்காமல் அளியுங்கள்...


8 comments:

 1. கொஞ்சம் வந்து பாருங்க,,,,,,,,,
  எனது புது படைப்பு லிங்க்
  http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

  ReplyDelete
 2. நேத்து உங்க கடைக்கு வந்தேன் கார்த்தி நீங்க திறந்து பாருங்க...

  ReplyDelete
 3. விழிப்புணர்வுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. நன்றி இராஜராஜேஸ்வரி...

  ReplyDelete
 5. இது போன்ற எத்தனை சம்பவங்களைப் பார்த்தும், வாசித்தும்...இன்னும் தொடர்கிறதே என்பதுதான் வேதனையான விஷயம்!

  ReplyDelete
 6. என்ன செய்வது? பணத்தை கண்டால் பறக்கும் பத்தில் விழிப்புணர்வும் ஒன்றாகிவிடுகிறது சிலருக்கு...

  ReplyDelete
 7. Nanba yemaruvathu thavaralla, thirumba thirumba yemaruvathu mannika mudiyatha thavaru...

  ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...