Tuesday, August 9, 2011

XHTML கற்கலாம் வாங்க-1!

ன்றுமுதல் இத்தளத்தில் தொடர்பதிவாக ”XHTML” கற்றுத்தரப்படும் (இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்) என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நேரமின்மை மற்றும் கல்விச்சுமை காரணமாக அடுத்தடுத்த பகுதிகள் வருவதற்கு காலதாமதமாகும் தாங்கள் பொறுத்தருளவும். இப்பதிவில் XHTMLன் அடிப்படைகளை பார்ப்போம்.இது பலருக்கு தெரிந்திருந்தாலும் தெரியாதவர்களுக்காக.

நாம் நம்து ப்ளாக்கரில் பயன்படுத்துவது XHTML 1.0 ஆகும், அனைவரும் HTML பற்றி அறிந்திருப்போம், HYPER TEXT MARKUP LANGUAGE என்பதே இதன் விரிவாக்கம், இதனை Tim berners என்பவர் கண்டறிந்தார், இதுவே முதலில் இணையதளங்களில் பரவலாக பயன்படுத்தபபட்டது. XML-EXTENSIBLE MARKUP LANGUAGE இனை அடிப்படையாக வைத்து மற்ற லாங்குவேஜுகள் எழுதப்பட்டன, பின்னாளில் இவை இரண்டையும் இணைத்து உருவாக்க பட்டதுதான் இந்த XHTML. இது HTML போல வளைந்து கொடுக்காது.



XHTMLன் அடிப்படை விதிகள்:



1)கட்டளைகள்(Commands) சிறிய எழுத்துகளில் இருக்க வேண்டும்:
    XHTML என்பது கேஸ் சென்ஸிடிவ் நிரல் மொழி, எனவே இதில் கொடுக்கபடும் கட்டளைகள் அனைத்தும் சிறிய ஆங்கில எழுத்துக்களிலேயே இருக்க வேண்டும்.

<TITLE> WELCOME TO OUR BLOG </TITLE இது தவறானது.

<title>WELCOME TO OUR BLOG</title> இது சரியானது.

2)அளவினை குறிப்பிடும் கட்டளைகள்(ATTRIBUTE VALUES) மேற்கோள் குறியிட்டிருக்க வேண்டும்:
<div id=header-wrapper>
<a href=http://tips-for-new-bloggers.blogspot.com>Text Link</a>

<img src=photo.jpg/>                                                               இது தவறு..
<table width=200 border=0 cellpadding=2> 


<div id='header-wrapper'>
<a href="http://tips-for-new-bloggers.blogspot.com">Text Link</a>
<img src="photo.jpg"/>                                                             இது சரி.
<table width="200" border="0" cellpadding="2"> 

3)அனைத்து கட்டளைகளும் மூடப்பட வேண்டும்
     ஏதாவது ஒரு கட்டளையை திறந்தால் அது மூடப்படிருக்க வேண்டும்.

<p>a paragraph
<p>a paragraph<p> இது தவறு.

<p>A Paragraph</p> இதுதான் சரி.

எ.கா:  
<ul> ... </ul>
<li> ... </li>
<table> ... </table>
<h2> ... </h2>
<div> ... </div>
<span> ... </span>
<dt> ... </dt>
<dd> ... </dd>
<a href> ... </a> 

4)கட்டளைகள் வரிசைப்படி மூடப்பட்டிருக்க வேண்டும்.
     இந்த மொழியின் நிரல்கள் திறந்த வரிசைக்கு தலைகீழாக மூடப்பட வேண்டும்.
<form><table> ... </form></table> இது தவறு.

<form><table> ... </table></form> இதுதான் சரி.
இறுதியாக திறக்கப்பட்ட கட்டளை முதலாவதாக மூடப்பட வேண்டும்.

5)ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க வேண்டும்:
     ஒரு நிரலில் ஒரே ஒரு முதன்மை கட்டளை மட்டுமே இருக்க வேண்டும்.
<html>
<head> ... </head>
<body> ... </body>
</html> அனைத்து உபகட்டளைகளும் இவற்றுக்குள்ளாகவே வரவேண்டும்.மேலுள்ள கட்டளைகள் ஒரு நிரலில் ஒருமுறை மட்டுமே இடம் பெறும்.

6)கட்டளைகளுக்கான எழுத்து மாற்றுக்கள்:
பல நேரங்களில் நாம் சில கோடிங்குகளை நமது பதிவில் காட்டவேண்டி வரலாம், ஆனால் நாம் கோடிங்குகளை எண்ட்ர் செய்தால் அவையும் உலவியால் கம்பைல் செய்யப்பட்டுவிடும் எனவே கோடிங் தெரியாது, அதனை தவிர்க்க அந்த ஆரம்ப குறிகளுக்கு நிகரான வார்த்தை உறுப்புக்களை பயன்படுத்தலாம்.
"&quot;
&&amp;
<&lt;
>&gt;


MESSAGE
Living
In The
Favorable
and
Unfavorable
Situation
Is Called
PART OF LIVING;
But Smiling
In All Those
Situations
Is Called
ART OF LIVING...!



டிஸ்கி:தங்களுக்கு கணினி மற்றும் இணையம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் எனக்கு மெயிலில் அனுப்புங்கள், என்னால் இயன்றவரை அதனை தீர்த்து வைக்க முற்சிக்கிறேன். அனுப்ப வேண்டிய முகவரி: m.vignesh27@rocketmail.com அல்லது ecewarrior@gmail.com.



பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள் நிறை குறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். எனக்கு ஓட்டு பின்னூட்டம் இரண்டுமே குறைவா வருது, அடிக்கடி ”யாருமே இல்லாத கடைல யாருக்குப்பா டீ ஆத்துறனு மனசாட்சி கேள்வி கேக்குது” , நீங்கதான் அதுக்கு பதில் சொல்லணும்.


13 comments:

  1. சில காரணங்களுக்காக தொழில்நுட்ப செய்திகளுக்கு தனியாக ஒரு வலைப்பூவும், பொது செய்திகளுக்கு ஒரு வலைப்பூவும் ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன், எனக்கு வலைப்பூவுக்கு நல்ல பெயர் கிடைக்க மாட்டுது, உங்களுக்கு எதாச்சும் பெயர் தோனுச்சுன்னா பரிந்துரைக்கவும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெயர் எனக்கு பிடித்துவிட்டால் தனி கவனிப்பு(!) உண்டு. வீணாப்போனவன், விளங்காம போனவன் போன்ற உண்மைகளை தலைப்பாக சொல்லும் கிராதகர்களுக்கு கேப்டன் மற்றும் பவர் ஸ்டாரின் அடுத்த பட ஓப்பனிங் சோ டிக்கெட்டும், வீராச்சாமி 5:1 டிவிடியும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்....

    ReplyDelete
  2. நன்றி...

    தொடந்து எழுதுக...

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி எஸ்.முத்துவேல்

    ReplyDelete
  4. நண்பா நல்ல விடயத்தை எழுத தொடங்கயுள்ளிர்கள் வாழ்த்துக்கள் தொடந்து எழுதுங்கள்.ஆதரவு பெருகும்.
    உதாரணம் :சித்திரம்பேசுதடி photoshop blog

    ReplyDelete
  5. xhtml பற்றி அதிகமாக எழுதுவிர்கள் எனில் "நிரல்மொழி" சார்ந்த பெயர்களை வைக்கலாம்.
    வீராச்சாமி DVD எனக்கும் அனுப்புங்கள் ஏனெனில் வீட்டில் உள்ளவர்கள் இனிமேல் படம் எண்டால் பயந்தோட செய்யவேண்டும்.

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி சதீஷ்...

    வீராச்சாமி DVD எனக்கும் அனுப்புங்கள்//இதப்பத்தி இன்னிக்கு ஈவினிங்கே பிரதமர்கிட்ட நான் பேசுறேன்..

    ReplyDelete
  7. Tamiltechtips.blogspot.com

    OR

    Techtipsintamil.blogspot.com

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி tamilfa

    ReplyDelete
  9. பயனுள்ள பதிவு....

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. தாகம் தீர்த்தமைக்கு நன்றி

    தலைப்பு தமிழில் மட்டும் தான் அமையனுமா சகோ..?

    1.கன்ட்ரோல் பிளஸ் (ctrl + )

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...