Saturday, August 20, 2011

உங்கள் உலவிக்கான சூழலை நீங்களே உருவாக்க...

நாம் அனைவரும் பல உலவிகளை பயன்படுத்தி வருகிறோம் அவற்றுக்கான சூழல்களை பல இடங்களிலிருந்து தரவிறக்கி பயன்படுத்தி வருகிறோம், அதைவிட நமது உலவிக்கான சூழலை நாமே நம் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைத்தால் எப்படி இருக்கும், அதற்கு உதவி செய்வதே இந்த தளமாகும்.

இதற்கு பெரிய அளவிலான புரோகிராமிங் திறமை எதுவும் தேவையில்லை, படங்களை தரவேற்றம் செய்து தேவையான நிறங்களை தேர்வு செய்தால் போதும் இதில் உங்கள் வலைப்பூவின் லோகோவினை இணைத்து அதில் உங்கள் தளத்திற்கு லிங்க் கொடுக்கலாம், இதனால் இந்த சூழலை உபயோகிப்பவர் உங்கள் தளத்திற்கு வர அதிக வாய்ப்பு உண்டு,

சூழல் உருவாக்கும் தளத்தின் முகவரி: https://bt-engage.com

     1)இங்கு சென்று உங்களுக்கான ஒரு பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள் இரண்டு நிமிடத்தில் முடித்துவிடலாம்.

   
2)பின்னர் Create a new theme என்பதை க்ளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளதை போன்ற திரை வரும் அதில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்யவும்.
     3)இப்போது finish என்பதை க்ளிக் செய்தால் உங்களின் சூழல் தயாராகிவிடும் அடுத்து அதை மற்றவருடன் பகிரும் பக்கத்திற்கு செல்லும், இந்த முகவரியை எடுத்து உங்களுக்கு வேண்டிய இடத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான் செய்த ஒரு முன்னோட்ட சூழல் உங்களுக்காக:இங்கே...!


தமிழ் இணைய உலகை வளர்க்க தேடுபொறிகளில் தமிழ் மொழியில் தேடுங்கள்...!


 

 ஜோக்: தண்ணி அடித்துவிட்டு பசங்க உளறும்  வார்த்தைகள்:


 மாப்ள நான் ஃபுல் ஸ்டெடிடா.

நான் வண்டி ஓட்டுறேண்டா.

எனக்கு எவ்வளவு அடிச்சாலும் ஏறாதுடா.

நான் போதையில் உளர்றேன்னு மட்டும் நினைக்காதடா

இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்டா

நான் உனக்காக உயிரையும் கொடுப்பேண்டா

உச்சகட்ட டையலாக்ஸ்:

நாளைல இருந்து குடிக்கவே மாட்டேண்டா

இந்த பொண்ணுங்கள நம்பவே கூடாது மச்சி...



பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப் போடுங்க, நிறை குறைகளை கண்டிப்பாக பின்னூட்டத்தில் சொல்லுங்க...!



14 comments:

  1. மிகவும் நல்ல பதிவு.

    ReplyDelete
  2. நமக்கு இந்த அளவுக்கெல்லாம் மூளை இல்ல பாஸ்...இருக்குறது போதும்!

    ReplyDelete
  3. நாளை முதல் குடிக்க மாட்டேன்..
    சத்தியமடி தங்கம்!
    இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேணும்
    ஊத்திக்கிறேன் கொஞ்சம்!

    -- கவியரசு

    ReplyDelete
  4. நன்றி ஸ்ரீதர் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. அருமை ,உபயோகமான பதிவு

    ReplyDelete
  6. நமக்கு இந்த அளவுக்கெல்லாம் மூளை இல்ல பாஸ்...இருக்குறது போதும்!// நீங்க யாரு கதை எழுதியே ஹிட்ஸ் வாங்கிடுவீங்க, எங்கள மாதிரி சின்ன ஆளுங்க எல்லாம் இப்படி எதாவது தகிடு தத்தம் பண்ணித்தானே ஆகணும்.. வருகைக்கு நன்றி அண்ணே...

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி M.R

    ReplyDelete
  8. நன்றி மதுரை சரவணன்...

    ReplyDelete
  9. உபயோகம் உள்ள பகிர்வோடு உச்சக்கட்ட டயலாக்கும்
    அருமை வாழ்த்துக்கள் .நன்றி பகிர்வுக்கு .இன்று என்
    தளம் உங்களை சிரிக்க வைக்கக் காத்திருக்கின்றது .
    உங்கள் வரவு நல்வரவாகுக.வந்தேமாதரம்!............

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. பயனுள்ள பதிவு சகா ! !

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி நவ்ஸாத்

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...