Sunday, October 2, 2011

ஏர்டெல்லின் கொள்ளை

ரு காலத்தில் ஏர்டெல்தான் இந்தியாவின் பிரபல மொபைல் சேவை நிறுவனம், ஏர்டெல்லின் சிறப்பே அதன் தரமும், அதன் வாடிக்கையாளர் சேவையும்தான், இதெல்லாம் இந்தியாவிலேயே அதிக பயனர்களை கொண்ட நிறுவனம் என்ற பெயரை பெறும் வரைதான், என்று அந்த பெயரை பெற்றதோ அன்றிலிருந்து நிலைமை தலைகீழ்..

ஏர்டெல் கொள்ளையடிப்பது ஒன்றும் புதிதல்ல அதற்கு தற்போது மேலும் ஒரு புது டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது முன்பெல்லாம் 26 ரூபாய்க்கு குறுந்தகவல் பூஸ்டர் போட்டால், ஒரு மாத வேலிடிட்டியுடன் 6000 குறுந்தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் இப்போது டிராயின் புது விதிமுறையின்படி ஒரு நாளைக்கு 100 குறுந்தகவல்கள் மட்டுமே அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது..

இதுவரை 26 ரூபாய்க்கு ஒரு நாளைக்கு 200 குறுந்தகவல்களை தந்துகொண்டிருந்த ஏர்டெல் நிறுவனம், இப்போது அதே 26 ரூபாய்க்கு ஒருநாளைக்கு தருவது வெறும் 75 குறுந்தகவல்கள் மட்டுமே..நான் வாடிக்கையாளர் அதிகாரிக்கு தொடர்பு பேசினேன் அவரிடம் நீங்கள் முன்பு கொடுத்த அதே பணத்திற்கு இப்போது 100 குறுந்தகவல்களைத் தரலாமே என்று கேட்டதற்கு அது டிராயின் விதிமுறை என்றார்.

நீங்கள் கட்டணத்தை உயர்த்தியதற்கும் டிராய்க்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்டேன், அவர்கள் தான் குறுந்தகவல் பூஸ்டர்களின் கட்டணங்களை உயர்த்துமாறு விதிமுறையில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார். நான் அப்படி ஒன்றும் குறிப்பிட்டதாக தெரியவில்லையே என்றேன், இல்லை உங்களுக்கு தெரியாது இது நிறுவனங்களுக்கான தனி அறிவுறுத்தல் என்கிறார்..

எனக்கு கோபம் வந்துவிட்டது, எனக்கு உங்கள் பதில் திருப்தியளிக்கவில்லை, உங்கள் மேலதிகாரியிடம் பேசவேண்டும் இணைப்புக்கொடுங்கள் என்றேன், அவர் இணைப்பு கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு 10 நிமிடங்கள் வரை காத்திருந்தேன் அதற்கு கட்டணம் 3 நிமிடத்திற்கு 50 பைசா. பத்து நிமிடத்திற்கு பிறகு இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டது. நான் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தால் காத்திருக்க சொல்லிவிட்டு ஏர்டெல் டோன் ஓடுகிறதே தவிர எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் அதிகாரிக்கு இணைப்பு கொடுப்பதில்லை.
நான் வேறு நிறுவனத்திற்கு மாற முடிவு செய்துவிட்டேன்.
அவர்கள் இவ்வாறு கொள்ளையடிப்பது பெரிய விஷயமில்லை நம்மிடம் அதற்கான விளக்கத்தை கூறுவதற்கு கூட அவர்கள் தயாராக இல்லை.

எனக்கு வேறு ஒரு சந்தேகம் இருக்கிறது.. நம் பணத்தை செலவு செய்து நாம் பூஸ்டர் போட்டோ போடாமலோ ஒருநாளைக்கு எத்தனை குறுந்தகவல் அனுப்பினால் இந்த டிராய்க்கு என்ன? நாம் 100 குறுந்தகவலுக்கு மேல் அனுப்பக்கூடாது என்று இவர்கள் ஏன் சொல்கிறார்கள்? இது எப்படி இருக்கிறது தெரியுமா? நம் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் அல்லது நமக்கு ஒரு ஹோட்டலில் கணக்கு இருந்தாலும், நாம் ஒரு நாளைக்கு 3 இட்லிதான் சாப்பிட வேண்டும் என்று சட்டம் போட்டதை போல உள்ளது.. இந்த விதிமுறைக்கான அடிப்படை காரணம் தெரிந்தால் யாராவது கூறுங்கள்...


இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...



12 comments:

  1. என் சந்தேகம் என்ன என்றால், போராட்டங்களை ஊக்குவிக்கும் forward குறுஞ்செய்திகள் ஆட்சி அதிகாரத்தை ஆட்டி படைக்கிறது.. அதை தடுக்கவே இந்த நூதன திட்டம்.. இதற்காக குறுஞ்செய்தி என்று பதிவே போட்டிருக்கிறேன் நான்

    ReplyDelete
  2. உண்மையான விஷயமே,
    எந்த தொலைத்தொடர்பு நிறுவன வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளும் ஒழுங்கான பதிலை அளிக்கமாட்டார்கள்.உங்களின் நிலமைதான் எனக்கு ஏர்செல் லில் நடந்தது.திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாதுஉண்மையான விஷயமே,
    எந்த தொலைத்தொடர்பு நிறுவன வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளும் ஒழுங்கான பதிலை அளிக்கமாட்டார்கள்.உங்களின் நிலமைதான் எனக்கு ஏர்செல் லில் நடந்தது.திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது

    ReplyDelete
  3. //உங்கள் மேலதிகாரியிடம் பேசவேண்டும் இணைப்புக்கொடுங்கள் என்றேன், அவர் இணைப்பு கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு 10 நிமிடங்கள் வரை காத்திருந்தேன் அதற்கு கட்டணம் 3 நிமிடத்திற்கு 50 பைசா. பத்து நிமிடத்திற்கு பிறகு இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டது. நான் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தால் காத்திருக்க சொல்லிவிட்டு ஏர்டெல் டோன் ஓடுகிறதே தவிர எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் அதிகாரிக்கு இணைப்பு கொடுப்பதில்லை.
    நான் வேறு நிறுவனத்திற்கு மாற முடிவு செய்துவிட்டேன்.// அட இந்த அனுபவம் உங்களுக்கு இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வருஷமாக ஏர்டெல் இதைத்தான் செய்கிறது. அவர்கள் பிரா(டு)ண்பான்டு சேவையை நான் எப்போதே மாற்றிவிட்டேன்.

    ReplyDelete
  4. @சூர்யாஜீவா,@வெங்கடேச குருக்கள்,@எளியவன்
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பர்களே...

    ReplyDelete
  5. WHICH IS BEST CELL PHONE NETWORK IN TAMILNADU?

    ReplyDelete
  6. விளம்பரங்கள் மட்டுமே கவர்ச்சியாக இருக்கும்...
    இதுபோன்ற செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது...


    அரசு இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும்

    ReplyDelete
  7. WHICH IS BEST CELL PHONE NETWORK IN TAMILNADU?// அததாங்க நானும் தேடிக்கிட்டு இருக்கேன்...

    ReplyDelete
  8. விளம்பரங்கள் மட்டுமே கவர்ச்சியாக இருக்கும்...
    இதுபோன்ற செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது...


    அரசு இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும்//

    அவங்களுக்கு இதுக்கெல்லாம் ஏது நேரம்? ஊழல் பண்றதுக்கும் பண்ணின ஊழலை மறைக்கிறதுக்குமே நேரம் சரியா போயிடுது...

    ReplyDelete
  9. தங்களுடைய கோபம் நியாயமானதே... இதே கோபம் எரிச்சல் எல்லோருக்கும் உள்ளது. இதில் அனைத்து நிறுவனங்களும் ஒன்று தான்.

    குறுந்தகவல் பற்றி வருவோம்...
    டிராய் கூறியது நல்லதுக்குத்தான்...எஸ்.எம்.எஸ். பேக்கேஜ் போட்டுக்கொண்டு பெரும்பாலானோர் இதில் தொழில் செய்கிறார்கள். அனைவருக்கும் குறுந்தகவல் மூலம் அட்வர்டைஸ் செய்கிறார்கள். அதனால் தான் டிராயின் இந்த கட்டுப்பாடு. இதுபோன்ற குறுந்தகவல்களால் நாமும் பல தொல்லைகள் அனுபவித்துள்ளோம்.

    ReplyDelete
  10. கொள்ளை லாபம் ஈட்ட அரசாங்கத்துடன் கை கோர்த்துக் கொண்டு தீட்டும் திட்டம் தானே தவிர வேறொன்றும் இல்லை.. நான் 36 ருபாய் பூஸ்டர் போட்டுள்ளேன். தினசரி அதிகபட்சம் நூறு குறுஞ்செய்திகள் தான் அனுப்ப முடியும் என்ற நிலை டெலி மார்க்கெட்டிங் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதில்லை.. அவர்களால் பத்து சிம் கார்டுகள் கூட வைத்துக்கொள்ள முடியும்.. அனால் சராசரி மக்கள் மற்றும் மாணவர்களின் நிலைமைதான் திண்டாட்டம்..

    ReplyDelete
  11. TATA DOCOMO IS THE BEST OPERATER IN INDIA & TAMILNADU (COVERAGE AREA)

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...