Friday, October 14, 2011

உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-3!

ணக்கம் நண்பர்களே நாம் ஏற்கனவே ஹாக்கிங்கில் பிஷிங் மற்றும் கீலாகர்ஸ் என்ற வழிமுறைகளையும் அதிலிருந்த் நம்மை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது சோஷியல் இஞ்சினியரிங்(Social Engineering) என்ற முறையைத்தான்..

இந்த முறையைப் பற்றி எளிதாக விளக்க நாம் கந்தசாமி திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் ஷ்ரேயாவின் வங்கிக்கணக்கினை ஹாக் செய்வதற்காக முதலில் விக்ரம் கீ லாகர் மென்பொருளை பயன்படுத்தி அவரின் கடவுச்சொல்லை எடுத்துவிடுவார், பின் அந்த கணக்கில் மூன்று கேள்விகள் கேட்டு 60 விநாடிகள் நேரம் கொடுக்கும் அப்பொழுது அந்த கேள்விகளுக்கான விடையை ஷ்ரேயாவிடம் பேசியே கறப்பார் அதுதான் சோஷியல் இஞ்சினியரிங், சுருக்கமாக சொல்ல்ப்போனால் ”போட்டு வாங்குறது”..

இந்த முறையினை பயன்படுத்துவதற்கு தொழில்நுட்ப அறிவு ஒரு துளிகூட தேவையில்லை, சாதுர்யமாக பேசும் திறன் இருந்தாலே போதுமானது.. இந்த முறையை பயன்படுத்தி நமது மின்னஞ்சல் கணக்கினை திருடலாம், அது திருடப்பட்டாலே நமது மற்ற அனைத்து கணக்குகளையும் எளிதில் திருடிவிடலாம் என்பதை தாங்களே அறிவீர்கள்..


இதை செய்வதற்கு முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கு துவங்கும்போது கடவுச்சொல்லை மீட்பதற்காக இரண்டு கேள்விகளும் அவற்றுக்கான விடையும் அளித்திருப்போம், நம் கணக்கை திருட முயற்சிப்பவர் அந்த கேள்விகளை எடுத்துக்கொண்டு அதற்கான பதிலை நம்மிடமே சாதுர்யமான முறையில் தெரிந்துகொண்டு நமது கடவுச்சொல்லை மாற்று உள்ளே நுழைந்துவிடலாம்.

அவர்கள் இதனை அறிய கேள்விகளை எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம்.. உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் கேள்வியில் உங்களின் முதல் தொலைபேசி எண் என்ன என்பதையும் அதன் பதிலையும் அளித்திருக்கிறீர்கள் என்றால், அந்த நபர் உங்களிடம் “மாப்ள ஃபர்ஸ்ட் ஒரு நம்பர் வச்சிருந்த இல்ல? அது என்ன கம்பெனி அந்த நம்பர சொல்லேன்” என்று கேட்டாலும் நீங்கள் கண்டிப்பாக கொடுப்பீர்கள் ஆனால் அவர் உங்கள் கணக்கில் நுழைய முயற்சிக்கிறார் என்று தெரியாது.இது மிகவும் எளிய முறையாக இருந்தாலும் இதை எல்லாரும் பயன்படுத்தும் வகையில் இருப்பதால் ஆபத்தும் அதிகம்..இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்..

1)செக்யூரிட்டி கேள்விகளில் உங்களை பற்றிய விவரங்களை அளிக்கவேண்டாம், உங்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்களை இதில் பயன்படுத்துங்கள்.


2)What is your sister name?,what is your father name? இதுபோன்ற சிறுபிள்ளைத் தனமான வினாக்களை வைப்பதை தவிர்க்கவும் ஏனெனில் இவை உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் தெரியக்கூடிய விஷயங்கள்.


3)மின்னஞ்சல் கணக்கு உருவாக்கத்தின்போது கேட்கப்படும் மாற்று மின்னஞ்சலில் உங்களின் மற்ற முகவரியை கொடுத்து வைத்தால் கடவுச்சொல் திருடப்பட்டாலும் மீட்க உதவும்..


4)உங்களின் நெருங்கிய நண்பராக இருந்தாலும் உங்களின் செக்யூரிட்டி வினாக்கள் சம்பந்தமான கேள்விகளை கேட்டால் அதற்கு பதிலளிக்காதிர்கள்..


இவையே இந்த முறையிலிருந்து நம்மை பாதுகாக்க வழிமுறைகள், அடுத்த பதிவில் இன்னொரு வளர்ந்து வரும் ஹாக்கிங் முறையை பற்றி பார்ப்போம்..

இந்த தொடரின் முந்தைய பாகங்கள்..

உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள -2 !!!
உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-1!!!
இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


11 comments:

 1. usefull information

  thank bro.

  ReplyDelete
 2. பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பா!

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி @ஸ்டாலின், சூர்யாஜீவா,டாலி கார்த்திக் மற்றும் ப்ளாக்கர் நண்பன்...

  ReplyDelete
 5. தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

  உங்கள் தளம் தரமானதா..?

  இணையுங்கள் எங்களுடன்..

  http://cpedelive.blogspot.com

  ReplyDelete
 6. @தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை:

  நீங்க ப்ளாக் எழுதுற அந்த ஜி மெயில் ஐடி ஹாக் ஆயிடுச்சுன்னா உங்க ப்ளாக் நீங்க இதுவரைக்கு எழுதுன பதிவுகள் அந்த முகவரி.. எல்லாமே அம்பேல் தான்..

  இமெயில் ஐடியை பாதுகாக்குறது ரொம்ப அவசியம்

  ReplyDelete
 7. உண்மையாவே இந்த பதிவு மிகவும்நன்றாக இருக்கு அண்ணா அதான் படித்த உடனே உங்களை தொலை பேசியில் அழைத்தேன் என்னுடன் உரையாடியதற்க்கு நன்றி அண்ணா .... கற்போம் பதிவிலும் உங்கள் பதிவை படித்தேன் நன்றாக இருக்கு எப்படியோ எனது அப்பாவிடம் அடம் பிடித்து நானும் கணினி வாங்கிவிட்டேன் உங்களிடம் கணினி வாங்க கவனிக்க வேண்டியவைகள் விபரம் கேட்டுறிந்தேன் விளக்கம் தந்தமைக்கு நன்றி HEART RIDER நானும் தற்பொழுது தொழில் நுட்ப வலைப்பூ ஆரம் பித்து இருக்கேன் வந்து நிரை குறை இருப்பின் சொல்லிட்டு போங்க http://www.itjayaprakash.blogspot.in

  ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...