Thursday, October 6, 2011

பேஸ்புக்கின் புதிய பாதுகாப்பு வசதி...!!!

ணக்கம் நண்பர்களே... கூகிள்+ன் அறிமுகத்தையும் அசுர வளர்ச்சியையும் கண்டு பேஸ்புக் இப்போது அதிரடி மாற்றங்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்ததே.. இதில் இப்போது நம் கணக்கின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து புதிய வசதிகள் சிலவற்றை சேர்த்துள்ளார்கள். அதில் ஒன்றுதான் Trusted Friends என்ற வசதி. இந்த வசதியானது உங்கள் கணக்கு செயலிழந்தாலோ அல்லது முடக்கப்பட்டாலோ எளிதில் இந்த கணக்கை மீட்க உதவுகிறது.இதை எப்படி செயல்படுத்துவது என்று பார்ப்போம்.

1)முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் லாகின் செய்து கொண்டு அதில் Account Settings என்பதை தேர்ந்தெடுங்கள்.



2)அதில் இடதுபுறத்தில் உள்ள Security என்பதை தேர்ந்தெடுங்கள்.


3)இப்போது தோன்றும் ஆப்ஷன்களில் Trusted Friends என்பதற்கு நேராக உள்ள Edit என்பதை க்ளிக் செய்யவும்.


4)இப்போது திரையில் ஒரு செய்தி தோன்றும் அதில் உள்ள Choose Trusted Friends என்பதை தேர்வு செய்யவும்.


5)இப்பொழுது திரையில் தோண்றும் சிறிய விண்டோவில் உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை அளிக்கவும்.


6)இப்பொழுது தோன்றும் திரையில் உங்கள் நண்பர்கள் பட்டியல் தோன்றும் அதில் உங்களுக்கு நம்பகமான மற்றும் முகநூல் இல்லாத நேரத்திலும் உங்களால் அணுகமுடிந்த நபர்களில் ஐந்து பேரை தேர்வு செய்துவிட்டு Continue என்பதை க்ளிக் செய்யவும்.


7)இப்போது தோன்றும் விண்டோவில் Confirm Friends என்பதை சொடுக்கவும், உங்களின் (Trusted Friends)பட்டியல் தயார்..உங்கள் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் நீங்கள் அதனை இந்த பட்டியல் மூலம் சரிசெய்து கொள்ளலாம்.


அதாவது உங்கள் கணக்கு செயலிழந்த நிலையில் நீங்கள் இந்த வசதி மூலம் அதனை மீட்டெடுக்க விரும்பினால், உங்கள் நண்பர்களுக்கு ஒரு இரகசிய எண் அனுப்பப்படும் அந்த எண்ணை கொண்டு மீண்டும் உங்கள் கணக்கை செயல்படுத்தலாம்.

நம் வீடுகளில் உபயோகிப்பதற்காக கணினியை மாற்றியமைத்தவர், எலக்ட்ரானிக் துறையை முற்றிலும் புரட்டிப் போட்டவர்...
எட்டாக் கனியாக இருந்த கணினியை சாமானியர்களுக்கும் எட்டச் செய்தவர்.. இன்னும் என்னென்னவோ சொல்லலாம் அவரைப் பற்றி.. 

ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற ஒரு  சகாப்தம் நிறைவடைந்தது... அவரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் வேண்டிக்கொள்வோம்...




இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


6 comments:

  1. ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற ஒரு சகாப்தம் நிறைவடைந்தது... அவரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் வேண்டிக்கொள்வோம்...
    நிட்சயமாக ஓர் அருமையான சாதனையாளரை இந்த உலகம் இழந்துவிட்ட செய்தி மனதை உருக்குகின்றது .இவரது ஆன்மா சாந்திபெற நானும் பிரார்த்திக்கின்றேன் .அத்துடன் நல்ல சமயத்தில் இந்த மாமனிதனின் சிறப்பான அறிவாற்றலால்
    கிட்டிய பயனுள்ள தகவலையும் பகிர்ந்துள்ளீர்கள் .மிக்க நன்றி சகோ .பகிர்வுக்கு ..........

    ReplyDelete
  2. நம்ம சைட்டுக்கும் வாங்க!ஜாயின் பண்ணுங்க!
    கருத்து சொல்லுங்க!நல்லா பழகுவோம்!!

    ReplyDelete
  3. அருமையான தகவல் ,பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...