Sunday, October 16, 2011

யூடியூப் ஜாலங்கள்...பாம்பு விளையாட்டு

ணக்கம் நண்பர்களே..நாம் அனைவரும் யூடியூபில் வீடியோக்களை பார்ப்போம், அதிவேக இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் வேகம் குறைவான இணைய இணைப்பு கொண்டவர்களுக்கு? வீடியோ ஸ்ட்ரீமிங் முடியும்வரை காத்திருக்க வேண்டும் இவ்வாறு காத்திருக்கும் நேரத்தில் நீங்கள் யூடியுபிலேயே விளையாடவும் அந்த விளையாட்டு தங்கள் வீடியோ ஸ்டிரீமிங்கை எவ்வித்தத்திலும் பாதிக்காமல் இருந்தால் எப்படி இருக்கும்? அதைப்பற்றித்தான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.

உங்கள் அனைவருக்கும் பாம்பு விளையாட்டினை பற்றி தெரிந்திருக்கும் நீங்கள் யூடியூபில் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போது ஸ்டிரீமிங் ஆகும் நேரத்தில் பாம்பு விளையாட்டை ஆட பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்..

1)முதலில் யூடியுபினை திறந்து ஏதேனும் ஒரு வீடியோவினை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

2)அந்த வீடியோ ஸ்டிரீமிங் ஆகிக்கொண்டிருக்கும்போது உங்கள் மவுஸின் இடது க்ளிக்கை அழுத்தி பிடித்தபடி முதலில் இடது அம்புக்குறியையும் பின்னர் மேல் அம்புக்குறியையும் ஒரு சேர அழுத்துங்கள்.

(Press and hold the left mouse button and left arrow button and then top arrow button respectively.)

3)இப்போது ஸ்கிரீனில் இருந்த ஸ்டிரீமிங் வட்டம் பாம்பினைப் போலவும் அருகே இரை ஒன்றும் இருப்பதை காணலாம்..



4)வேகமாக் செயல்படுங்கள் இல்லையென்றால் பாம்பு சுவற்றில் மோதிவிடும்.. அவ்வளவுதான்.. நல்லாயிருக்குல்ல???

டிஸ்கி: விரைவில் ஒரு ஆங்கில வலைப்பூவை தொடங்கும் எண்ணம் உள்ளது. எனவே தாங்கள் அதற்கும் வருகை தந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..


இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


3 comments:

  1. 50 வது பதிவாக இருக்கவேண்டிய இது எனக்கு பிடிக்காத மற்றும் ஒருதலை சார்புடையதாக் தோன்றிய இரண்டு பதிவுகளை நீக்கியதால் 48 வது பதிவாக மாறிவிட்டது... மேலும் ஒரு பதிவையும் நீக்கவேண்டியுள்ளது...

    ReplyDelete
  2. நல்லா தான் இருக்கு, ஆனா வேகமா ஆடு ன்னு சொல்றது தான் இடிக்குது.. ஓ இடிக்க கூடாதோ?

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...