Thursday, October 6, 2011

உங்களின் அனைத்து கூகுள் கணக்குகளின் தகவல்கள் ஒரே இடத்தில்

நாம் அனைவரும் இன்று பயன்படுத்துவதில் பெரும்பாலான சேவைகள் ஏன் கிட்டத்தட்ட அனைத்து சேவைகளுமே கூகிள் நிறுவனத்தினால் அளிக்கப்படுபவைதான், நாம் பயன்படுத்தும் அல்லது சேமிக்கும் அனைத்து தகவல்களும் நாம் கணக்கு திருடப்பட்டால் கோவிந்தாதான். அதனை தவிர்க்க நீங்கள் கூகுள் சேவைகளில் பயன்படுத்தும் அனைத்து தகவல்களையு ஒரே இடத்தில் பேக்-அப் எடுப்பது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்..இதனை செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

1)முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழையுங்கள்.

2)அதில் உங்கள் ப்ரொஃபைல் அடையாள படம் மேலே உள்ள பட்டையில் இருக்கும் அதன் மீது க்ளிக் செய்து Account Settings என்பதை செலக்ட் செய்யவும்.

3)இப்போது தோன்றும் புதிய விண்டோவில் இடதுபுற பேனில் இருக்கும் Data Liberation என்பதை செலக்ட் செய்யவும்.

4)இப்போது Download Your Data என்ற பட்டனை உங்களின் தகவல்களை ஒரு கோப்பாக தரவிறக்கி கொள்ளலாம்.
5) ஒரு குறிப்பிட்ட சேவையின் தகவலை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்பினால் அந்த சேவையினை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


6 comments:

  1. சூப்பர் தகவல் நண்பா

    நண்பர்களே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க

    பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்;பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. @வைரை சதிஷ்,ப்ளாக்கர் நண்பன், சூர்யாஜீவா,கவிதை வீதி சௌந்தர்...

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...