Wednesday, October 19, 2011

எந்த மென்பொருள்/வெப்சைட் இல்லாமல் ஸ்டிரீமிங் வீடியோக்களை எளிதாக தரவிறக்க

ணக்கம் நண்பர்களே.. நாம் அனைவரும் யூடியூப் மற்றும் மற்ற பல தளங்களில் வீடியோக்களை பார்ப்போம் அவற்றை தரவிறக்க நினைக்கும்போது ஏதேனும் ஒரு மென்பொருளை நாடுவோம் அல்லது ஏதேனும் ஒரு வலைத்தளத்தை நாடுவோம்.

இந்த மென்பொருட்கள் சரியாக தரவிறக்கம் செய்வதில்லை பாதியில் தரவிறக்கம் நின்றுவிடும் அல்லது மென்பொருள் ஹாங் ஆகிவிடும், சரி இந்த வலைத்தளங்களை உபயோகிக்கலாம் என்றால் அதில் பல தளங்கள் தரவிறக்க சுட்டியே கிடைக்காது சில மட்டுமே சரியாக வேலை செய்யும்.. அதிலும் நீங்கள் அந்த வீடியோ முழுவதையும் பார்த்துவிட்டு அதன்பிறகு தரவிறக்கினால் அந்த வீடியோ உங்களால் இரண்டு முறை தரவிறக்கப்படுகிறது இதனால் தேவையற்ற இழப்பு ஏற்படுகிறது..

இதனை தவிர்க்க நீங்கள் வீடியோ முழுவதும் பார்த்தவுடனே எந்த தரவிறக்கமும் செய்யாமல் அதனை ஒரு கோப்பாக உங்கள் கணினியில் சேமித்தால் எப்படி இருக்கும்? அதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.(கொஞ்சம் நீளமான பதிவு.)

1)முதலில் நீங்கள் எப்போதும் போல வீடியோவை பாருங்கள், முழுதும் பார்த்து முடிந்தவுடனோ அல்லது முழுதும் ஸ்டிரீமிங் முடிந்தவுடனோ உங்கள் உலவியை மூடிவிடாமல் மினிமைஸ் செய்துவிட்டு அடுத்த வரியில் குறிப்பிடப்பட்டுள்ள ஃபோல்டருக்கு செல்லுங்கள்.


2)இந்த போல்டரானது நீங்கள் பயன்படுத்தும் இயங்குதளம் மற்றும் உலவி இவற்றை பொறுத்து மாறுபடும் உங்களின் உலவி மற்றும் இயங்குதளத்திற்கு நேரே உள்ள ஃபோல்டரை தேர்ந்தெடுக்கவும்.

இயங்குதளம்உலவி ஃபோல்டர்
விண்டோஸ் 7
நெருப்புநரிC:\Users\[USERNAME*]\AppData\Local\Mozilla
\Firefox\Profiles\zdo1e2i8.default\Cache
" குரோம் C:\Users\[USERNAME*]\AppData\Local\
Google\Chrome\User Data\Default\Cache


விண்டோஸ் xp
நெருப்புநரி C:\Documents and Settings\[USERNAME*]\Application Data\Mozilla\Firefox\Profiles\Default\Cache
" குரோம் C:\Documents and Settings\[USERNAME*]\Local Settings\Application Data\Google\Chrome\

*இதில் சிவப்பு நிறத்தில் உள்ள USERNAME என்பதற்கு பதிலாக உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும் பயனர் பெயரை கொடுக்க வேண்டும்.இதில் போல்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் உள்ள போல்டர்களை நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்க வேண்டும்.

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயனர்கள் உங்கள் Cache ஃபோல்டருக்கு செல்ல பின்வருமாறு செய்யவும், உங்கள் உலவியில் Tools-->Internet Options என்பதை தேர்ந்தெடுக்கவும்..
அதில் General என்ற டாபிற்கு கீழே உள்ள Settings என்பதை க்ளிக் செய்யவும்.


இப்பொழுது தோன்றும் புதிய விண்டோவில் View Files என்பதை க்ளிக் செய்தால் உங்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் Cache ஃபோல்டர் திறந்திருக்கும். அதில் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.



3)இப்பொழுது நீங்கள் உங்கள் கணினியின் Cache ஃபோல்டருக்குள் இருப்பீர்கள் அதில் நாம் தற்பொழுது ப்ளே செய்த வீடியோ தற்காலிக Cache ஆக சேமிக்கப்பட்டிருக்கும், நாம் செய்ய வேண்டியது அதனை கண்டுபிடித்து நிரந்தரமாக சேமித்து கொள்ள வேண்டியதுதான்.














4)அந்த ஃபோல்டருக்குள் ரைட் க்ளிக் செய்து Sort-->By Size என்பதை தேர்ந்தெடுங்கள்.


5)அதில் மெமரியில் பெரிய அளவில் உள்ள கோப்புக்களை VLC Media Player கொண்டு ப்ளே செய்து பாருங்கள்..(வீடியோக்கள் அதிக மெமரி அளவைத்தான் கொண்டிருக்கும்.) இதனை நீங்கள் உங்கள் வீடியோவினை கண்டுபிடிக்கும் வரையில் ஒவ்வொரு கோப்பையும் ப்ளே செய்து பார்க்கவேண்டும்.

அங்கே data_1,data_2,.... போன்ற வரிசை எண்ணில் கோப்புகள் இருக்கும் இந்த data_X வரிசை கோப்பை ப்ளே செய்ய தேவையில்லை இவையல்லாத மற்ற கோப்புகளை ப்ளே செய்யுங்கள்.



6) VLC Media Playerல் ப்ளே செய்து உங்களுக்கு வேண்டிய வீடியோவினை கண்டுபிடித்த பிறகு அதனை ரைட் க்ளிக் செய்து காப்பி செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

7)ஒட்டிய பிறகு அதில் ரைட் க்ளிக் செய்து Rename என்பதை செலக்ட் செய்து பெயரை மாற்றும் போது அதன் இறுதியில் .mp4 or .flv கோப்பாக சேமிக்கவும்.
இப்பொழுது உங்கள் வீடியோ தரவிறக்கப்பட்டுவிட்டது..

டிஸ்கி 1: பதிவின் நடுவில் இந்த டேபிளை கொண்டு வருவதற்கு திணறிய போது சரியான நேரத்தில் கை கொடுத்தது நண்பர் பலே பிரபு அவர்களின் பதிவு அவருக்கு நன்றி.


டிஸ்கி 2: இனிமேல் பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்க என்று பதிவின் கீழ் கேட்கப்போவதில்லை, நீங்களே பாத்து எதாச்சும் செஞ்சு விடுங்க.. :).. 




எனக்கு இன்றுதான் ஃபேஸ்புக்கின் வீடியோ சாட் வசதி ஆக்டிவேட் ஆயிருக்கு சிலருக்கு இன்னும் ஆகல சிலர் முன்னடியே வந்துடுச்சுன்னு சொல்றாங்க? நீங்களும் உங்களுக்கு வந்திச்சா இல்லையான்னு சொல்லுங்க. நன்றி.


13 comments:

  1. எனக்கும் இன்றுதான் ஃபேஸ்புக்கின் வீடியோ சாட் வசதி ஆக்டிவேட் ஆயிருக்கு :)

    ReplyDelete
  2. நண்பா ரொம்ப நாள் இத தான் தேடிக்கிட்டு இருந்தேன்


    நன்றி சகோ ...

    ReplyDelete
  3. download பண்ண தேவை இல்ல ...

    ReplyDelete
  4. @தமிழன்னு சொல்லிகிறதுல, முத்துவேல்,ஸ்டாலின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ...

    ReplyDelete
  5. நல்லா தான் இருக்கு, படு பயங்கரமா யோசிச்சிருக்கீங்க போல

    ReplyDelete
  6. நான் இரண்டு முறை முயற்சித்தேன். Cache file தான் இருக்கு. data file கள் இல்லை. cache fileகளை முயற்சித்தேன். வேலை செய்யவில்லை.

    :( :( :(

    ReplyDelete
  7. @Abdul Basith: அங்கு டேட்டா ஃபைல்கள் இருக்காது அனைத்துமே Cache file ஆகத்தான் இருக்கும்.. நீங்கள் Sort by Size கொடுத்துவிட்டு இருப்பதிலேயே பெரிய Cache ஃபைலை எடுத்து VLC media playerல் ப்ளே செய்து பாருங்கள் நிச்சயம் வேலை செய்யும்..

    ReplyDelete
  8. Very good post.Keep it up...

    ReplyDelete
  9. ந‌ல்ல‌ ப‌ய‌னுள்ள‌ த‌க‌வ‌ல்க‌ள் முய‌ற்ச்சி செய்து பார்க்கிறேன்.ந‌ன்றி

    ReplyDelete
  10. அடடே இது நல்லா இருக்கே>>>

    ReplyDelete
  11. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

    ReplyDelete
  12. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...