வணக்கம் நண்பர்களே, நான் இந்த பதிவை எழுத காரணம் இப்பொழுது பலர் தங்கள் முகநூல் கணக்கு திருடப்பட்டதாகவும், தங்கள் ப்ளாக்கர் கணக்கு திருடப்பட்டு வலைப்பூ முடக்கப்பட்டதாகவும் கூறிவருகின்றனர்.. இவையெல்லாம் யாரோ நமக்கு தெரியாதவர்கள் செய்வதில்லை,(http://vigneshms.blogspot.com) நம் கருத்துக்கு மாற்று உடையவர்கள், உங்களின் பழைய நண்பர்கள் இவர்கள்தான் செய்கிறார்கள். வலைப்பூ முடக்கப்பட காரணம் நாம் ஏதாவது ஒரு பதிவில் இட்ட எதிர்மறைக் கருத்தோ இல்லை ஏதாவது பிரச்சனைக்குரிய பதிவினை இடும்போது அதனை பிடிக்காதவர்கள் இவ்வாறுசெய்யலாம்.
நான் பிரபாகரனுக்கு ஒரு கடிதம் என்ற பதிவினை இட்டபொழுது இரண்டு நாட்கள் கழித்து எனது ஜிமெயிலுக்கு ஒரு மெயில் வந்திருந்தது, என் முகநூல் கணக்கை ஹாக் செய்யும் முயற்சியே அது ஆனால் எனது முகநூல் கணக்கு எனது யாஹூ மெயிலை கொண்டு செயல்படுத்தி இருந்தேன் அதனால் உஷாராகி அந்த மெயிலை செக் செய்தபோது faceb00k team (இரண்டு Oவுக்கு பதில் பூஜ்ஜியங்கள்) என்று இருந்தது,இதே மெயில் என் யாஹூ ஐடிக்கு வந்திருந்தால் நான் ஒருவேளை ஏமாந்திருக்கலாம். நாம் ஹாக்கர்களிடமிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் அதைப்பற்றிய அறிவை பெற்றே தீரவேண்டும். எனவே இந்த பதிவின் மூலம் எனக்கு ஹாக்கிங் பற்றி தெரிந்த (http://vigneshms.blogspot.com)அனைத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன், இதில் சில விஷயங்கள் பிழையாயிருக்கலாம் அவ்வாறு இருந்தால் தயங்காமல் கூறுங்கள்.
முதலில் ஹாக்கிங் என்பதில் உள்ள வகைகளை பற்றி பார்ப்போம்
(இதில் உள்ள ஆங்கில் சொற்களை தமிழில் மொழிபெயர்க்க என்னால் இயலவில்லை யாரேனும் மொழிபெயர்த்து பின்னூட்டத்தில் கூறுங்கள்...)
1)Website Hacking-வலைத்தளதில் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த
2)Email Hacking-மின்னஞ்சல் கணக்கினை கைப்பற்றி தவறாக பயன்படுத்த
3)Network Hacking-ஒரு பொதுவான வலையமைப்பை ஊடுருவி குழப்புதல்
4)Password Hacking-கடவுச்சொல்லால் பாதுகாக்கப்ப்ட்ட டேட்டாவினை பார்க்க
5)Online Banking Hacking-நமது பணத்தை இணையம் வழியாக திருட
6)Computer Hacking-மற்றவரின் கணினியில் உள்ள கோப்புகளை பார்க்க.
இதில் அதிகம் செய்யப்படுவது மின்னஞ்சல் ஹாக்கிங்தான், ஏனெனில் இது எல்லாராலும் செய்யக்கூடிய அளவுக்கு சற்று எளிதானதுதான். இணையத்தில் இதை எப்படி செய்வதென ஏகப்பட்ட தளங்கள் சொல்லிக்கொடுக்கின்றன.
இப்பொழுது ஹாக்கிங் செய்ய(http://vigneshms.blogspot.com) பயன்படுத்தப்ப்டும் வழிமுறைகளை பார்ப்போம்.
1)Phishing
2) Key Loggers
3)Tab Napping
4)Social Engineering
இவையே ஹாக்கிங்கில் தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் முறைகள், நாம் இவை ஒவ்வொன்றை பற்றியும், தடுப்பு முறைகள் பற்றியும் விரிவாக இத்தொடர்பதிவில் காணப்போகிறோம்.
1)PHISHING:
இந்த முறையானது சற்று கடினமானதுதான் ஆனால் ஸ்கிர்ப்ட் எழுத தெரிந்த வெப் டிசைனர்களுக்கு(http://vigneshms.blogspot.com) இது ஓரிரு நிமிட வேலைதான். நாம் உதாரணத்திற்கு முகநூல் கணக்கை எடுத்துக்கொள்வோம்.நாம் ஹாக் செய்யவேண்டியவரின் மின்னஞ்சல் முகவரிக்கு முகநூலின் நுழைவுப்பக்கத்தை போன்ற ஒரு பக்கத்தை செய்து அதில் அவர் கொடுக்கும் பயனர் பெயர், கடவுச்சொல் நமது மெயிலுக்கு வந்து சேருமாறு கோடிங் எழுதவேண்டும்..
இதனை செய்ய முகநூலின் நுழைவுப்பக்கத்தின் சோர்ஸ் கோடினை பெற்று அதில் சிறு மாறுதல்களை செய்து அதனை வேறு ஏதாவது இலவச சர்வரில் பதிவேற்றம் செய்யவேண்டும், இப்பொது அந்த சுட்டியினை குறிப்பிட்ட நபரின் மெயிலுக்கு பேஸ்புக்கிலிருந்து வருவதை போன்ற ஒரு மின்னஞ்சலை உருவாக்கி அதிலிருந்து அனுப்ப(http://vigneshms.blogspot.com) வேண்டும் அவர் உள்ளிடும் கடவுச்சொல் உங்களை வந்து சேரும். இந்த முறையில் 90% வெற்றி நிச்சயம்.
பாதுகாப்பு வழிமுறைகள்:
இப்போது இந்த பிஷிங் முறையினால் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்க என்னென்ன வழிமுறைகளை கையாளலாம் என்று பார்க்கலாம்.
- உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களின் முகவரியை நன்றாக கவனியுங்கள். சிறு எழுத்து மாற்றம்தான் இருக்கும்.
- எப்போதும் கணக்குகளில் நுழைவதற்கு உங்கள் மெயிலுக்கு வரும் சுட்டிகளை பயன்படுத்தாமல் தனியாக சுட்டிகளை தட்டச்சு செய்து பயன்படுத்துங்கள்.
- உங்கள் உலவிகளில் கடவுச்சொல்லை நினைவில் நிறுத்தும் வசதி இருக்கும், அதனை செயல்படுத்திக்கொள்ளுங்கள் ஒவ்வொரு முறையும் டைப் செய்யாதீர்கள்(இதில் வேறொரு ஆபத்து உள்ளது அது பற்றி பின்னால் விளக்குகிறேன்).
- நீங்கள் மட்டுமே உங்கள் கணினியை பயன்படுத்தும் பட்சத்தில் கணக்குகளில் உள்நுழைந்தே இருங்கள்(Keep Me Logged In).
- ஒவ்வொரு முறையும் லாகின் பக்கங்களில் உள்ள அட்ரஸ்பாரில் https:// இருக்கிறதா என கவனியுங்கள்.
- உங்கள் முகநூல் கணக்கில் செக்யூர்டு லாகின் எனேபில் செய்திடுங்கள்.
- நீங்கள் லாகின் செய்யும் (http://vigneshms.blogspot.com)பக்கத்தில் உள்ள முகவரி சரியானதுதானா என்று சோதித்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் மின்னஞ்சல் முகவரியை முகநூல் போன்ற கணக்குகளில் மறைத்தே வையுங்கள், எல்லோருக்கும் தெரியும்படி வைக்க வேண்டாம்.
- அடிக்கடி கடவுச்சொல்லை மாற்றிக்கொண்டே இருங்கள்.
டிஸ்கி: நான் நெருப்பு நரி பற்றி எழுதிய இரண்டு பதிவுகளையும் யாரும் கண்டுக்கவேயில்லை,அது யாருக்கும் பயன்படும் விதத்தில் இல்லையோ என தோன்றுகிறது, நீங்கள் அந்த பதிவுகளை படித்துவிட்டு கூறப்போகும் கருத்துகளை வைத்தே நெருப்புநரி பற்றி மேலும் எழுதலாமா இல்லையா என தீர்மானிக்க போகிறேன், அந்த பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே,தயவு செய்து உங்கள் கருத்துக்களை கூறவும்.
இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்...
பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...
PHISHING:
ReplyDeleteஇன்னும் இரண்டு பொது விதிகள் இருக்கு நண்பா,
1. எந்த வங்கியும் கடவுச்சொல் செலுத்தும் இணைப்புடன் மின்னஞ்சல் அனுப்புவதில்லை.
2. Too Good to be true வான எந்த விடயத்தை நம்பியும் கடவுச்சொல்லோ, கடன் அட்டை இலக்கமோ அளித்தால் ஆப்பு நிச்சயம்.
தேவையான தொழில்நுட்ப அறிவைக் காலம் கருதி வெளியிட்டிருக்கிறீர்கள்.
ReplyDeleteபலரும் விழிப்புணர்வடைய இவ்விடுகை துணை நிற்கும்
நண்பா.
ஹேக்கர்களை - தாக்குநர்கள் என அழைக்கலாம் எனக் கருதுகிறேன் நண்பா.
ReplyDeleteஎன் வலையில்
ReplyDeleteஅடக்கம் செய்யவா அறிவியல்
என்னும் இடுகை வெளியிட்டிருக்கிறேன் அன்பரே..
காண அன்புடன் அழைக்கிறேன்.
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html
பயனுள்ள பகிர்வைத்தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteசகோ .வாருங்கள் என் தளத்தில் கவிதை காத்திருக்கு .
ஓட்டுப் போட மறந்துவிடாதீர்கள் சகோ ஹி..ஹி ..ஹி ..மிக்க நன்றி பகிர்வுக்கு .............
நல்ல பகிர்வு நண்பா.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அசத்தல் பதிவு
ReplyDeleteபதிவை பகிர்ந்ததற்கு நன்றி
நேரடி ரிப்போர்ட்
இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6
நல்ல பதிவு நண்பா
ReplyDeletevery good
ReplyDeletekeep it up .
very useful information,
ReplyDeletethank you,
yaarum comments podavillai enbatharkaga eluhtavathi vida vendaam ,
vidaa muyarchi visvarooba vetri........
வருகை தந்து கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி..
ReplyDeletevery useful post Thank you bro
ReplyDeletemigavum arumaiyaana pathivu..
ReplyDeletekeep it up sir.