Friday, September 30, 2011

விண்டோஸ் 8ன் சிறப்பம்சங்கள்...!!!

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8ன் முதல் சோதனை பதிப்பை சமீபத்தில் வெளியிட்டது நினைவிருக்கலாம். இதனை பலர் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள் நானும் இன்னும் பயன்படுத்தவில்லை, இருந்தாலும் இணையத்தில் கிடைத்த படங்கள் மற்றும் சில விஷயங்களையும் வைத்து விண்டோஸ் 8ன் சிறப்பம்சங்களை பற்றி இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

1)பயனர் இடைமுகம்(User Interface)
இந்த இயங்குதளத்தில் பிரபலமான WP7 Metro பயனர் இடைமுடம் பயன்படுத்தப்படுகிறது.


மேலும் இதில் மற்றொரு முக்கிய விஷயம் இதில் ஸ்டார்ட் மெனுவிற்கு பதிலாக ஸ்டார்ட் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரை முழுவதும் குறுக்கு விசை ஐகான்களால் நிறைந்திருக்கும், நீங்கள் அதில் உள்ள ஐகான்களை நீக்கவோ சேர்க்கவோ மேலும் அவற்றின் அளவை மாற்றவோ முடியும்.


மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பயனர் இடைமுகத்தினால் இது மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்த எளிமையாய் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் இந்த பயனர் இடைமுகம் தொடுதிரை சாதனங்களில் இயங்குவதற்கு மிகவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2)தேடல் வசதி(Search)


மேலும் இந்த இயங்குதளத்தில் கோப்புகளை தேடும் வசதி மிகவும் விரைவாக இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது, விண்டோஸின் முந்தைய பதிப்புகளை போல அல்லாமல் இந்த தேடுதல் முறையில் நீங்கள் ஒரு கோப்பின் பெயர் மட்டுமல்லாமல் அதன் உள்ளே உள்ள ஏதேனும் ஒரு விஷயத்தை கொடுத்தும் தேடலை மேற்கொள்ளலாம். அதாவது ஒரு Ms-Word கோப்பின் உள்ளே சேமிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு வார்த்தையை தேடினால் கூட இந்த கோப்பு காண்பிக்கப்படும்.

3)குறைவான துவக்க நேரம்(Less Start up time)
இதில் கூறப்பட்டுள்ள மற்றொரு வசதியானது அதன் பூட்டிங் நேரம் குறைவானது என்பதுதான், மைக்ரோசாப்ட் 5 விநாடிகளில் ஸ்டார்ட் ஆகி பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று அறிவித்திருந்தது ஆனால் அதைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது, விண்டோஸின் முந்தைய பதிப்புகளை விட இந்த துவக்க நேரம் குறைவானதுதான், மேலும் விண்டோஸ் 7ல் இயங்கிய அனைத்து மென்பொருட்களும் அதைவிட வேகமாக விண்டோஸ் 8ல் இயங்குவதாக கூறுகின்றனர்.

4)மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ப்ளோரர்(windows explorer)
இதில் உள்ள மிக மிக முக்கியமான விஷயம் இதில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007ல் பயன்படுத்தப்பட்டுள்ளதை போன்ற ரிப்பன் மெனு பட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது.


இந்த ரிப்பன் மெனுவானது நீங்கள் செலக்ட் செய்துள்ள கோப்பின் வகையை பொறுத்து தானாக மாறிக்கொள்கிறது, நீங்கள் mp3 கோப்பை செலக்ட் செய்தால் ப்ளே வித் ஆப்ஷனும் மற்ற ஆப்ஷன்களும், நீங்கள் ZIP கோப்பை செலக்ட் செய்தால் ஆப்ஷனும் தானாகவே மாறிக்கொள்கிறது.

5)இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10(IE 10)



இந்த இயங்குதளத்தில் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10 பதிப்பு இணைக்கப்பட்டுள்ளது, இதில் CSS3 மற்றும் HTML5னை இயக்கும் திறன் உள்ளது, எனவே ஃப்ளாஷ் இல்லாமலேயே வீடியோக்களை பார்த்தல் மற்றும் பல வேலைகளை செய்யலாம்.

6)மார்க்கெட் ஸ்டோர்(Market)
விண்டோஸ் 8 பதிப்பின் வெளியீட்டுடன் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மென்பொருட்களுக்கு உள்ளதைப் போன்ற மார்க்கெட் ஸ்டோர் ஒன்றினை அறிமுகப்படுத்தும் திட்டமும் மைக்ரோசாப்டிடம் உள்ளதாம், இது இன்னும் முழுமையாக முடிவடையாததால் இப்போது இந்த சோதனை பதிப்பில் இணைக்கப்படவில்லை.

7)லைவ் சின்க்ரோனைஷேசன்(Live sync)
இதில் உள்ள மேலும் ஒரு முக்கிய வசதி நமது டேட்டாக்களை நேரடியாக சின்க்ரனைஸ்(Synchronise) செய்ய இயலும், உங்களின் விண்டோஸ் லைவ் ஐடியை பயன்படுத்தி நீங்கள் உள்நுழைந்தால் உங்கள் கோப்புகள், அமைவுகள் அனைத்தும் சின்க் செய்யப்பட்டு விடும்.


பின்னர் நீங்கள் எந்த கணினியிலும் உங்கள் ஐடியினை பயன்படுத்தி அந்த கோப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் மைக்ரோசாப்டானது கூகுள் க்ரோம் இயங்குதளத்தின் போட்டியை சமாளிக்க ஒரு அடி எடுத்து வைத்துவிட்டது, இந்தியர்களான நாம் இந்த சிங்க் மற்றும் கூகுள் க்ரோம் இயங்குதளத்தை பயன்படுத்தும் அளவிற்கு தேவையான இணைய வேகத்தை இன்னும் அடையவில்லை என்றே கருதுகிறேன், மற்ற நாடுகளுக்கு இந்த வசதி ஒரு அரிய வரப்பிரசாதம்..

இவ்வளவையும் படித்தபிறகு உங்களுக்கு விண்டோஸ் 8 பயன்படுத்தி பார்க்க எண்ணம் வரலாம், சோதனை பதிப்பிற்கான தரவிறக்க சுட்டி இங்கே..



நன்றி: சமீபத்தில் எனது ஒரு பதிவில் இரண்டு பதிவர்கள் எதிர்மறைக் கருத்து இட்டு விவாதித்தனர் நானும் விவாதம் செய்தேன், இறுதியில் விவாதம் முடிந்துவிட்டது. ஆனால் அதில் ஒரு பதிவர் எதிர்மறைக் கருத்து அவருக்கு முதலிலேயே தோன்றியதாகவும் ஆனால் அப்போதே எதிர்மறையாக கருத்திட்டால் பதிவு பிரபலம் அடையாமல் போகலாம் என்பதால் கருத்து சொல்லாமலே இருந்ததாகவும், மற்றொரு பதிவர் கருத்து சொன்னதாலேயே அவர் கருத்துக்கு ஆதரவளித்ததாகவும், தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாமென்றும் மின்னஞ்சலில் வருத்தம் தெரிவித்திருந்தார், அவரின் பண்பினையும், மற்றவர்களை காயப்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணத்தினையும் கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன், ஏனெனில் என்னிடம் அத்தகைய பண்பு இல்லை அதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். அவர் யாரென பொதுவில் சொல்லி அவருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை ஆனால் அவரின் அந்த நல்ல குணத்துக்கு அடிபணிகிறேன். நன்றி ”நண்பா”




இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


4 comments:

  1. This post is very useful to me who has less knowledge in computer field. Very much appreciated.samy

    ReplyDelete
  2. @samy வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா...

    ReplyDelete
  3. விண்டோஸ் 8 பற்றி புதிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி நண்பா! தற்போது விண்டோஸ் 7 எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. விண்டோஸ் 8 படத்தை பார்த்தால் பிடிக்கவில்லை. ஒரு வேலை பார்க்க, பார்க்க தான் பிடிக்குமோ?

    பயன்படுத்தி பார்த்தால் தான் தெரியும்.

    :) :) :)

    ReplyDelete
  4. இது சோதனை பதிப்பாக இருப்பதால் தீம்ஸ், வால்பேப்பர் போன்றவற்றை சரியாக கவனிக்காமல் எடுத்த ஸ்கிரீன்ஷாட், இறுதி பதிப்பு வந்ததும் நிச்சயம் விண்டோஸ் 7ன் இடத்தையும் புகழையும் இதுவும் பிடிக்கும் என நம்புகிறேன்,

    வருகைக்கு நன்றி ப்ளாக்கர் நண்பன்...

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...