Tuesday, September 13, 2011

நெருப்புநரி ஜாலங்கள்-2!

நெருப்புநரி கொண்டுள்ள ஏராளமான வசதிகளைப் பற்றி ஆயிரம் பதிவுகள் எழுதினாலும் விவரிக்க இயலாது, அந்த வகையில் இன்று ஒரு நெருப்பு நரி உலவியின் ஒரு அமைப்பை குறித்து பார்ப்போம்..

நாம் பல நேரங்களில் பல டாப்களை திறந்து வைத்துக்கொண்டு  இணையத்தில் உலவிக்கொண்டிருப்போம், ஒரு டாபிலிருந்து மற்றொரு டாபிற்கு தாவுகையில் தவறுதலாக அந்த டாபின் க்ளோஸ் பட்டனில் க்ளிக் செய்துவிடுவோம், அந்த டாப் மூடிவிடும், அதில் திறந்திருந்த பக்கத்தை மீண்டும் மற்றொரு டாபில் திறக்கவேண்டும். இதற்கு பதிலாக அந்த டாப்களில் உள்ள க்ளோஸ் பட்டன்களை நீக்கிவிட்டால் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கலாம்.

க்ளோஸ் பட்டனை நீக்கிவிட்டால் டாபினை எப்படி மூடுவது என்று கேட்கிறீர்களா? எந்த டாபினை க்ளோஸ் செய்யவேண்டுமோ அந்த டாபின் மீது உங்கள் மௌசின் நடுபட்டனால் அழுத்தினால் அந்த டாப் மட்டும் மூடப்பட்டுவிடும் எனவே க்ளாஸ் பட்டன் அவசியம் இல்லை.

இப்போது க்ளோஸ் பட்டனை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.

முதலில் உங்கள் உலவியின் அட்ரஸ்பாரில் about:config என்று டைப் செய்து எண்டரை தட்டுங்கள்.

இப்பொழுது ஒரு எச்சரிக்கை செய்தி வரும் அதில் I'll be careful என்பதை க்ளிக் செய்யுங்கள்.

இப்போது உங்களின் திரையில் ஒரு விண்டோவ் தோன்றியிருக்கும், அதில் உள்ள சர்ச் பாக்ஸில் browser.tabs.closeButtons என்று டைப் செய்து எண்டர் கொடுங்கள்.


இப்போது தோன்றும் இரண்டு முடிவுகளில் முதலாவதாக உள்ள browser.tabs.closebutton என்பதை இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது integer என்ற ஒரு சிறிய பெட்டி இருக்கும், அதில் தானமைவாக 1 வைக்கப்பட்டிருக்கும், க்ளோஸ் பட்டனை உங்கள் விருப்பத்திற்கு மாற்றிவைக்க பின்வரும் எண்களை அந்த கட்டத்திற்குள் கொடுத்து எண்டரை தட்டுங்கள்.

0-ஆக்டிவ் டாபில் மட்டும் க்ளோஸ் பட்டனை தெரியவைக்க.


1-அனைத்து டாப்களிலும் க்ளோஸ் பட்டனை தெரியவைக்க


2-எந்த டாபிலும் க்ளோஸ் பட்டனே இல்லாமல் செய்ய


3-ஆக்டிவ் டாபிற்கான க்ளோஸ் பட்டனை அந்த டாப் பட்டையின் இறுதியில் தெரியவைக்க...

 அவ்வளவுதான்..


டிஸ்கி-1: எனது வலைப்பூவிற்கான பேஸ்புக் பக்கத்தை துவங்கியுள்ளேன், தயவு செய்து அதனை லைக் செய்யவும்.சைட்பாரில் இருக்கிறது லைக் பாக்ஸ் இருந்தாலும் முகவரிஇங்கே:பேஸ்புக் பக்கம்


தொடர்புடைய பதிவுகள்:

நெருப்பு நரி ஜாலங்கள-1

நெருப்பு நரியை தங்கள் இஷ்டம்போல் ஆட்டிவைக்க!!


ஜோக் மாதிரி:
Life insurance: A contract that keeps you poor all your life so that you can die rich ;-) 
Marriage:It is an agreement in which a man looses his bachelors degree and a women gains her masters.
Dictionary: A place where success comes before work
Smile: A curve dat can set a lot of thngs straight.
Doctor: A person who kills ur ills by pills, n kills U by bills. ;-P



இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


5 comments:

  1. இன்று தான் நரியை இறக்கினேன்..பொருத்தமாக உங்கள் பதிவு..

    ReplyDelete
  2. ஹ்ம்ம், வருகைக்கு நன்றி செங்கோவி அண்ணே... 3.15க்கு கூட முழிச்சிருக்கீங்க போல?

    ReplyDelete
  3. its useful one machi thnks da

    ReplyDelete
  4. பாஸ் வந்து படித்து கருத்துரை இடவும் .....

    நெருப்பு நரி உலாவியின் ஜாலங்கள்

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு நன்றி .

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...