Sunday, September 11, 2011

உங்கள் தளத்துக்கான சிறந்த ஹோஸ்டிங்கினை தேர்ந்தெடுப்பது எப்படி?

நாம் ஒரு இணையதளத்தை துவங்கினால் ஒரு நல்ல ஹோஸ்டிங் வழங்கியினை தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது, இவ்வாறு நல்ல ஹோஸ்டிங்கினை தேர்ந்தெடுப்பதன் மூலம் வருங்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். இப்பொழுது நிறைய நிறுவனங்கள் கட்டற்ற அலைவரிசை, மற்றும் அதிக இணைப்புக்கான இடங்களை தருவதாக வாக்குறுதி தருகின்றன, ஆனால் நீங்கள் அந்த ஹோஸ்டிங்கினை தேர்ந்தெடுத்து உங்கள் தளத்திற்கு ஓரளவிற்கு நல்ல டிராஃபிக் வர ஆரம்பித்தவுடன் அவை உங்கள் ஹோஸ்டிங் ப்ளானை மேம்படுத்த சொல்லி கேட்கும், காரணம் கேட்டால் இவ்வளவு டிராஃபிக்கினை இந்த திட்டம் சப்போர்ட் செய்யாது, SO PLEASE UPGRADE என்பார்கள்.நமக்கும் வேறு வழியில்லை நாம் மேலும் பணம் செலவு செய்து நமது ப்ளானை அப்கிரேட் செய்துதான் ஆகவேண்டும்.

வெப் ஹோஸ்டிங் வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் மூன்று வகையான ஹோஸ்டிங்கினை வழங்குகின்றன.
  • Shared Hosting
  • Dedicated Server Hosting
  • Virtual Dedicated Server or Virtual Private Server
Shared Hosting: 
இந்த முறையானது புதிதாக தொடங்கப்படும் சிறிய தளங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும், இதில் ஒரே சர்வர் பல தளங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும், கனெக்‌ஷன்களும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும். இதில் சிறந்த ஹோஸ்டிங் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

Dedicated Server Hosting:
இந்த முறையில் உங்களுக்கென்று ஒரு தனி சர்வர் செயல்படும், இந்த முறையானது ஸ்டிரீமிங் தளங்கள் மற்றும் படங்களை பகிரும் தளங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த முறையே மிகவும் சிறந்த ஹோஸ்டிங்கினை தரும்..

Virtual Dedicated Server:
இந்த முறையானது மேலே சொன்ன இரண்டு முறைகளையும் கலந்த முறையாகும், இதில் ஒரே சர்வரில் பல தளங்கள் இயங்கும் ஆனால் ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனி இணைப்புகள் மற்றும் பிரைவசி கொடுக்கப்பட்டிருக்கும்.

இதில் மேலும் இரண்டு முறைகள் உள்ளது அவையாவன,
  • Windows Hosting
  • Linux Hosting 
Windows Web Hosting:
இந்த முறையை நீங்கள் பயன்படுத்தினால் கிடைக்கும் மிகப்பெரிய பயன் என்னவென்றால் இந்த முறையில் நீங்கள் மைக்ரோசாஃப்ட் வெப் டெவலப்பிங் மென்பொருட்களையும் ஸ்கிர்ப்டுகளையும் பயன்படுத்தலாம்.
உதாரணத்திற்கு,
  1. Active Server Pages(ASP)
  2. Virtual Basic Scripts(VB Script)
  3. MS Index Server
Linux Web Hosting:
இந்த முறையானது விண்டோஸ் ஹோஸ்டிங்கினை விட மலிவானதும் சிறந்ததுமாகும், இது விண்டோஸ் ஹோஸ்டிங்கினை விட வேகமானதாகவும், கிராஷிங் இல்லாத நிலைப்புத்தன்மை அதிகம் உடையதாகவும் இருக்கும். ஆனால் இதில் நாம் மைக்ரோசாப்ட் மென்பொருட்களை பயன்படுத்தமுடியாது, கூகிள் சர்வர்களில் லினக்ஸ் வெப் ஹோஸ்டிங் முறையே பயன்படுத்தப்படுகிறது.

எனவே உங்கள் தளத்திற்கு சிறந்த ஹோஸ்டிங்கினை தேர்ந்தெடுக்க மேற்சொன்னவற்றை பரிசீலித்த பின் உங்கள் ஹோஸ்டினை தேர்ந்தெடுக்கவும்.


ஜோக்: 
மிஸ்டர்.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம்.
மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான்.

அம்மா சொன்னாள்.."கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. 

மிஸ்டர்.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்.."குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..!

திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்.."என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்..
இருவரில் யார் சொல்வது சரி..?

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் குரங்குப் பரம்பரை..!ஹாஹாஹா


இந்த தளத்திற்கு 10,000 விசிட்டர்கள் வந்துள்ளனர், அலெக்ஸா ரேங்க் 4,44,566.. இதுவரை என் பதிவுகளை படித்த நண்பர்களுக்கும் எனக்கு பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கும், இத்தளத்தை பின் தொடரும் 55 நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

 

இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


9 comments:

  1. @பொன்மலர்: வருகைக்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  2. ஹா..ஹா..ஹா.. ஜோக் சூப்பர்..

    என்னாது? பதிவு பத்தி சொல்லனுமா? சரி,

    web hosting பற்றி நன்றாக விளக்கியுள்ளீர்கள். சில நிறுவனங்கள் குறைந்த விலையில் (Cheap Hosting) தருவதாக சொல்லும். ஆனால் அவைகள் நீங்கள் சொல்வது போன்று //உங்கள் தளத்திற்கு ஓரளவிற்கு நல்ல டிராஃபிக் வர ஆரம்பித்தவுடன் அவை உங்கள் ஹோஸ்டிங் ப்ளானை மேம்படுத்த சொல்லி கேட்கும், காரணம் கேட்டால் இவ்வளவு டிராஃபிக்கினை இந்த திட்டம் சப்போர்ட் செய்யாது, SO PLEASE UPGRADE என்பார்கள்.//

    வெப் ஹோஸ்டிங் வாங்கும் எண்ணம் இருந்தால் செலவு அதிகமானாலும், நல்ல ஹோஸ்டிங் பார்த்து வாங்குவது சிறந்தது.

    ReplyDelete
  3. வாங்க அப்துல்(ப்ளாக்கர் நண்பன்) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

    ReplyDelete
  4. இண்ட்லியில் பிரபலப்படுத்தி இந்த பதிவை பலரும் படிக்க வழிவகை செய்யுங்கள் நண்பர்களே...

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றிகள் !

    ReplyDelete
  6. @கௌசல்யா: வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. பயனுள்ள நல்ல தகவலை வழங்கிய உங்களுக்கு
    மிக்க நன்றி சகோ .ஓட்டெல்லாம் போட்டாச்சு .....

    ReplyDelete
  8. @அம்பாளடியாள்: வருகைக்கும் கருத்திற்கும் ஓட்டுக்களுக்கும் நன்றி சகோதரி....

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...