Sunday, June 12, 2011

இந்திய ரூபாய் குறியீட்டை டைப் செய்வது எப்படி?

நமது இந்திய அரசாங்கம் சமீபத்தில் இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டை
’`’ அறிமுகப்படுத்தியது, ஆனால் அதனை நாம் கணினிகளில் உபயோகிப்பதற்கான வழிமுறைகள் மிகவும் குறைவு, இப்பொழுது நாம் அதனை எவ்வாறு கோப்புகளிலும் வலைத்தளங்களிலும் டைப் செய்வது என்று காண்போம்.

இதனை செய்வதற்கு உங்கள் கோப்புகளில் ஒரு முறையையும் வலைத்தளங்களில் வேறு வழியையும் பின்பற்ற வேண்டும்.

வழி-1: ஃபொராடியன் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஒரு புது எழுத்துருவினைக் கொண்டு நாம் நமது டாக்குமெண்டுகளில் இந்த குறியீட்டினை உபயோகிக்கலாம், இந்த எழுத்திருவினை தரவிறக்க இங்கே செல்லவும் Download Rupee Foradian.

இதனை தரவிறக்கி நிறுவிய பிறகு(Installation) உங்கள் word processing apllication(note pad, ms word etc.)ஐ திறந்துகொண்டு அதில் Rupee foradian எழுத்துருவை செலக்ட் செய்து கொள்ளவும்.

பின் உங்கள் விசைப்பலகையில் இந்த பட்டனைத் தட்டவும் ’ ~ ’.இப்பொழுது உங்கள் கோப்பில் ரூபாய்க்கான குறியீடு வந்திருக்கும்.
(NOTE:நீங்கள் ஷிப்ட் ஆல்ட் விசைகள் எதையும் அழுத்த தேவையில்லை)

நீங்கள் இதையே காப்பி செய்து வலைத்தளங்களிலும் பயன்படுத்தலாம். இந்த குறியீட்டிற்கான ஜாவாஸ்கிரிப்ட் இருந்தாலும் அதனை இன்னும் சோதித்துப் பார்க்காததால் அதனை இன்னொரு பதிவில் எழுதுகிறேன். 

பிடித்திருந்தால் தமிழ்மணம் ஓட்டுப் போடுங்க, மற்ற திரட்டிகளோட ஓட்டுப்பட்டைய இணைக்கிறதுல சிறிய தொழில்நுட்ப கோளாறு இருக்கு,Our Engineers are sincerly working on it. 
எனக்கு ஒரு சந்தேகம் நம்ம அரசாங்கம் அறிமுகப்படுத்துன இந்த குறியீடு உங்களுக்கு கையில எழுதுறதுக்கு இல்ல கணினில எழுதுறதுக்கு இலகுவா இருக்கா?


3 comments:

  1. //ம் நம்ம அரசாங்கம் அறிமுகப்படுத்துன இந்த குறியீடு உங்களுக்கு கையில எழுதுறதுக்கு இல்ல கணினில எழுதுறதுக்கு இலகுவா இருக்கா?//

    புதுசுல எல்லாம் இப்படி தான் கஷ்டமா இருக்கும் ,.. போக போக பழகிடும் ... நன்றி உதவிக்கு

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கிஷோக்..

    ReplyDelete
  3. Please start a tech blog and enter my monthly top ten.

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...