Sunday, June 5, 2011

மனம் சுருங்கிய மனிதர்கள்!!!
இது என்னுடைய அனுபவத்தில் உண்ர்ந்ததை எழுதும் ஒரு பதிவு, அதாவது நேற்று பேருந்தில் படியில் பயணம் செய்துகொண்டிருந்தேன் ஒரு நிறுத்தத்தில் ஒரு காலை இழந்த ஒரு ஆண் ஏறினார், அவருக்கு யாராவது இடம் கொடுப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்தாரோ இல்லையோ நான் எதிர்பார்த்தேன், ஆனால் அவர் ஏறி இரண்டு நிறுத்த்ங்களைக் கடந்தும் யாரும் எழுந்து தனது இருக்கையை தர முன்வரவில்லை, இப்பொழுது பேருந்தில் மேலும் பலர் ஏறிக்கொள்ள கூட்ட நெரிசலில் அவரால் நிற்கவே முடியவில்லை, என்னால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை எனது நண்பனை எழுந்துகொள்ள சொல்லிவிட்டு அந்த இடத்தை அவருக்கு கொடுக்க சொல்லலாம் என எண்ணி அவனை எழுந்துகொள்ள சொன்னேன். அவன் எழுந்து அந்த இருக்கை காலியானதும் அவர் அங்கு வருவதற்குள் இரண்டு பொதுஜனங்கள் முட்டிமோதிக் கொண்டு அந்த இருக்கையில் ஒரு பொதுஜனம் அமர்ந்துவிட்டது, அந்த பொதுஜனத்திடம் போய் அந்த இருக்கையை அவருக்கு கொடுஙகள் என்றால் அவர் சண்டைக்கு வந்துவிட்டார், இதைப்பார்த்த அந்த ஊனமுற்ற நண்பர் மனம் நொந்து தனக்கு இருக்கையே வேண்டாம் என்று கூறிவிட்டார். பிறகு இதைப்பற்றி நடத்துனரிடம் கூறி ஊனமுற்றோர் இருக்கையை அவருக்காக காலி செய்து தந்தோம் நானும் என் நண்பனும்…


 


 

இதை வீட்டிற்கு வந்து நினைத்துப் பார்க்கையில் என் மனம் மிகவும் வருந்தியது, முன்பெல்லாம் பெருநகரங்களில் மட்டுமே நான் கேள்விப்பட்ட இந்த குறுகிய மனப்பான்மை மற்றும் சுயநலம் ஆகிய இரு குணங்களை நான் வசிக்கும் கிராமத்தில் கண்டதை கிரகித்துக்கொள்ள என்னால் இயலவில்லை..


 

இதைப் படிப்பவர்களில் பலர் நினைக்கலாம் இவன் மட்டும் ஒழுங்கா என்று, நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள், நான் எப்படி என்று எனக்கு தெரியும், இதைப் படிக்கும் பத்துபேர்களில் ஒருவர் இதன்பிறகு ஒரு ஊனமுற்ற நண்பருக்கு தன் இருக்கையை தந்தால் அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சி, முடிந்தால் இதை உங்கள் வலையிலும் மறுபதிவு செய்யுங்கள் இன்னொருவரும் மனம் மாறினால் நலம்…


 

நண்பர்களே குறுகிய மனப்பான்மையை அனைவரும் கைவிடவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம், யாரையும் குறிப்பிட்டோ காயப்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல

.

(பின்குறிப்பு:இது Microsoft office OneNote மூலம் எழுதப்பட்டு நேரடியாக அதிலிருந்தே பதிவிடப்பட்டது, நீங்களும் Onenote உபயோகித்து பாருங்கள்… யாருக்காவது தேவை என்றால் அதில் எப்படி பதிவிடுவது என்பதை விளக்குகிறேன், பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.)


2 comments:

  1. உடல் ஊனமுற்றோர் மட்டுமல்ல கர்ப்பிணி பெண்கள், வயதானோர், கை குழந்தையை வைத்திருப்போர் இவர்களுக்கும் உதவ வேண்டும். நிறைய சமயங்களில் பள்ளி மாணவர்கள்தான் இப்படி செய்கிறார்கள்.

    ReplyDelete
  2. உண்மையிலயே ஓர் தழிழனாய் இருந்து வருத்தப் படக் கூடிய விஷயம் தான் அது ஊனமுற்ற நண்பரின் மனப்பான்மை கூட அங்கே இருக்கையில் அமர்ந்திருந்த பொதுமக்களுக்கு இல்லையே ?

    நம் நாடு வளர நாமலே எதிரி எதிரி எதிரி!!!

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...