Wednesday, June 15, 2011

விண்டோஸ் 7ல் மறைந்துள்ள தீம்களை அன்லாக் செய்ய!!!

விண்டோஸ் 7 மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டுள்ள ஒரு சிறந்த இயங்குதளமாகும்(லினக்ஸ் பயனாளிகள் சண்டைக்கு வந்துடாதீங்க!!!), விண்டோஸ் 7 ல் தீம்கள் மிக அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளன, விண்டோஸ் 7ன் தோற்றமும் அதன் சிறப்புக்கு ஒரு காரணம்.

நாம் இந்த இயங்குதளத்தை நிறுவுகையில் நமது வட்டாரம் மற்றும் மொழியை தேர்வு செய்திருப்போம், நாம் தேர்வு செய்யப்பட்ட வட்டாரம்(நாடு) மற்றும் மொழிக்கேற்ப நமக்கான தீம்கள் காட்டப்படும், உதாரணத்திற்கு நீங்கள் ஆங்கிலத்தை மொழியாக தேர்வு செய்தால் உங்களுக்கு அமெரிக்கா தீம் காட்டப்பட்டு மற்ற ஆங்கில நாடுகளின் தீம்கள் மறைக்கப்படும்,(ஆஸ்திரேலியா,etc).

ஆனால் நாம் இதைப்போன்ற மறைக்கப்பட்ட தீம்களை பயன்படுத்தலாம் அதற்கான வழிமுறைகளை காண்போம்

படி-1: உங்கள் கணினியில் Control Panel-->Appearance and Personalization-->Folder Options என்ற இடத்திற்கு செல்லுங்கள்.

படி-2: அதில் View என்ற Tabன் கீழ் உள்ள Hide Protected Operating System Files(Recommended) என்பதை Unselect செய்திடுங்கள், இப்பொழுது தோன்றும் விண்டோவில் Yes  என்பதை கிளிக் செய்திடுங்கள்.

படி-3: இப்பொழுது My Computer-->Local Disk(C:)-->Windows-->Globalization-->MCT என்ற போல்டருக்குள் செல்லுங்கள், அதில் ஐந்து போல்டர்கள் இருக்கும், அந்த ஐந்து போல்டருக்குள்ளும் மூன்று சப்-போல்டர்கள் இருக்கும்.


படி-4:அதில் Theme என்ற போல்டருக்குள் ஒவ்வொரு தீம் பைல் இருக்கும் அதனை அப்ளை செய்தால் உங்களுக்கு புதிடாக ஐந்து தீம்கள் அன்லாக் ஆகியிருக்கும். அவ்வளவேதான்.

படி-5:இப்பொழுது Peronalization ஐ திறந்து பார்த்தால் புதிய தீம் அன்லாக் ஆகியிருப்பதைக் காணலாம், இதே போல் ஐந்து தீம்களையும் அப்ளை செய்யவும்.


7 comments:

  1. வருகைக்கு நன்றி யுவராஜ், நன்றி சொன்னதுக்கு நன்றி

    ReplyDelete
  2. ungala madiri alungalaladan megame vaanil varudu...romba thankpa..

    ReplyDelete
  3. ungala madiri alungalaladan megame vaanil varudu...romba thankpa// என்னங்க என்ன விட பயங்கரமா போட்டு தாக்குறீங்க? வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரவிச்சந்திரன்..

    ReplyDelete
  4. நண்பர் விக்னேஷ் மிக்க நன்றி நன்றி

    ReplyDelete
  5. நன்றி துரை

    ReplyDelete
  6. தகவல்கள் நன்றாக உள்ளது.

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...