Saturday, July 2, 2011

எந்த தளத்தையும் சுலபமாக ஹாக் செய்ய...!!!

Add caption
நாம் அனைவருக்குமே மற்றவர்களிடம் நம் திறமையை காட்டவேண்டும் என்ற ஆசை இருக்கும், நாம் ஒரு இணையதளத்தை ஹாக் செய்து அதை மற்றவரிடம் காண்பித்தால் எப்படி இருக்கும்?அதை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.


உண்மையில் இது ஹாக்கிங் அல்ல ஒரு சிறிய ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி நாம் மற்றவரை வியப்பில் ஆழ்த்தப் போகிறோம், உதாரணத்திற்கு நான் பேஸ்புக்கை எடுத்துக் கொள்கிறேன்.
1) நீங்கள் பேஸ்புக் நுழைவுப் பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.

2)உங்கள் உலவியின்()அட்ரஸ் பாரில் உள்ளதை அழித்துவிட்டு பின்வரும் ஜாவாஸ்கிரிப்ட் கோடினை அங்கு பேஸ்ட் செய்து எண்டர் கொடுங்கள்.

javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0

3)இப்பொழுது அந்த வலைத்தளமானது உங்கள் உலவிக்குள் எடிட் செய்யும் மோடிற்கு மாற்றம் அடையும், நீங்கள் தளத்தை விருப்பம் போல் எடிட் செய்யலாம், மற்றவர்களை ஏமாற்றலாம்.

’desingmode’ என்பது உங்கள் உலவியில் எடிட் மோடுக்கு கொண்டுவருகிறது.
’void 0’ என்பது உங்கள் உலவி எந்த எரரையும் காட்டமால் இருக்க உதவுகிறது.

டிஸ்கி: இது உண்மையான ஹாக்கிங் என்று நம்பி வந்தவர்களுக்காக நிர்வாகம் பொறுப்பல்ல, சூடான தலைப்பு வைத்தால் நிறைய ஹிட்ஸ் வரும் என்ற மூத்த பதிவர்களின் ஆலோசனைப்படி இத்தலைப்பு சூட்டப்பட்டது.மற்றபடி எனக்கும் ஹாக்கிங் பத்தி ஒன்னுமே தெரியாது,உண்மையான ஹாக்கிங் பத்தி நீங்க எங்கயாச்சும் போஸ்ட் பாத்தா எனக்கும் லிங்க் கொடுங்க, நானும் படிச்சு தெரிஞ்சுகிட்டு போஸ்ட் எழுதுறேன்.

-இப்படிக்கு
  நிர்வாகம்.


11 comments:

  1. super bosssssssssssss...

    ReplyDelete
  2. thank you ha ha ha

    ReplyDelete
  3. ஏய்.. என்ன இது சின்ன புள்ள தனமா...
    முதல்ல உன்னுடைய பிளாக்கைதான் ஹாக் செய்யனும்...

    ReplyDelete
  4. பரவாயில்லையே ஹிட்ஸ் எடுக்குற வித்தையை நீயும் கத்துக்கிட்டே...

    ம்.. கலக்கு...

    ReplyDelete
  5. # கவிதை வீதி # சௌந்தர் said...

    பரவாயில்லையே ஹிட்ஸ் எடுக்குற வித்தையை நீயும் கத்துக்கிட்டே...//

    எல்லாம் தங்களிடம் குடித்த யானைப் பால்தான் மன்னா....

    ReplyDelete
  6. itha nan wera oru blog la pathirukane? ipawe copy past a? welangidum,,,,,,,,,,, naan netthu than antha blog la paathu naanum fb la konja pera kulappi wacchirukken,

    https://www.facebook.com/photo.php?fbid=184273094970219&set=a.105234526207410.8030.100001625897511&type=1&ref=nf

    ReplyDelete
  7. @hajasreeNஎந்த வலைப்பூவில் பாத்தீங்க? இது என்னோட சொந்த இடுகை நீங்க நேத்து பாத்ததா சொல்றீங்க, நான் இத பதிஞ்சு கிட்டத்தட்ட ஒரு மாதம் இருக்கும்னு நெனக்குறேன், நான் காப்பி பேஸ்ட் செய்யுற ஆளில்ல அப்படி செய்யனும்னு நெனச்சிருந்தாலும் எத்தனையோ நல்ல இடுகைகளை விட்டுட்டு இந்த சாதாரண விஷயத்தை காப்பி பேஸ்ட் செய்யவேண்டிய அவசியம் இல்லை நண்பரே...

    ReplyDelete
  8. கிழக்கு திசை நோக்கி நிற்கவும் .இப்போது உங்கள்
    தந்தையாரின் உதவியுடன் ஒரு உதை விழுகிறது
    இதை உணர்ந்துவிட்டேர்களா?......நன்றி பகிர்வுக்கு ஹி..ஹி...ஹி...

    ReplyDelete
  9. ஒன்னும் புரியல அம்பாளடியாள்

    ReplyDelete
  10. உன்ன உதைக்கணும்னு தோணுது..!! சும்மா...!! வெள்ளாட்டுக்கு சொன்னேன்..!!

    ReplyDelete
  11. அம்பாளடியால் இதைத்தான் சொன்னாங்க..!! புரியலயா நண்பரே..!! நல்ல விளையாட்டுத்தனமான பதிவு..பகிர்தலுக்கு நன்றி..!!

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...