Monday, July 25, 2011

உங்கள் டெஸ்க்டாப்பிலிருந்து இலவச எஸ்.எம்.எஸ்...!!!

நாம் அனைவரும் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப பல தளங்களை உபயோகிப்போம் அவற்றுள் சிறந்த தளம் Way2Sms ஆகும். ஆனால் இதை நீங்கள் உபயோகிப்பதற்க்கு உலவியை பயன்படுத்தி அந்த தளத்திற்குள் நுழைந்து அதில் வரும் விளம்பரங்களை தவிர்த்து அதில் வரும் ஸ்ட்ரீமிங் முடிந்து அப்புறம் குறுஞ்செய்தி அனுப்புவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

ஆனால் இதற்கான மென்பொருளை(தரவிறக்க சுட்டி இறுதியில்) நாம் கணினியில் நிறுவிக்கொண்டால் நீங்கள் இந்தியாவில் உள்ள எந்த கைப்பேசிக்கும் எளிதாக குறுஞ்செய்தி அனுப்பலாம். இந்த rar  கோப்பினை தரவிறக்கி நேரடியாக உங்கள் ப்ரோகிராம் பைல்ஸ் போல்டருக்குள் எக்ஸ்ட்ராக்ட் செய்து கொள்ளவும்.

பின் அந்த புரோகிராமினை துவக்கி அதில் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் way2sms பயனர் பெயர்(உங்கள் மொபைல் எண்ணே இத்தளத்தில் பயனர் பெயர்) மற்றும் கடவுச்சொல்லை உள்நுழையவும், இனி நீங்கள் அந்த தளத்தில் செய்யும் அனைத்தையும் உங்கள் டெஸ்க்டாப்பிலேயே செய்யலாம் இதில் நாம் மொபைல் எண்களையும் தனி தனி குழுக்களாகவோ ஒன்றாகவோ சேமித்து கொள்ளலாம், பயனுள்ள மென்பொருள்தானே?

தரவிறக்க சுட்டி:download here

way2smsல் பயனர் கணக்கை துவங்க:http://site6.way2sms.com/jsp/UserRegistration.jsp

உங்கள் ஓட்டுக்களே எனக்கு ஊக்கமளிக்கும், தயவு செய்து வாக்களியுங்கள், பின்னூட்டமும் கூட...!!!


9 comments:

  1. அன்பு சகோதரா
    அருமையான உபயோகமான பகிர்வு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி இராஜகோபாலன்.A.R

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி சமுத்ரா...!

    ReplyDelete
  4. பயனுள்ள நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி சகோ
    வாழ்த்துக்கள் மென்மேலும் தரமான
    ஆக்கங்கள் எழுதி உயர்வுபெற......

    ReplyDelete
  5. @அம்பாளடியாள்: வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி சகோதரி..!!

    ReplyDelete
  6. நன்றி. இந்தப் பதிவை கண்டிப்பா உங்க தளத்துல பாக்கலப்பா

    ReplyDelete
  7. @பொன்மலர்: நீங்க என் தளத்துல பாத்தீங்கண்ணு நான் சொல்லவே இல்ல சகோதரி, நீங்க எழுதினதால இன்னும் பிரபலமடையும்னு தன் சொன்னேன், எனக்கு தெரியும் நீங்க காப்பி பேஸ்ட் செய்யுற பதிவர் இல்ல, நான் சொன்ன விதம் உங்களுக்கு தப்பா தோனிருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  8. nalla padhivu aanaal ennidam erkkanave idhdhu ulladhdhu nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...