Sunday, November 20, 2011

ஃபேஸ்புக்கில் குழுவிலிருந்து வரும் Notificationகளை நிறுத்துவது எப்படி?

image நாம் அனைவரும் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறோம் அதில் பிள்ளை பிடிக்க வருபவர்களை போல குரூப்புக்கு ஆள் சேர்க்க பலர் இருக்கிறார்கள், இதில் சில குரூப்கள் நமக்கு பயனுள்ளவையாக இருந்தாலும் பல வெட்டியாக நேரத்தை வீணடிக்கின்றன. அதிலும் நீங்கள் ஒரு இரண்டு நாள் ஃபேஸ்புக் ஓப்பன் செய்யாமல் விட்டுவிட்டால் உங்கள் குழுவின்  Notificationகளால் உங்கள் கணக்கில் கொத்துப்பரோட்டா போட்டு விடுவார்கள்,அதில் இடையில் முக்கியமான சில விஷயங்கள் நம் பார்வையில் படாமல் போய்விடும். இந்த குழுவிலிருந்து விலகுவது ஒரு வழி இன்னொரு வழி என்னவென்றால் அந்த குழுவிலிருந்து வரும் notificationகளை வராமல் தடுப்பது அல்லது குறைப்பது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

1)முதலில் உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள், அதில் எந்த குரூப்பின் notificationகளை தடுக்க வேண்டுமோ அந்த குழுவிற்குள் நுழையுங்கள்.

2)அந்த குழுவின் பெயருக்கு நேரே வலது புறத்தில் உள்ள Notifications என்பதை க்ளிக் செய்யவும்.

image

3)அதில் உள்ள Off என்பதை தேர்வு செய்துவிட்டால் அந்த குழுவிலிருந்து நமக்கு எந்த செய்தியுமே வராது.

3aimgyzf

4)நீங்கள் அந்த குழுவிலிருந்து வரும் notificationகளின் எண்ணிக்கையை மட்டும் குறைக்க விரும்பினால் அதில் உள்ள Settings  என்பதை க்ளிக் செய்து அதில் உள்ள ஏதேனும் ஒரு ஆப்ஷன்களை தேர்ந்தெடுத்துக் கொள்வதன் மூலம் அந்த Notificationகளை குறைக்கலாம்.

image

இனி எந்த குழுவிலிருந்தும் தொல்லை இருக்காது…

குறிப்பு: இந்த பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ”தமிழ் கம்ப்யூட்டர் தகவல் பகிர்வு பயனர் குழு” என்பது எனது நண்பர் ஒருவரால் நடத்தப்படுகிறது, இங்கே பல பயனுள்ள கணினி,இணையம் குறித்த செய்திகள் பகிரப்படுகின்றன. இந்த குழுவில் இணைந்து உங்களால் முடிந்ததை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்குழுவின் சுட்டி இங்கே.



5 comments:

  1. பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ள தகவல் நண்பா! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் நண்பா! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்தான்...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழர்

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...