Saturday, October 29, 2011

உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-4!

வணக்கம் நண்பர்களே.. நாம் இதுவரை இந்த தொடர்பதிவில் பல்வேறு ஹாக்கிங் முறைகளை பற்றியும் அதன் தற்காப்பு முறைகளை பற்றியும் பார்த்தோம். இப்போது Tab Napping என்ற அதிநவீன ஹாக்கிங் முறையையும் அதிலிருந்து நமது தகவல்களை காப்பாற்றிக்கொள்வதும் எப்படி என்று பார்ப்போம்.

நெருப்பு நரி உலவியின் நிறுவனமான மொஸில்லா தான் முதல் முதலில் இந்த டாப் நாப்பிங் என்ற ஹாக்கிங் முறையை பற்றிய எச்சரிக்கையை வெளியிட்டது. அதாவது நாம் பல டாப்களை திறந்து வைத்துக்கொண்டு இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும் போது அதில் உள்ள ஏதேனும் ஒரு 5 முதல் 10 நிமிடங்களுக்கு திறந்து வேலை செய்யாத In-active டாப் வேறொரு போலி வலைப்பதிவுக்கு ரீ-டைரக்ட் செய்யப்பட்டு உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் திருடப்படுகிறது.
அதாவது நீங்கள் உங்கள் ஆன்லைன் பேங்க் கணக்கின் வலைத்தளத்தை ஒரு டாபிலும் முகநூலை மற்றொரு டாபிலும் திறக்கிறீர்கள். முகநூல் திறந்து அதில் நாம் மூழ்கிவிடுவதால் நமது வங்கி கணக்கு லாகின் செய்யும் பக்கம் திறந்து இன் ஆக்டிவ்வாக இருக்கும். இதனை கண்டுபிடிக்கும் ஹாக்கர்கள் உங்களின் இன் ஆக்டிவ் டாபை போலி லாகின் பக்கத்திற்கு ரீ டைரக்ட் செய்கிறார்கள்,நாம் அந்த போலி பக்கத்தில் நமது விவரங்களை கொடுத்து லாகின் செய்தால் நமது தகவல்கள் அனைத்தும் ஹாக்கர்களின் கையில் அவர்கள் நம் பணம் முழுவதையும் திருட வாய்ப்புள்ளது.
இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது அதாவது அவர்கள் முதலில் உங்கள் உலவியின் வரலாற்றை படித்து நீங்கள் அடிக்கடி செல்லும் தளங்களை குறித்த விவரங்களை பெறுகிறார்கள்.அதன் பின்னர் அவர்கள் உங்கள் உலவியின் நடவடிக்கைகளை கண்காணித்து இன் ஆக்டிவ் டாபினை ஏதேனும் ஒரு போலி பக்கத்திற்கு ரீடைரக்ட் செய்து உங்கள் தகவல்களை திருடுகிறார்கள்.
இது வெப் டிசைனிங் தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் சற்று கடினமான முறையாக தோன்றலாம் ஆனால் வெப் டிசைனர்களுக்கு மிகவும் எளிதான வேலைதான்.இதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வதற்கான வழிகளை இப்போது பார்ப்போம்.


  • முக்கியமான தளங்களுக்கு செல்கையில் உங்கள் அட்ரஸ்பாரில் உள்ள முகவரியை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

  • ஆன்லைன் வங்கி கணக்குகளை பராமரிக்கும்போது தனி விண்டோவில் திறந்து பயன்படுத்துங்கள்.

  • பல டேப்களை திறந்து பயன்படுத்தும் பழக்கத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.


இவைதான் இந்த ஹாக்கிங் முறையிலிருந்து நம்மை காத்துக்கொள்ளும் வழியாகும்.

குறிப்பு: இந்த tab napping  என்ற முறையை பற்றி இணையத்தில் சொற்ப தகவல்களே கிடைத்தது நான் எனக்கு தெரிந்தவற்றை பதிவிட்டுள்ளேன், நண்பர்கள் எவருக்கேனும் கூடுதல் தகவல்கள் தெரிந்தாலோ அல்லது நான் கூறியவற்றில் ஏதேனும் திருத்தம் இருந்தாலோ தயவுசெய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
இத்துடன் தனிநபர்களின் கணக்குகளை ஹாக் செய்வதும் அதன் பாதுகாப்பும் குறித்த தொடர் முடிவடைகிறது, மற்ற வகை ஹாக்கிங் பற்றி எழுதவா வேண்டாமா என்பதை நீங்களே கூறவேண்டும்.

தொடரின் முந்தைய பாகங்கள்: பகுதி-1,   பகுதி-2,   பகுதி-3


நன்றி:
இது என்னுடைய ஐம்பதாவது பதிவு, அலெக்ஸா ரேங்கில் இந்த வலைப்பூ 314,920வது இடத்திலும் 20,000 பேஜ்வீயூவ்களையும் பெற்றுள்ளது. இதுவரை தொடர்ந்து ஆதரவளித்துவரும் நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கும், இத்தளத்தினை பின் தொடரும் 85 நண்பர்களுக்கும், மின்னஞ்சல் மூலமாக தொடரும் 32 நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு தங்கள் ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


Wednesday, October 19, 2011

எந்த மென்பொருள்/வெப்சைட் இல்லாமல் ஸ்டிரீமிங் வீடியோக்களை எளிதாக தரவிறக்க

வணக்கம் நண்பர்களே.. நாம் அனைவரும் யூடியூப் மற்றும் மற்ற பல தளங்களில் வீடியோக்களை பார்ப்போம் அவற்றை தரவிறக்க நினைக்கும்போது ஏதேனும் ஒரு மென்பொருளை நாடுவோம் அல்லது ஏதேனும் ஒரு வலைத்தளத்தை நாடுவோம்.

இந்த மென்பொருட்கள் சரியாக தரவிறக்கம் செய்வதில்லை பாதியில் தரவிறக்கம் நின்றுவிடும் அல்லது மென்பொருள் ஹாங் ஆகிவிடும், சரி இந்த வலைத்தளங்களை உபயோகிக்கலாம் என்றால் அதில் பல தளங்கள் தரவிறக்க சுட்டியே கிடைக்காது சில மட்டுமே சரியாக வேலை செய்யும்.. அதிலும் நீங்கள் அந்த வீடியோ முழுவதையும் பார்த்துவிட்டு அதன்பிறகு தரவிறக்கினால் அந்த வீடியோ உங்களால் இரண்டு முறை தரவிறக்கப்படுகிறது இதனால் தேவையற்ற இழப்பு ஏற்படுகிறது..

இதனை தவிர்க்க நீங்கள் வீடியோ முழுவதும் பார்த்தவுடனே எந்த தரவிறக்கமும் செய்யாமல் அதனை ஒரு கோப்பாக உங்கள் கணினியில் சேமித்தால் எப்படி இருக்கும்? அதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.(கொஞ்சம் நீளமான பதிவு.)

1)முதலில் நீங்கள் எப்போதும் போல வீடியோவை பாருங்கள், முழுதும் பார்த்து முடிந்தவுடனோ அல்லது முழுதும் ஸ்டிரீமிங் முடிந்தவுடனோ உங்கள் உலவியை மூடிவிடாமல் மினிமைஸ் செய்துவிட்டு அடுத்த வரியில் குறிப்பிடப்பட்டுள்ள ஃபோல்டருக்கு செல்லுங்கள்.


2)இந்த போல்டரானது நீங்கள் பயன்படுத்தும் இயங்குதளம் மற்றும் உலவி இவற்றை பொறுத்து மாறுபடும் உங்களின் உலவி மற்றும் இயங்குதளத்திற்கு நேரே உள்ள ஃபோல்டரை தேர்ந்தெடுக்கவும்.

இயங்குதளம்உலவி ஃபோல்டர்
விண்டோஸ் 7
நெருப்புநரிC:\Users\[USERNAME*]\AppData\Local\Mozilla
\Firefox\Profiles\zdo1e2i8.default\Cache
" குரோம் C:\Users\[USERNAME*]\AppData\Local\
Google\Chrome\User Data\Default\Cache


விண்டோஸ் xp
நெருப்புநரி C:\Documents and Settings\[USERNAME*]\Application Data\Mozilla\Firefox\Profiles\Default\Cache
" குரோம் C:\Documents and Settings\[USERNAME*]\Local Settings\Application Data\Google\Chrome\

*இதில் சிவப்பு நிறத்தில் உள்ள USERNAME என்பதற்கு பதிலாக உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும் பயனர் பெயரை கொடுக்க வேண்டும்.இதில் போல்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் உள்ள போல்டர்களை நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்க வேண்டும்.

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயனர்கள் உங்கள் Cache ஃபோல்டருக்கு செல்ல பின்வருமாறு செய்யவும், உங்கள் உலவியில் Tools-->Internet Options என்பதை தேர்ந்தெடுக்கவும்..
அதில் General என்ற டாபிற்கு கீழே உள்ள Settings என்பதை க்ளிக் செய்யவும்.


இப்பொழுது தோன்றும் புதிய விண்டோவில் View Files என்பதை க்ளிக் செய்தால் உங்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் Cache ஃபோல்டர் திறந்திருக்கும். அதில் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.



3)இப்பொழுது நீங்கள் உங்கள் கணினியின் Cache ஃபோல்டருக்குள் இருப்பீர்கள் அதில் நாம் தற்பொழுது ப்ளே செய்த வீடியோ தற்காலிக Cache ஆக சேமிக்கப்பட்டிருக்கும், நாம் செய்ய வேண்டியது அதனை கண்டுபிடித்து நிரந்தரமாக சேமித்து கொள்ள வேண்டியதுதான்.














4)அந்த ஃபோல்டருக்குள் ரைட் க்ளிக் செய்து Sort-->By Size என்பதை தேர்ந்தெடுங்கள்.


5)அதில் மெமரியில் பெரிய அளவில் உள்ள கோப்புக்களை VLC Media Player கொண்டு ப்ளே செய்து பாருங்கள்..(வீடியோக்கள் அதிக மெமரி அளவைத்தான் கொண்டிருக்கும்.) இதனை நீங்கள் உங்கள் வீடியோவினை கண்டுபிடிக்கும் வரையில் ஒவ்வொரு கோப்பையும் ப்ளே செய்து பார்க்கவேண்டும்.

அங்கே data_1,data_2,.... போன்ற வரிசை எண்ணில் கோப்புகள் இருக்கும் இந்த data_X வரிசை கோப்பை ப்ளே செய்ய தேவையில்லை இவையல்லாத மற்ற கோப்புகளை ப்ளே செய்யுங்கள்.



6) VLC Media Playerல் ப்ளே செய்து உங்களுக்கு வேண்டிய வீடியோவினை கண்டுபிடித்த பிறகு அதனை ரைட் க்ளிக் செய்து காப்பி செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

7)ஒட்டிய பிறகு அதில் ரைட் க்ளிக் செய்து Rename என்பதை செலக்ட் செய்து பெயரை மாற்றும் போது அதன் இறுதியில் .mp4 or .flv கோப்பாக சேமிக்கவும்.
இப்பொழுது உங்கள் வீடியோ தரவிறக்கப்பட்டுவிட்டது..

டிஸ்கி 1: பதிவின் நடுவில் இந்த டேபிளை கொண்டு வருவதற்கு திணறிய போது சரியான நேரத்தில் கை கொடுத்தது நண்பர் பலே பிரபு அவர்களின் பதிவு அவருக்கு நன்றி.


டிஸ்கி 2: இனிமேல் பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்க என்று பதிவின் கீழ் கேட்கப்போவதில்லை, நீங்களே பாத்து எதாச்சும் செஞ்சு விடுங்க.. :).. 




எனக்கு இன்றுதான் ஃபேஸ்புக்கின் வீடியோ சாட் வசதி ஆக்டிவேட் ஆயிருக்கு சிலருக்கு இன்னும் ஆகல சிலர் முன்னடியே வந்துடுச்சுன்னு சொல்றாங்க? நீங்களும் உங்களுக்கு வந்திச்சா இல்லையான்னு சொல்லுங்க. நன்றி.


Related Posts Plugin for WordPress, Blogger...