நேற்று மதியம் ஒரு பெட்ரோல் பங்கில் சென்று இரண்டு லிட்டர் பெட்ரோல் போடச் சொன்னேன், அவரும் நல்லாதான் போட்டாரு, மீட்டர் ஓடிட்டே இருக்கு ஆன டேங்க்ல பெட்ரோல் விழுற சத்தமே கேக்கல, என்னடா சத்தமே கேக்கலையேனு அந்த பையன்கிட்ட கொஞ்சம் அந்த பைப்ப மேல தூக்கி போடுங்கனு சொன்னேன், அவரு சொன்னாரு மேல தூக்குனா பெட்ரோல் ஆவியாயிடும்னு சொன்னாரு, இந்த விஷயம் எங்களுக்கும் தெரியும் தூக்குங்கனு அந்த பைப்ப மேல தூக்கி பாத்தா அந்த பைப்ல இருந்து பெட்ரோல் ஒரு துளி கூட வரல ”வெறும் காத்துதேன் வருது” ஆனால் பெட்ரோல் மீட்டர் ஓடிட்டே இருக்கு, வந்திச்சு பாருங்க வெறி அவன் சட்டைய பிடிச்சுகிட்டு நான் போட்ட சத்தத்துல அங்க ஒரு பெரிய கூட்டமே கூடிடுச்சு, எனக்கு முன்னாடி பெட்ரோல் போட்ட ஒரு 5,6 பேரு அவங்களும் டேங்க் தொறந்து பாத்தா அவங்களுக்கும் இதேதான் பண்ணிருக்கான், அப்புறம் என்ன அங்க உள்ள கேஷியருக்கு தர்ம அடி கெடச்சது,அங்க இருந்த ஒருத்தர் போலீஸ்கிட்ட போவோம்னு சொல்லிட்டுருந்தாரு ஆனால் எனக்கு அவசர வேலை இருந்ததால நான் அந்த இடத்துல இருந்து கெளம்பிட்டேன், அத பார்த்ததுல இருந்து மனசுக்குள்ள வடிவேல் டயலாக் கேட்டுகிட்டே இருக்கு,”எப்புடியெல்லாம் டெவலப் ஆயி போயிகிட்டு இருக்கானுங்க பாருய்ய இவனுங்க.”
நீங்க இனிமேல் அந்த பைப்ப மேல தூக்கி பிடிச்சு பெட்ரோல் போட சொல்லுங்க, 100 மிலி ஆவியாகுதுனு நாம பாத்தா அவனுங்க பெட்ரோலே போடாம காசு புடுங்குறானுங்க, உங்களுக்கு தெரிஞ்ச வேற பெட்ரோல் திருட்டு வழிமுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க, எல்லாருக்கும் தெரியட்டும்.
நீங்க இனிமேல் அந்த பைப்ப மேல தூக்கி பிடிச்சு பெட்ரோல் போட சொல்லுங்க, 100 மிலி ஆவியாகுதுனு நாம பாத்தா அவனுங்க பெட்ரோலே போடாம காசு புடுங்குறானுங்க, உங்களுக்கு தெரிஞ்ச வேற பெட்ரோல் திருட்டு வழிமுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க, எல்லாருக்கும் தெரியட்டும்.
நாட்டில இப்படியுமா நடக்குது ??? என்னக் கொடுமை இது !
ReplyDelete**********************************
வலைப்பதிவர்களே கொஞ்சம் கவனியுங்க ? ரொம்ப அவசரம்
பெட்ரோல் போடா உகந்த நேரம் காலை10 மணிக்கு முன் ,மாலை 5 க்கு பின்னர் நல்லது. டெஸ்ட் செய்து பார்த்தேன் சரியாக உள்ளது. மற்ற நேரங்களில் ஆவி ஆகிறது. நீங்களும் செக் செய்து பாருங்களேன் .
ReplyDelete@வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இக்பால் செல்வன்
ReplyDeleteஎனக்கு கூட ஒரு அனுபவம் இருக்கிறது..
ReplyDeleteஒரு முறை நான் என்னுடைய பைக்கிற்கு பெட்ரோல் போட சென்றேன். அப்போது அவரிடம் 200 ரூபாய் கொடுத்து பெட்ரோல் போடச் சொன்னேன். அப்போது ஏற்கனவே 50 ருபாய்க்கு யாருக்கோ போட்டு விட்டு அங்கிருந்து 200 ரூபாய்க்கு போட்டு விட்டு சரி என்றார். நான் கவனித்ததால் சண்டையிட்டு மீன்டும் 50 ரூபாய்க்கு போட்டார்கள்..
மீட்டர் 0-ல் இருக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும்..
நலல் விழிப்புணர்வு பதிவு...
ReplyDeleteநன்றி..
//அங்க இருந்த ஒருத்தர் போலீஸ்கிட்ட போவோம்னு சொல்லிட்டுருந்தாரு ஆனால் எனக்கு அவசர வேலை இருந்ததால நான் அந்த இடத்துல இருந்து கெளம்பிட்டேன்,//
ReplyDeleteஎப்பூடி
@கவிதை வீதி சௌந்தர்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
ReplyDelete@சேக்காளி ஷ்ஷ்ஷ்... பப்ளிக் பப்ளிக்....
ReplyDelete//அங்க இருந்த ஒருத்தர் போலீஸ்கிட்ட போவோம்னு சொல்லிட்டுருந்தாரு ஆனால் எனக்கு அவசர வேலை இருந்ததால நான் அந்த இடத்துல இருந்து கெளம்பிட்டேன்,//
ReplyDeleteஇதுக்கு பேர்தான் Great escape மச்சி
நல்ல தகவல்...
ReplyDeleteநன்றி ஷீ நிசி
ReplyDeleteஇப்படி உசுபேத்தி, உசுபெத்தியே உடம்ப ரனகளம் ஆக்கிடாங்களே
ReplyDeleteஅட பாவிகளா....
ReplyDeleteகொள்ளையடிக்க புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா...
தகவலுக்கு நன்றி.
200 ரூபாய்க்கு போட்டால் 75 கி.மீ க்குத்தான் ஓடுகிறது. ஆனால் 50 ரூபாய்க்கு போட்டால் 23 கி.மீ க்கு ஓடுகிறது (ஆயிலோடு) கணக்கு பண்ணினால் 200 க்கு 105 கி.மீ ஓட வேண்டும். 1) நமக்கு முன்னால் 50 ரூபாய்க்கு போடுகிறதற்கு ஓடிய மீட்டரை நம் கணக்கில் காட்டுகிறார்கள். நம் கவனத்தை திசை திருப்ப 200 க்கு போறுமா 200 க்கு போறுமா என்று திரும்பத் திரும்பக் கேட்டு நம்மை மீட்டரை பார்க்க விடாமல் செய்வார்கள். (அவர்கள் ஆட்களே நின்று வாங்குகிறார்களோ எனவும் ஒரு சந்தேகம் உள்ளது). 2) வேகமாக ஃபில் பண்ணும்போது காற்றும் சேர்ந்து கணக்கில் ஏறுகிறதோ டவுட்.
ReplyDeleteடிவிட்டர் குருவி பறக்குதே அதை எப்படி ப்ளாக்குக்கு கொண்டு வருவது. asokanvvr@gmail.com க்கு எழுதுங்களேன். நன்றியுடன் ashokha.com
ReplyDelete