Showing posts with label உணர்வுகள். Show all posts
Showing posts with label உணர்வுகள். Show all posts

Thursday, August 11, 2011

உஷார்-இது வாழ்க்கை பிரச்சனை


      இது ஒரு விழிப்புணர்வு பதிவு.. எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் இருக்கிறது கொஞ்சம் வசதி குறைவான குடும்பமாக இருந்தாலும் மிக நல்ல குடும்பம் அவர்களுக்கு இரண்டு பெண் ஒரு பையன், முதல் பெண்ணிற்கு சுமாரான வசதி படைத்த ஒரு நல்ல இடத்தில் மணம் முடித்தனர், இந்த இரண்டாவது பெண் +2 படித்தவர் பார்ப்பதற்கு நல்ல அழகாக இருப்பார், மிக பணிவானவரும் கூட. அவருக்கு வரன் தேடிக்கொண்டிருந்தனர். அப்போது முன்பின் தெரியாத மிகவும் வசதியான குடும்பம் ஒன்று தரகர் மூலம் இவர்களை நெருங்கியது, இவர்களும் வசதி இருக்கிறதே என்று அக்கம் பக்கம் விசாரிக்காமல் வரனை முடித்துவிட்டனர்.

     திருமணமும் முடிந்து விட்டது, மாப்பிள்ளை மணமேடைக்கு வந்தபோதே காலை தாங்கி தாங்கி நடந்து வந்தார், எப்பொழுதும் ஷூ அணிந்தே இருந்தார்.பெண் வீட்டார் என்ன என்று கேட்டதற்கு காலில் சிறு விபத்தில் காயம் என்று மழுப்பி விட்டார்கள் மாப்பிள்ளை வீட்டார். திருமணம் முடிந்து ஒரு 3 நாட்களுக்கு பிறகுதான் மாப்பிள்ளைக்கு சர்க்கரை நோய் இருப்பதும் அவர் காலில் ஏற்பட்ட புண் சர்க்கரை நோயினால் புரையோடிப்போய் அவரால் சரிவர நடக்க இயலாமல் போனதும் தெரிய வந்துள்ளது.இதை அவர் திருமணத்திற்கு முன்பே பெண்வீட்டாரிடம் கூறிவிடலாம் என கூறிய போது அவர் தாய் வேண்டாமென தடுத்துவிட்டாராம், இந்த விஷயம் கேட்ட அந்த பெண் மிகவும் மனமுடைந்து போய்விட்டார். பின் அவர் சொந்தங்கள் எல்லாம் ஆறுதல்(?)அறிவுரை கூறி தேற்றியதால் தனக்கு கிடைத்தது இதுதான் என புது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்திருக்கிறார்.ஆனால் அந்த மகிழ்ச்சி வெகுநாட்கள் நீடிக்கவில்லை.

     இப்பெண்ணின் கணவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் அவர் இப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவுகள் தர ஆரம்பித்து இருக்கிறார், கணவனிடம் கூறினால் தன்னை தவறாக நினைத்து விடுவாறோ என பயந்து தனக்குள்ளேயே புழுங்கியிருக்கிறார், ஒரு கட்டத்தில் அவர் எல்லை மீறவே தன் பெற்றோரிடம் கூறிவிட்டு அங்கு தங்க மாட்டேன் என அழுதுள்ளார் அவர்கள் நாசூக்காக தங்கள் மருமகனிடம் எடுத்து கூறி பிரச்சனையை சரி செய்துள்ளனர், இது முடிந்த ஓரிரு மாதங்களிலேயே அந்த அண்ணன் புற்றுநோயால் இறந்துவிட்டார்.

     இதற்கு பிறகுதான் உச்சகட்ட கொடுமை அரங்கேறியுள்ளது. திருமணமாகி 5 மாதங்களாகியும் இந்த பெண் கருவுறாததால் அவரை ஒரு மாந்திரிகனிடம் அழைத்து சென்று பரிகாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் அவரின் மாமியார். சாமியார் தனது சித்து வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார், அடுத்த வாரம் நிர்வாண பூஜை செய்ய வேண்டுமென மாமியாரிடம் கூறியிருக்கிறார் அந்த மாந்திரிகன்.மாமியாரும் அடுத்த வாரத்தில் தன் மகனிடம் சாதாரண பூஜை என்று கூறிவிட்டு இப்பெண்ணை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்றிருக்கிறார், இவர் நடுவழியில் அந்த மாமியாரை ஏமாற்றிவிட்டு திக்கு திசையில்லாமல் அழுதுகொண்டே பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறார். பின் இரு கல்லூரி மாணவிகளின் உதவியோடு வீடு வந்து சேர்ந்துவிட்டார்.  

     ஆனால் தவறான ஒரு இடத்தில் மாட்டிக்கொண்ட அவரின வாழ்க்கை கேள்விக்குறியாகவே உள்ளது, இவரின் கணவர் இவரோடு வருவதற்கு தயாரக இருந்தாலும் அவரின் தாயாருக்கு அஞ்சி இவரை பிரிந்து இருக்கிறார்.தங்களின் பெண் வாழ்க்கையை வசதிக்காக வீணடித்துவிட்டோமே என்று நொந்து போய் உள்ளனர் அப்பெண்ணின் பெற்றோர்.

     எனவே முன்பின் தெரியாதவர்களிடம் திருமணம் முடிவு செய்யும்பொழுது அவர்களை பற்றி அக்கம் பக்கம் நன்கு விசாரிக்கவும், அதை விடுத்து கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்த பலனும் இல்லை..

பதிவு பலரை சென்றடைய ஓட்டுக்களை தயங்காமல் அளியுங்கள்...


Sunday, June 5, 2011

மனம் சுருங்கிய மனிதர்கள்!!!




இது என்னுடைய அனுபவத்தில் உண்ர்ந்ததை எழுதும் ஒரு பதிவு, அதாவது நேற்று பேருந்தில் படியில் பயணம் செய்துகொண்டிருந்தேன் ஒரு நிறுத்தத்தில் ஒரு காலை இழந்த ஒரு ஆண் ஏறினார், அவருக்கு யாராவது இடம் கொடுப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்தாரோ இல்லையோ நான் எதிர்பார்த்தேன், ஆனால் அவர் ஏறி இரண்டு நிறுத்த்ங்களைக் கடந்தும் யாரும் எழுந்து தனது இருக்கையை தர முன்வரவில்லை, இப்பொழுது பேருந்தில் மேலும் பலர் ஏறிக்கொள்ள கூட்ட நெரிசலில் அவரால் நிற்கவே முடியவில்லை, என்னால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை எனது நண்பனை எழுந்துகொள்ள சொல்லிவிட்டு அந்த இடத்தை அவருக்கு கொடுக்க சொல்லலாம் என எண்ணி அவனை எழுந்துகொள்ள சொன்னேன். அவன் எழுந்து அந்த இருக்கை காலியானதும் அவர் அங்கு வருவதற்குள் இரண்டு பொதுஜனங்கள் முட்டிமோதிக் கொண்டு அந்த இருக்கையில் ஒரு பொதுஜனம் அமர்ந்துவிட்டது, அந்த பொதுஜனத்திடம் போய் அந்த இருக்கையை அவருக்கு கொடுஙகள் என்றால் அவர் சண்டைக்கு வந்துவிட்டார், இதைப்பார்த்த அந்த ஊனமுற்ற நண்பர் மனம் நொந்து தனக்கு இருக்கையே வேண்டாம் என்று கூறிவிட்டார். பிறகு இதைப்பற்றி நடத்துனரிடம் கூறி ஊனமுற்றோர் இருக்கையை அவருக்காக காலி செய்து தந்தோம் நானும் என் நண்பனும்…


 


 

இதை வீட்டிற்கு வந்து நினைத்துப் பார்க்கையில் என் மனம் மிகவும் வருந்தியது, முன்பெல்லாம் பெருநகரங்களில் மட்டுமே நான் கேள்விப்பட்ட இந்த குறுகிய மனப்பான்மை மற்றும் சுயநலம் ஆகிய இரு குணங்களை நான் வசிக்கும் கிராமத்தில் கண்டதை கிரகித்துக்கொள்ள என்னால் இயலவில்லை..


 

இதைப் படிப்பவர்களில் பலர் நினைக்கலாம் இவன் மட்டும் ஒழுங்கா என்று, நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள், நான் எப்படி என்று எனக்கு தெரியும், இதைப் படிக்கும் பத்துபேர்களில் ஒருவர் இதன்பிறகு ஒரு ஊனமுற்ற நண்பருக்கு தன் இருக்கையை தந்தால் அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சி, முடிந்தால் இதை உங்கள் வலையிலும் மறுபதிவு செய்யுங்கள் இன்னொருவரும் மனம் மாறினால் நலம்…


 

நண்பர்களே குறுகிய மனப்பான்மையை அனைவரும் கைவிடவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம், யாரையும் குறிப்பிட்டோ காயப்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல

.

(பின்குறிப்பு:இது Microsoft office OneNote மூலம் எழுதப்பட்டு நேரடியாக அதிலிருந்தே பதிவிடப்பட்டது, நீங்களும் Onenote உபயோகித்து பாருங்கள்… யாருக்காவது தேவை என்றால் அதில் எப்படி பதிவிடுவது என்பதை விளக்குகிறேன், பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.)


Related Posts Plugin for WordPress, Blogger...